கியா செல்டோஸ் காரின் மைலேஜ் விபரங்கள் கசிந்தது... க்ரெட்டாவைவிட அதிகம்!

இந்த ஆண்டு அறிமுகமாகும் கார் மாடல்களில் அதிக முக்கியத்துவத்தை கியா செல்டோஸ் எஸ்யூவி கார் பெற்றிருக்கிறது. கடந்த மாதம் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்ட இந்த காருக்கு அண்மையில் முன்பதிவு துவங்கியது. முதல் நாளே 6,046 புக்கிங்குகளை பெற்று அசத்தியது.

கியா செல்டோஸ் காரின் மைலேஜ் விபரங்கள் கசிந்தது... க்ரெட்டாவைவிட அதிகம்!

அடுத்த மாதம் 22ந் தேதி விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், இந்த கார் குறித்த விபரங்களை அறிந்து கொள்வதில் வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை மனதில் வைத்து ஆட்டோமொபைல் இணையதளங்களும் அவ்வப்போது கிடைக்கும் தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகிறது. அந்த வகையில், கியா செல்டோஸ் காரின் மைலேஜ் விபரங்களை ஆட்டோகார் இந்தியா தளம் வெளியிட்டுள்ளது.

கியா செல்டோஸ் காரின் மைலேஜ் விபரங்கள் கசிந்தது... க்ரெட்டாவைவிட அதிகம்!

கியா செல்டோஸ் எஸ்யூவி கார் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் வர இருப்பது தெரிந்ததே. இந்த மூன்று எஞ்சின் தேர்வுகளிலுமே மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட இருக்கின்றன.

கியா செல்டோஸ் காரின் மைலேஜ் விபரங்கள் கசிந்தது... க்ரெட்டாவைவிட அதிகம்!

புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி காரில் வழங்கப்பட இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலின் மேனுவல்்கியர்பாக்ஸ் மாடலானது லிட்டருக்கு 16.4 கிமீ மைலேஜையும், சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 16.3 கிமீ மைலேஜையும் வழங்கும். அதாவது, மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களுக்கு இடையில் மிக சிறிய வித்தியாசம்தான் உள்ளது.

கியா செல்டோஸ் காரின் மைலேஜ் விபரங்கள் கசிந்தது... க்ரெட்டாவைவிட அதிகம்!

கியா செல்டோஸ் காரின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்ட மாடல் லிட்டருக்கு 20.8 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 17.8 கிமீ மைலேஜையும் வழங்கும்.

கியா செல்டோஸ் காரின் மைலேஜ் விபரங்கள் கசிந்தது... க்ரெட்டாவைவிட அதிகம்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

கியா செல்டோஸ் காரின் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்ட மாடல் லிட்டருக்கு 16.1 கிமீ மைலேஜையும், டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலானது லிட்டருக்கு 16.2 கிமீ மைலேஜையும் வழங்கும். அதாவது, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் சற்றே கூடுதலாக மைலேஜை வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது.

கியா செல்டோஸ் காரின் மைலேஜ் விபரங்கள் கசிந்தது... க்ரெட்டாவைவிட அதிகம்!

அதேவேளை, கியா செல்டோஸ் காரின் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா காரின் பெட்ரோல், டீசல் எஞ்சின்களை ஒப்பிடும்போது சற்று கூடுதலாக இருப்பது கவனிக்கத்தக்க விஷயம். ஹூண்டாய் க்ரெட்டா பெட்ரோல் எஞ்சின் கொண்ட மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல்கள் லிட்டருக்கு 15.29 கிமீ மைலேஜை வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

கியா செல்டோஸ் காரின் மைலேஜ் விபரங்கள் கசிந்தது... க்ரெட்டாவைவிட அதிகம்!

ஹூண்டாய் க்ரெட்டா காரின் டீசல் எஞ்சினுடன் மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்ட மாடல் லிட்டருக்கு 19.67 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 17.01 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

கியா செல்டோஸ் காரின் மைலேஜ் விபரங்கள் கசிந்தது... க்ரெட்டாவைவிட அதிகம்!

அதேநேரத்தில், கியா செல்டோஸ் காரைவிட ஹூண்டாய் க்ரெட்டா எஞ்சின் தேர்வுகள் சற்று கூடுதல் செயல்திறன் கொண்டதாக இருக்கின்றன. கியா செல்டோஸ் காரின் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக வருவதால், செயல்திறனில் சற்று குறைவாக இருந்தாலும், அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்க வல்லதாக இருக்கிறது.

கியா செல்டோஸ் காரின் மைலேஜ் விபரங்கள் கசிந்தது... க்ரெட்டாவைவிட அதிகம்!

புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி காரில் ஏராளமான தொழில்நுட்ப மற்றும் சிறப்பு வசதிகளுடன் வருகிறது. எலெக்ட்ரிக் சன்ரூஃப், லெதர் இருக்கைகள், 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏர் பியூரிஃபயர் சிஸ்டம்,, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், கீ லெஸ் என்ட்ரி, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் மற்றும வைப்பர்கள் என பட்டியல் நீள்கிறது.

கியா செல்டோஸ் காரின் மைலேஜ் விபரங்கள் கசிந்தது... க்ரெட்டாவைவிட அதிகம்!

எல்இடி ஹெட்லைட்டுகள், புலிமூக்கு க்ரில் அமைப்பு, எல்இடி டெயில் லைட்டுகள், 8 ஸ்பீக்கர்களுடன் போஸ் பிரிமீயம் சவுண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற இருக்கின்றன. பாதுகாப்பு அம்சங்களிலும் நிறைவான கார் மாடலாக வர இருக்கிறது.

கியா செல்டோஸ் காரின் மைலேஜ் விபரங்கள் கசிந்தது... க்ரெட்டாவைவிட அதிகம்!

ரூ.10 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் க்ரெட்டா, நிஸான் கிக்ஸ், ரெனோ டஸ்ட்டர், டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர் ஆகிய எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
English summary
Kia Seltos mileage figures revealed by online news portal. Check out the details in Tamil.
Story first published: Saturday, July 20, 2019, 11:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X