புதிய கியா செல்டோஸ் காரின் முக்கிய அம்சங்கள்: ஒரு பார்வை!

இந்த ஆண்டின் அதிமுக்கிய புதிய கார் மாடலாக கியா செல்டோஸ் எஸ்யூவி மாறி இருக்கிறது. டிசைன், தொழில்நுட்ப அம்சங்கள், எஞ்சின் தேர்வுகள் மற்றும் விலை என அனைத்திலும் சிறப்பான தேர்வாக எதிர்பார்க்கப்படுவதால், வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலைத் தூண்டி இருக்கிறது. அடுத்த மாதம் 22ந் தேதி விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய காருக்கு முன்பதிவு துவங்கி சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. முதல் நாளிலேயே 6,046 முன்பதிவுகளை பெற்று அசரடித்தது.

புதிய கியா செல்டோஸ் காரின் முக்கிய அம்சங்கள்: ஒரு பார்வை!

ஹூண்டாய் க்ரெட்டா, ரெனோ டஸ்ட்டர், டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட மாடல்களுக்கு கடும் சவாலாக கருதப்படும் இந்த எஸ்யூவி காரில் ஏராளமான சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதில், தொழில்நுட்பரீதியிலான சிறப்பம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய கியா செல்டோஸ் காரின் முக்கிய அம்சங்கள்: ஒரு பார்வை!

பரிமாணம்

புதிய கியா செல்டோஸ் கார் 4,315 மிமீ நீளமும், 1,800 மிமீ அகலமும், 1,620 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. இந்த காரின் வீல் பேஸ் 2,610 மிமீ ஆக உள்ளது. 5.3 மீட்டர் டர்னிங் ரேடியஸ் கொண்டுள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியைவிட இந்த கார் உருவத்தில் பெரிய கார் மாடலாகவும், அதிக வீல் பேஸ் பெற்றிருக்கிறது. இதனால், நிச்சயம் சிறப்பான இடவசதியை அளிக்கும்.

புதிய கியா செல்டோஸ் காரின் முக்கிய அம்சங்கள்: ஒரு பார்வை!

இருக்கை வசதி

கியா செல்டோஸ் எஸ்யூவியில் 5 பேர் பயணிப்பதற்கான இடவசதி அளிக்கப்பட இருக்கிறது. பின் இருக்கையில் 3 பெரியவர்கள் வசதியாக அமர்ந்து பயணிப்பதற்கான வாய்ப்பை வழங்கும். சாய்மான வசதியையும் பெற்றுள்ளது. ஹெட்ரூம் மற்றும் லெக் ரூம் இடவசதியிலும் சிறப்பான மாடலாக வர இருக்கிறது.

புதிய கியா செல்டோஸ் காரின் முக்கிய அம்சங்கள்: ஒரு பார்வை!

பூட்ரூம் ஸ்பேஸ்

புதிய கியா செல்டோஸ் எஸ்யூவியில் 433 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி அளிக்கப்பட இருக்கிறது. பின் இருக்கைகளை 60: 40 விகிதத்தில் மடக்கும் வாய்ப்பும் உள்ளது. இதன்மூலமாக, பொருட்கள் வைப்பதற்கான இடவசதியை அதிகரித்துக் கொள்ள முடியும்.

புதிய கியா செல்டோஸ் காரின் முக்கிய அம்சங்கள்: ஒரு பார்வை!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

எஞ்சின் தேர்வுகள்

புதிய கியா செல்டோஸ் எஸ்யூவியில் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது. 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

புதிய கியா செல்டோஸ் காரின் முக்கிய அம்சங்கள்: ஒரு பார்வை!

கியர்பாக்ஸ் தேர்வுகள்

கியா செல்டோஸ் காரின் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலானது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலானது 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.

புதிய கியா செல்டோஸ் காரின் முக்கிய அம்சங்கள்: ஒரு பார்வை!

டாப் ஸ்பீடு

புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி கார் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர்ர டீசல் எஞ்சின் மாடல்கள் மணிக்கு 170 கிமீ வேகம் வரையிலும், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடலானது மணிக்கு 185 கிமீ வேகம் வரையிலும் செல்லும் திறனை பெற்றிருக்கும். அதேபோன்று, மூன்று எஞ்சின்களும் 0 - 100 கிமீ வேகத்தை 11 முதல் 13 வினாடிகளில் எட்டிவிடும்.

புதிய கியா செல்டோஸ் காரின் முக்கிய அம்சங்கள்: ஒரு பார்வை!

மைலேஜ்

புதிய கியா செல்டோஸ் காரின் 1.5 லிட்டர் பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 16.4 கிமீ மைலேஜையும், சிவிடி மாடல் லிட்டருக்ககு 16.3 கிமீ மைலேஜையும் வழங்கும். 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட மேனுவல் மாடல் லிட்டருக்கு 20.8 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 17.8 கிமீ மைலேஜையும் வழங்கும். 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் இணைக்கப்பட்ட மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 16.1 கிமீ மைலேஜையும், டிசிடி கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 16. 2 கிமீ மைலேஜையும் வழங்கும். இந்த காரில் 60 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன் கொடுக்கப்பட்டு இருக்கும். எனவே, நீண்ட தூர பயணங்களுக்கும், தினசரி பயன்பாட்டின்போது அடிக்கடி பெட்ரோல் நிலையம் செல்ல வேண்டிய அவசியத்தை தவிர்க்கும்.

புதிய கியா செல்டோஸ் காரின் முக்கிய அம்சங்கள்: ஒரு பார்வை!

கிரவுண்ட் கிளியரன்ஸ்

புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி காரின் பேஸ் வேரியண்ட்டில் 16 அங்குல சக்கரங்களும், டாப் வேரியண்ட்டில் 17 அங்குகல சக்கரங்களும் பயன்படுத்தப்படுகின்றது. இந்த காரின் 16 அங்குல சக்கரங்களுடன் 205/16 டயரும், 17 அங்குல சக்கரத்தில் 215/60 டயரும் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த கார் 190 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றுள்ளது. இந்திய சாலை நிலைகளுக்கு இது போதுமானதாக இருக்கும் என்று நம்பலாம்.

புதிய கியா செல்டோஸ் காரின் முக்கிய அம்சங்கள்: ஒரு பார்வை!

வண்ணத் தேர்வுகள்

புதிய கியா செல்டோஸ் கார் 12 விதமான வண்ணத் தேர்வுகளில் வர இருக்கிறது. இதில், சிவப்பு, ஆரஞ்ச், கிளேசியர் ஒயிட், கிளியர் ஒயிட், சாம்பல், சில்வர், நீலம் மற்றும் கருப்பு ஆகிய 8 ஒற்றை வண்ணங்களிலும், சிவப்பு - கருப்பு, வெள்ளை - கருப்பு, சில்வர் - கருப்பு, வெள்ளை- ஆரஞ்ச் ஆகிய 4 இரட்டை வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கும்.

புதிய கியா செல்டோஸ் காரின் முக்கிய அம்சங்கள்: ஒரு பார்வை!

விலை

புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி கார் ரூ.10 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. விலை அறிவிப்புக்கு முன்னரே முன்பதிவு சிறப்பாக இருந்து வருவதால், நிச்சயம் ஒரு ரவுண்டு வரும் என்று கருதப்படுகிறது.

Most Read Articles
English summary
Here are some of the top things to know about the upcoming Kia Seltos SUV.
Story first published: Monday, July 22, 2019, 17:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X