ஒரே ஒரு கார்... இந்தியாவின் 4வது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்த கியா... எப்படி தெரியுமா?

இந்தியாவின் 4வது மிகப்பெரிய கார் நிறுவனமாக கியா உருவெடுத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரே ஒரு கார்... இந்தியாவின் 4வது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்த கியா... எப்படி தெரியுமா?

கியா செல்டோஸ் எஸ்யூவி காரின் விற்பனை மீண்டும் ஒரு முறை அதிகரித்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் கியா செல்டோஸ் தனது அதிகபட்ச மாதாந்திர விற்பனையை பதிவு செய்துள்ளது. கியா செல்டோஸ் கார் கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் அதன் விற்பனை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து கொண்டே வருகிறது.

ஒரே ஒரு கார்... இந்தியாவின் 4வது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்த கியா... எப்படி தெரியுமா?

கடந்த ஆகஸ்ட் மாதம் 6,236 செல்டோஸ் கார்களை கியா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால் 4 மாதங்களுக்கு உள்ளாக அதன் விற்பனை இரு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் கியா நிறுவனம் 14,005 செல்டோஸ் கார்களை விற்பனை செய்து பிரம்மிக்க வைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் 4வது மிகப்பெரிய கார் நிறுவனம் என்ற பெருமையை கியா பெற்றுள்ளது.

ஒரே ஒரு கார்... இந்தியாவின் 4வது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்த கியா... எப்படி தெரியுமா?

இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களில் மாருதி சுஸுகி (1,39,000), ஹூண்டாய் (44,600) மற்றும் மஹிந்திரா (14,200) ஆகிய நிறுவனங்கள் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக 4வது மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக கியா உருவெடுத்துள்ளது. மிகவும் புகழ்பெற்ற கார் நிறுவனங்களான டாடா, ஹோண்டா, ஃபோர்டு, ரெனால்ட், டொயோட்டா, ஃபோக்ஸ்வேகன் ஆகிய நிறுவனங்களை எல்லாம் கியா பின்னுக்கு தள்ளி விட்டது.

ஒரே ஒரு கார்... இந்தியாவின் 4வது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்த கியா... எப்படி தெரியுமா?

மேற்கண்ட நிறுவனங்கள் அனைத்தும் ஏராளமான கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றன. ஆனால் கியா நிறுவனம் தற்போதைய நிலையில் செல்டோஸ் என்ற ஒரே ஒரு காரை மட்டும் விற்பனை செய்து கொண்டுள்ளது. அந்த ஒரே ஒரு காரை வைத்து கொண்டு இந்தியாவின் 4வது மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக கியா உருவெடுத்திருப்பது ஆச்சரியமான விஷயம்தான்.

ஒரே ஒரு கார்... இந்தியாவின் 4வது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்த கியா... எப்படி தெரியுமா?

கியா செல்டோஸ் காரின் அட்டகாசமான டிசைன் மற்றும் வசதிகள் வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. இதுவே அந்த காரின் பிரம்மாண்ட வெற்றிக்கு மிக முக்கியமான காரணம். கியா செல்டோஸ் காரில், 10.25 இன்ச் டச் ஸ்கீரின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 8 இன்ச் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

MOST READ: ஓசூரில் பிரம்மாண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை அமைக்கிறது ஏத்தர்!

ஒரே ஒரு கார்... இந்தியாவின் 4வது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்த கியா... எப்படி தெரியுமா?

இதன் டிரைவர் இருக்கையை 8 வழிகளில் மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். இது தவிர ஏர் பேக்குகள், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், பிளைண்ட் வியூ மானிட்டர், டயர் பிரஷர் மானிட்டர் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் கியா செல்டோஸ் காரில் இடம்பெற்றுள்ளன. செல்டோஸ்தான் இந்திய மார்க்கெட்டில் கியா நிறுவனம் அறிமுகம் செய்ய முதல் கார் என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ: சிறுவனை மகிழ்விக்கபோய் லைசென்ஸை இழந்த ஓட்டுநர்... என்ன செய்தார் என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்!!!

ஒரே ஒரு கார்... இந்தியாவின் 4வது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்த கியா... எப்படி தெரியுமா?

ஆந்திர பிரதேச மாநிலம் அனந்த்ப்பூரில் அமைக்கப்பட்டுள்ள கியா நிறுவனத்தின் தொழிற்சாலையில் செல்டோஸ் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர், ஹூண்டாய் கிரெட்டா உள்ளிட்ட கார்களுடன் கியா செல்டோஸ் போட்டியிட்டு வருகிறது. செல்டோசுக்கு அடுத்தபடியாக கார்னிவல் பிரீமியம் எம்பிவி காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய கியா திட்டமிட்டு வருகிறது.

