இது நியாயமா... செல்டோஸ் புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கியா!

கியா செல்டோஸ் காரை முன்பதிவு செய்து ஆசையோடு காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியான செய்தி வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

இது நியாயமா... செல்டோஸ் புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கியா!

கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கியா செல்டோஸ் கார் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. முன்பதிவும் 60,000ஐ கடந்துள்ளது. அட்டகாசமான டிசைன், ஆர்ப்பரிக்கும் தொழில்நுட்ப அம்சங்களுடன் ரூ.9.69 லட்சம் என்ற ஆரம்ப விலையில் வந்ததால், எதிர்பாராத வரவேற்பை பெற்றுள்ளது.

இது நியாயமா... செல்டோஸ் புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கியா!

இந்த நிலையில், செல்டோஸ் காரை முன்பதிவு செய்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி கியா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து வந்துள்ளது. அதாவது, அந்த நிறுவனம் டீலர்களுக்கு அனுப்பி இருக்கும் சுற்றறிக்கைதான் இப்போது முன்பதிவு செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

இது நியாயமா... செல்டோஸ் புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கியா!

வரும் ஜனவரி 1 முதல் செல்டோஸ் காரின் விலையை உயர்த்த கியா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. இது வழக்கமான நடைமுறைதான். எந்த புதிய கார் அறிமுகம் செய்யப்பட்டாலும், குறிப்பிட்ட மாதங்களில் விலையை ஏற்றுவது சாதாரண விஷயம்தான்.

இது நியாயமா... செல்டோஸ் புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கியா!

ஆனால், கியா மோட்டார்ஸ் குறிப்பிட்டுள்ள விஷயம்தான் இப்போது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, வரும் டிசம்பர் 31ந் தேதி வரை டெலிவிரி கொடுக்கப்படும் கார்களுக்கு மட்டுமே தற்போதைய விலை பொருந்துமாம்.

இது நியாயமா... செல்டோஸ் புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கியா!

ஜனவரி 1 முதல் டெலிலிரி கொடுக்கப்படும் செல்டோஸ் கார்கள் புதிய விலையின் அடிப்படையில்தான் டெலிவிரி கொடுக்கப்பட உள்ளதாம். இதுதொடர்பாக, வாடிக்கையாளர்களுக்கு உரிய முறையில் விளக்கம் அளிக்குமாறு டீலர்களில் உள்ள விற்பனை பிரதிநிதிகளை கியா மோட்டார்ஸ் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது நியாயமா... செல்டோஸ் புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கியா!

இதுவரை முன்பதிவு செய்தவர்களுக்கு பழைய விலையே பொருந்தும் என்று தெரிவித்திருந்தால் பரவாயில்லை. ஆனால், வரும் டிசம்பர் மாதம் மட்டுமே பழைய விலை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதால், பல வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

MOST READ: காசை கரி ஆக்காதீங்க... பல லட்சம் கொட்டி கொடுத்து கார் வாங்குவதை விட பைக்தான் பெஸ்ட்... ஏன் தெரியுமா?

இது நியாயமா... செல்டோஸ் புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கியா!

விலை எவ்வளவு அதிகரிக்கப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று கியா மோட்டார்ஸ் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை ஏற்றம் என்பது சற்றே கூடுதலாக இருந்தால் பரவாயில்லை. ஆனால், வேரியண்ட்டுக்கு தக்கவாறு ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை அதிகரிக்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

MOST READ: போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு பைக்கில் நைசாக எஸ்கேப் ஆன இளைஞர்... காத்திருந்த பெரிய ஷாக்...

இது நியாயமா... செல்டோஸ் புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கியா!

இதனால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியிலும், அதிருப்தியிலும் உள்ளனர். குறைவாக விற்பனையாகும் வேரியண்ட்டுகளின் விற்பனையை அதிகரிக்க டீலர்களுக்கு கியா மோட்டார்ஸ் அறிவுறுத்தி உள்ளதாம், இந்த பணிகளிலும் டீலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

MOST READ: ஆளே இல்லாத கார் திடீரென பின்னோக்கி நகர்ந்த மர்மம் இதுதான்... வீடியோவை பார்த்து திடுக்கிட்ட மக்கள்...

இது நியாயமா... செல்டோஸ் புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கியா!

கியா செல்டோஸ் காரில் 140 பிஎச்பி பவரை அளிக்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 115 பிஎச்பி பவரை அளிக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 115 பிஎச்பி பவரை அளிக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அனைத்து எஞ்சின் தேர்வுகளிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் உள்ளன.

இது நியாயமா... செல்டோஸ் புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கியா!

கியா செல்டோஸ் கார் ஹூண்டாய் க்ரெட்டா, எம்ஜி ஹெக்டர், ரெனோ டஸ்ட்டர், டாடா ஹாரியர் உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக இருக்கிறது. புத்தாண்டு முதல் விலை ஏற்றம் என்பது கியா செல்டோஸ் கனவில் இருப்பவர்களுக்கு சற்று ஏமாற்றம் தரும் விஷயமாகவே இருக்கும்.

Most Read Articles

English summary
Kia Motors India launched the Seltos SUV in India back in August. The Kia Seltos SUV came with an introductory price starting at Rs 9.69 lakh, ex-showroom (Delhi). Starting from January 2020, the prices for the Kia Seltos is said to increase.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X