Just In
- 4 hrs ago
வசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா..?
- 4 hrs ago
2020 ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு பிஎஸ்6 என்ஜினுடன் சோதனை ஓட்டம்...
- 5 hrs ago
இந்தியா முழுவதும் மிட்-நைட்டிலும் செயல்படவுள்ள ஃபோர்டு ஷோரூம்கள்... எதற்காக?
- 7 hrs ago
இந்தியாவில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... நம்ப முடியாத மிக குறைவான விலை... எவ்வளவு தெரியுமா?
Don't Miss!
- News
இந்திய நீதித்துறையில் முதல்முறை.... அலகாபாத் ஹைகோர்ட் நீதிபதி மீது சிபிஐ ஊழல் வழக்கு
- Movies
முரட்டுத்தனமான பேய்களை விரட்டுவதே வி .இஸட்.துரையின் இருட்டு
- Finance
827 பங்குகள் விலை ஏற்றம்..! 52 வார உச்ச விலை தொட்ட பங்குகள் விவரம்..!
- Sports
இறுதி வரை விரட்டி விரட்டி அடித்த கோலி .. இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
- Technology
டிசம்பர் 16: அட்டகாசமான விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Lifestyle
மராகேக் சர்வதேச திரைப்பட விழாவில் பேட்லா புடவை அணிந்து செக்ஸியாக வந்த பிரியங்கா சோப்ரா…!
- Education
JEE Main Exam: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒரே ஒரு கார்... இந்தியாவின் 4வது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்த கியா... எப்படி தெரியுமா?
இந்தியாவின் 4வது மிகப்பெரிய கார் நிறுவனமாக கியா உருவெடுத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கியா செல்டோஸ் எஸ்யூவி காரின் விற்பனை மீண்டும் ஒரு முறை அதிகரித்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் கியா செல்டோஸ் தனது அதிகபட்ச மாதாந்திர விற்பனையை பதிவு செய்துள்ளது. கியா செல்டோஸ் கார் கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் அதன் விற்பனை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து கொண்டே வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 6,236 செல்டோஸ் கார்களை கியா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால் 4 மாதங்களுக்கு உள்ளாக அதன் விற்பனை இரு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் கியா நிறுவனம் 14,005 செல்டோஸ் கார்களை விற்பனை செய்து பிரம்மிக்க வைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் 4வது மிகப்பெரிய கார் நிறுவனம் என்ற பெருமையை கியா பெற்றுள்ளது.

இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களில் மாருதி சுஸுகி (1,39,000), ஹூண்டாய் (44,600) மற்றும் மஹிந்திரா (14,200) ஆகிய நிறுவனங்கள் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக 4வது மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக கியா உருவெடுத்துள்ளது. மிகவும் புகழ்பெற்ற கார் நிறுவனங்களான டாடா, ஹோண்டா, ஃபோர்டு, ரெனால்ட், டொயோட்டா, ஃபோக்ஸ்வேகன் ஆகிய நிறுவனங்களை எல்லாம் கியா பின்னுக்கு தள்ளி விட்டது.

மேற்கண்ட நிறுவனங்கள் அனைத்தும் ஏராளமான கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றன. ஆனால் கியா நிறுவனம் தற்போதைய நிலையில் செல்டோஸ் என்ற ஒரே ஒரு காரை மட்டும் விற்பனை செய்து கொண்டுள்ளது. அந்த ஒரே ஒரு காரை வைத்து கொண்டு இந்தியாவின் 4வது மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக கியா உருவெடுத்திருப்பது ஆச்சரியமான விஷயம்தான்.

கியா செல்டோஸ் காரின் அட்டகாசமான டிசைன் மற்றும் வசதிகள் வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. இதுவே அந்த காரின் பிரம்மாண்ட வெற்றிக்கு மிக முக்கியமான காரணம். கியா செல்டோஸ் காரில், 10.25 இன்ச் டச் ஸ்கீரின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 8 இன்ச் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.
MOST READ: ஓசூரில் பிரம்மாண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை அமைக்கிறது ஏத்தர்!

இதன் டிரைவர் இருக்கையை 8 வழிகளில் மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். இது தவிர ஏர் பேக்குகள், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், பிளைண்ட் வியூ மானிட்டர், டயர் பிரஷர் மானிட்டர் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் கியா செல்டோஸ் காரில் இடம்பெற்றுள்ளன. செல்டோஸ்தான் இந்திய மார்க்கெட்டில் கியா நிறுவனம் அறிமுகம் செய்ய முதல் கார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர பிரதேச மாநிலம் அனந்த்ப்பூரில் அமைக்கப்பட்டுள்ள கியா நிறுவனத்தின் தொழிற்சாலையில் செல்டோஸ் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர், ஹூண்டாய் கிரெட்டா உள்ளிட்ட கார்களுடன் கியா செல்டோஸ் போட்டியிட்டு வருகிறது. செல்டோசுக்கு அடுத்தபடியாக கார்னிவல் பிரீமியம் எம்பிவி காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய கியா திட்டமிட்டு வருகிறது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள 2020 ஆட்டோ எக்ஸ்போவில் கியா கார்னிவல் கார் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா உள்ளிட்ட கார்களுடன் கியா கார்னிவல் போட்டியிடும். கியா கார்னிவல் தற்போதே வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.