MOST READ: பாலத்தில் இருந்து கார் கீழே விழுந்து பெண் பலி... விபத்திற்கு காரணமானவரை காப்பாற்ற முயலும் அமைச்சர்?

ஒரே ஒரு கார்... இந்தியாவின் 4வது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்த கியா... எப்படி தெரியுமா?

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள 2020 ஆட்டோ எக்ஸ்போவில் கியா கார்னிவல் கார் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா உள்ளிட்ட கார்களுடன் கியா கார்னிவல் போட்டியிடும். கியா கார்னிவல் தற்போதே வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலிவு விலை ட்ரைபர் வருகையால் நாட்டின் மிகப்பெரிய வாகன நிறுவனமான ரெனால்ட்.. சிறப்பு தகவல்..!

செல்டோஸ் என்ற ஒரே ஒரு காரின் மூலம் இந்தியாவின் 4வது மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக கியா உருவெடுத்துள்ளதை போல், ட்ரைபர் என்ற காரின் மூலமாக இந்தியாவின் 5வது மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக ரெனால்ட் உருவெடுத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

மலிவு விலை ட்ரைபர் வருகையால் நாட்டின் மிகப்பெரிய வாகன நிறுவனமான ரெனால்ட்.. சிறப்பு தகவல்..!

பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ரெனால்ட், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ட்ரைபர் என்ற புத்தம் புதிய எம்பிவி ரக காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த கார் அறிமுகமானதில் இருந்து ரெனால்ட் நிறுவனத்திற்கு ஜாக்பாட் அடித்ததைப் போன்ற புது யோகம் கிடைத்துள்ளது.

மலிவு விலை ட்ரைபர் வருகையால் நாட்டின் மிகப்பெரிய வாகன நிறுவனமான ரெனால்ட்.. சிறப்பு தகவல்..!

ஏனென்றால், ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்தவகையில், தனது சொந்த நிறுவன தயாரிப்புகளான க்விட், டஸ்டர் போன்ற மாடல்களை விற்பனையில் பின்னுக்குத் தள்ளி முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது. இந்த மாடல்கள் அனைத்தும் ட்ரைபர் அறிமுகமாவதற்கு முன்பு வரை அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக இருந்தன.

மலிவு விலை ட்ரைபர் வருகையால் நாட்டின் மிகப்பெரிய வாகன நிறுவனமான ரெனால்ட்.. சிறப்பு தகவல்..!

ஆனால், அந்த நிலை அப்படியே தலைகீழாகா மாறியுள்ளது. இதுமட்டுமின்றி, மேலும் ஓர் சிறப்பான இடத்தையும் ரெனால்ட் நிறுவனத்திற்கு ட்ரைபர் பெற்று தந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில், நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஐந்தாவது இடத்தை ரெனால்ட் நிறுவனத்திற்கு ட்ரைபர் பெற்று தந்துள்ளது.

மலிவு விலை ட்ரைபர் வருகையால் நாட்டின் மிகப்பெரிய வாகன நிறுவனமான ரெனால்ட்.. சிறப்பு தகவல்..!

கடந்த நவம்பர் மாத விற்பனை எண்ணிக்கையின் அடிப்படையிலேயே இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் ரெனால்ட் ட்ரைபர் மாடலின் 10,800 க்கும் அதிகமான யூனிட்டுகளுக்கு புக்கிங் குவிந்தது. இது கடந்த மாத விற்பனையைக் காட்டிலும் 76.1 சதவீதம் அதிகம் என கூறப்படுகின்றது. இந்த திடீர் உயர்விற்கு ட்ரைபர் மட்டுமின்றி க்விட் மாடலும் ஓர் காரணமாக உள்ளது.

மலிவு விலை ட்ரைபர் வருகையால் நாட்டின் மிகப்பெரிய வாகன நிறுவனமான ரெனால்ட்.. சிறப்பு தகவல்..!

ஆகையால், ரெனால்ட் நிறுவனத்தின் இந்த வெற்றி பயணத்திற்கு ட்ரைபர் மட்டுமில்லாமல் க்விட் காரும் தன் சார்பாக ஓர் முக்கிய பங்கினை அளித்துள்ளது. அதேசமயம், ரெனால்டின் மற்ற மாடல்களின் விற்பனையைப் பார்த்தோமேயானால், அவை தற்போது வரை மந்த நிலையையேச் சந்தித்து வருகின்றன. புதிய விற்பனை விகிதத்தால் டாடா மோட்டார்ஸ், டொயோட்டா, ஹோண்டா மற்றும் ஃபோர்டு ஆகிய நிறுவனங்களையே ரெனால்ட் பின்னுக்கு தள்ளியுள்ளது.

