புதிய கியா செல்டோஸ் காரின் அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியீடு!

வரும் 22ந் தேதி புத்தம் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த நிலையில், இந்த காரின் தொழில்நுட்பம் மற்றும் இதர முக்கிய விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய கியா செல்டோஸ் காரின் அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியீடு!

க்ரெட்டாவைவிட கொஞ்சம் பெருசு

கியா செல்டோஸ் கார் 4,315 மிமீ நீளமும், 1,800 மிமீ அகலமும், 1620 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டா காரைவிட இந்த கார் சற்று அளவில் பெரியதாக இருக்கிறது. இந்த காரின் வீல்பேஸ் 2,610 மிமீ ஆக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 433 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது.

புதிய கியா செல்டோஸ் காரின் அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியீடு!

எல்இடி ஹெட்லைட்டுகள்

புதிய கியா செல்டோஸ் காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், டெயில்லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காரின் பேஸ் வேரியண்ட்டில் 16 அங்குல ஸ்டீல் சக்கரங்களும், நடுத்தர வேரியண்ட்டுகளில் 16 அங்குல அலாய் வீல்களும், டாப் வேரியண்ட்டில் 17 அங்குல அலாய் வீல்கள் வழங்கப்படும். ஷார்க் ஃபின் ஆன்டெனா அனைத்து வேரியண்ட்டுகளிலும் இடம்பெறுகிறது.

புதிய கியா செல்டோஸ் காரின் அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியீடு!

இரண்டு மாடல்கள்

புதிய கியா செல்டோஸ் கார் எச்டி லைன் மற்றும் ஜிடி லைன் என்ற இரண்டு மாடல்களில் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் டெக்லைன் என்ற பெயரிலும், ஜிடி லைன் மாடலில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினும் வழங்கப்படும். ஜிடி மாடலில் முன்புற மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்டுகளில் சிவப்பு வண்ண அலங்காரமும், சிவப்பு வண்ண பிரேக் காலிபர்களும் கொடுக்கப்பட இருக்கின்றன. இது தனித்துவப்படுத்தும். இந்த இரண்டு மாடல்களும் வசதிகளை பொறுத்து பsல்வேறு வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

புதிய கியா செல்டோஸ் காரின் அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியீடு!

சாதாரண பெட்ரோல் எஞ்சின்

இந்த காரில் இடம்பெறும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்பட இருக்கிறது. இந்த மாடல் 0 - 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 11.8 வினாடிகள் எடுத்துக் கொள்ளும்.

புதிய கியா செல்டோஸ் காரின் அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியீடு!

டீசல் எஞ்சின்

புதிய கியா செல்டோஸ் காரில் இடம்பெறும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அ்திகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். இந்த மாடல் 0 -100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 11.5 வினாடிகள் எடுக்கும்.

புதிய கியா செல்டோஸ் காரின் அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியீடு!

டர்போ பெட்ரோல் எஞ்சின்

புதிய கியா செல்டோஸ் காரின் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎஸ் பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும். இந்த மாடலானது 0 - 100 கிமீ வேகத்தை 9.7 வினாடிகளிலேயே எட்டிவிடும்.

புதிய கியா செல்டோஸ் காரின் அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியீடு!

மைலேஜ்

கியா செல்டோஸ் காரின் 1.5 லிட்டர் பெட்ரோல் மேனுவல் மாடல் 16.1 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் 16.5 கிமீ மேலேஜையும் வழங்கும். மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட டீசல் மாடல் 16.5 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் 16.8 கிமீ மைலேஜையும் வழங்கும். 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் 21.0 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் 18 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கியா செல்டோஸ் காரின் அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியீடு!

முக்கிய அம்சங்கள்

புதிய கியா செல்டோஸ் காரில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட இருக்கிறது. அத்துடன், 7 அங்குல மல்டி இன்ஃபர்மேஷன் திரையும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் இடம்பெற்றுள்ளது. இந்த காரில் 8.0 அங்குல ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 400 வாட் போஸ் ஆடியோ சிஸ்டம், எல்இடி ஆம்பியன்ட் சவுண்ட் மூட் லைட் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. யுவோ செயலி மூலமாக ரிமோட் முறையில் பல்வேறு விஷயங்களை கட்டுப்படுத்தவும், தகவல்களை பெறுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது.

புதிய கியா செல்டோஸ் காரின் அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியீடு!

டாப் வேரியண்ட்

டாப் வேரியண்ட்டுகளில் தேன்கூடு வடிவ டிசைனிலான லெதர் இருக்கைகள், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, 8 வே அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் இருக்கை, பின்புற இருக்கைகளை 32 டிகிரி வரையிலான கோணத்தில் சாய்த்துக் கொள்ளும் வசதிகள் உள்ளன. இந்த காரின் பின் இருக்கைகளை 60:40 என்ற விகிதத்தில் மடக்க முடியும்.

புதிய கியா செல்டோஸ் காரின் அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியீடு!

பாதுகாப்பு வசதிகள்

புதிய கியா செல்டோஸ் காரில் 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், 3 லெவல் டிராக்ஷன் கன்ட்ரோல், 360 டிகிரி பார்க்கிங் கேமரா, இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜமென்ட் சிஸ்டம் மற்றும் பார்க்கிங் சென்சார்கள் கொடுக்கப்பட இருக்கின்றன.

புதிய கியா செல்டோஸ் காரின் அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியீடு!

முன்பதிவு விறுவிறு

புதிய கியா செல்டோஸ் காருக்கு ஏற்கனவே முன்பதிவு துவங்கி நடந்து வருகிறது. விலை அறிவிப்புக்கு முன்னரே முன்பதிவு மிக கணிசமான அளவில் இருந்து வருகிறது. ரூ.10 லட்சம் முதல் ரூ.16 லட்சம் இடையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கியா செல்டோஸ் காரின் அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியீடு!

மீடியா டிரைவில் டிரைவ்ஸ்பார்க்

இன்றும் நாளையும் கோவாவில் நடைபெறும் மீடியா டிரைவ் நிகழ்ச்சியில் கியா செல்டோஸ் காரை டெஸ்ட் டிரைவ் செய்து வருகிறோம். இந்த காரின் சாதக, பாதகங்கள் அடங்கிய டெஸ்ட் டிரைவ் கட்டுரையை விரைவில் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் பகிர்ந்து கொள்கிறோம்.

Most Read Articles
English summary
Kia Motors revealed a key technical details and features of the India specific Seltos car for the first time.
Story first published: Tuesday, August 6, 2019, 15:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X