புதிய கியா எஸ்யூவியின் நாமகரணம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

புதிய கியா எஸ்யூவியின் பெயர் மற்றும் ஸ்கெட்ச் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விபரங்களையும், படங்களையும் காணலாம்.

புதிய கியா எஸ்யூவியின் நாமகரணம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

ஹூண்டாய் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய எஸ்யூவி மாடலுடன் இந்தியாவில் களமிறங்க உள்ளது. வரும் 20ந் தேதி கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி மாடலின் அறிமுக விழா நடைபெற இருக்கிறது.

புதிய கியா எஸ்யூவியின் நாமகரணம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

இந்த நிலையில், இந்த புதிய எஸ்யூவி மாடல் இந்திய வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை கியா எஸ்பி என்ற பெயரில் குறிப்பிடப்பட்டு வந்த கான்செப்ட் மாடல் தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.

புதிய கியா எஸ்யூவியின் நாமகரணம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

இந்த புதிய மாடலுக்கு செல்டோஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், செல்டோஸ் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடலின் ஸ்கெட்ச் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

புதிய கியா எஸ்யூவியின் நாமகரணம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

கடந்த 2018ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த கியா எஸ்பி கான்செப்ட் எஸ்யூவி மாடலின் பெரும்பான்மையான டிசைன் தாத்பரியங்கள் அப்படியே கையாளப்பட்டுள்ளன. எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் டெயில் லைட்டுகள் இடம்பெற்றிருப்பது தெரிகிறது. முகப்பில் புலி மூக்கு தோற்றத்திலான க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய கியா எஸ்யூவியின் நாமகரணம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

உட்புறமும் மிக பிரிமீயமாக இருக்கும். இந்த எஸ்யூவியில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே செயலிகளையும், நேவிகேஷன் வசதியையும் அளிக்கும்.

புதிய கியா எஸ்யூவியின் நாமகரணம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, ஸ்டீயரிங் வீலில் பேடில் ஷிஃப்டர்கள், மூட் லைட் சிஸ்டம் ஆகியவை இந்த எஸ்யூவியின் பிரிமீயம் அம்சங்களுக்கு அத்தாட்சியான விஷயமாக இருக்கும்.

MOST READ: மேஜிக் டெக்னாலஜி உடன் மாருதி சுஸுகி பலேனோ கார்... என்னவென்று தெரியுமா?

புதிய கியா எஸ்யூவியின் நாமகரணம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

புதிய கியா செல்டோஸ் எஸ்யூவியில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல்் எஞ்சின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். இந்த எஞ்சின்கள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும்.

புதிய கியா எஸ்யூவியின் நாமகரணம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

புதிய கியா செல்டோஸ் காார் ரூ.9 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் க்ரெட்டா, ரெனோ கேப்ச்சர், எம்ஜி ஹெக்டர், ஜீப் காம்பஸ், நிஸான் கிக்ஸ் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
South Korean car maker, Kia Motors has officially confirmed Seltos as the name of their all new SUV for India.
Story first published: Tuesday, June 4, 2019, 10:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X