மலிவு விலை ட்ரைபர் வருகையால் நாட்டின் மிகப்பெரிய வாகன நிறுவனமான ரெனால்ட்.. சிறப்பு தகவல்..!

தற்போது, அதிகம் விற்பனையாகும் வாகனங்களில் மாருதி சுஸுகி, ஹூண்டாய், மஹிந்திரா மற்றும் கியா ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகள் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளன. இதில், ட்ரைபர் எம்பிவி அறிமுகத்தால் இந்நிறுவனங்களின் வரிசையில் ரெனால்டும் இணைந்துள்ளது. ட்ரைபர் மாடலின் இந்த வெற்றிக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இருப்பினும், அதன் மலிவு விலை மற்றும் சிறப்பு தொழில்நுட்ப வசதிகளே காரணியாக உள்ளது.

மலிவு விலை ட்ரைபர் வருகையால் நாட்டின் மிகப்பெரிய வாகன நிறுவனமான ரெனால்ட்.. சிறப்பு தகவல்..!

ரெனோ ட்ரைபர் காரின் விலையைப் பார்த்தோமேயானால், ஆரம்பநிலை வேரியண்டிற்கு ரூ. 4.95 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவே டாப் எண்ட் மாடலுக்கு ரூ. 6.49 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலையாகும். 7 இருக்கைகளைக் கொண்ட கார், இந்த விலையில் கிடைப்பது மிகப் பெரிய போட்டியைச் சந்தையில் ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாகவே, தற்போது ரெனால்ட் நிறுவனம் தனி சிறப்புப் பெற்றுள்ளது. ஏனென்றால், மற்ற நிறுவனத்தின் மூலம் விற்பனைக்கு வரும் இந்த தரத்திலான கார்கள் அதிக விலையைக் கொண்டதாக காட்சியளிக்கின்றன.

மலிவு விலை ட்ரைபர் வருகையால் நாட்டின் மிகப்பெரிய வாகன நிறுவனமான ரெனால்ட்.. சிறப்பு தகவல்..!

விலை மட்டுமின்றி மற்ற அம்சங்களிலும் முன்னணி நிறுவனங்களின் கார்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் இந்த கார் உள்ளது. அந்தவகையில், இந்த காரில் மிக முக்கிய அம்சமாக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் காணப்படுகின்றது. இதில் நேவிகேஷன், புஷ் டு டாக், வீடியோ பிளேபேக் வசதி (கார் நிற்கும்போது மட்டும் செயல்படும்), ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் காணப்படுகின்றன.

மலிவு விலை ட்ரைபர் வருகையால் நாட்டின் மிகப்பெரிய வாகன நிறுவனமான ரெனால்ட்.. சிறப்பு தகவல்..!

இத்துடன், ட்ரைபர் காரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கூல்டு க்ளவ் பாக்ஸ், இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளுக்கான தனி ஏசி வெண்ட்டுகள் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. அதேபோன்று, பாதுகாப்பிற்கான அம்சங்களும் ஏராளாமாக காணப்படுகின்றது.

மலிவு விலை ட்ரைபர் வருகையால் நாட்டின் மிகப்பெரிய வாகன நிறுவனமான ரெனால்ட்.. சிறப்பு தகவல்..!

அந்தவகையில், ட்ரைபரின் டாப் எண்ட் வேரியண்டில் 4 ஏர்பேக்குகளும், இதர வேரியண்ட்டுகளில் டியூவல் ஏர்பேக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி, சீட் பெல்ட் ரிமைன்டர், ஹை ஸ்பீடு அலர்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா (ஆப்ஷனல்) உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

மலிவு விலை ட்ரைபர் வருகையால் நாட்டின் மிகப்பெரிய வாகன நிறுவனமான ரெனால்ட்.. சிறப்பு தகவல்..!

பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும் ட்ரைபர் காரில் ஒன்று மட்டும் பெரிய குறையாகவே உள்ளது. அதாவது, 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே ட்ரைபர் கிடைப்பது, வாகன விரும்பிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மலிவு விலை ட்ரைபர் வருகையால் நாட்டின் மிகப்பெரிய வாகன நிறுவனமான ரெனால்ட்.. சிறப்பு தகவல்..!

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது, 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கின்றது. விரைவில் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

Tamil
English summary
Kia Seltos SUV November 2019 Sales. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more