உயர்ரக எஸ்யூவி ஸ்டைலுக்கு மாறிய கியா செல்டோஸ்... உட்புற பகுதி எப்படியுள்ளது பாருங்கள்

தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான கியா மோட்டார்ஸின் முதல் வாகனமாக செல்டோஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகமானதில் இருந்து மிகப்பெரிய விற்பனை வளர்ச்சியை கண்டு வருகிறது. இதுவரை இந்த மாடல் கார் 35 நாட்களில் சுமார் 50,000 முன்பதிவுகள் என்ற மைல்கல்லை சமீபத்தில் அடைந்தது.

உயர்ரக எஸ்யூவி ஸ்டைலுக்கு மாறிய கியா செல்டோஸ்... உட்புற பகுதி எப்படியுள்ளது பாருங்கள்

பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் இந்த காரின் டிசைன் மற்றும் உட்புற அம்சங்கள் பிரிமீயமாக இருக்கின்றன. இந்த நிலையில், இக்காரின் உட்புறங்களை உயர்ரக சொகுசு எஸ்யூவிகளுக்கு இணையாக டெல்லியை சேர்ந்த கார் ஸ்டைல்-இன் என்ற வாகனங்களை அழகூட்டும் நிறுவனம் ஒன்று அசத்தலான வடிவமைப்பில் அப்டேட் செய்துள்ளது. இதன் படங்கள் இணையதளங்களில் தற்போது வெளியாகியுள்ளன.

உயர்ரக எஸ்யூவி ஸ்டைலுக்கு மாறிய கியா செல்டோஸ்... உட்புற பகுதி எப்படியுள்ளது பாருங்கள்

செல்டோஸ் காரில் இந்நிறுவன பணியாளர்கள் முக்கிய மாற்றமாக அம்மாடலில் உள்ளதை விட பிரிமீயம் தோற்றத்தை தரக்கூடிய வகையில் நீலம், கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் அழகுற வடிவமைத்துள்ளனர்.

உயர்ரக எஸ்யூவி ஸ்டைலுக்கு மாறிய கியா செல்டோஸ்... உட்புற பகுதி எப்படியுள்ளது பாருங்கள்

இந்த அப்டேட் செய்யப்பட்ட கார்களின் வெளிப்புறங்கள், நீல நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. எனவே உட்புறத்திலும் சில இடங்களில் நீல நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள செல்டோஸ் மாடலிலும் சிறந்த உட்புற கேபின் அமைப்பு இருந்தாலும் இந்த அப்டேட் செய்யப்பட்ட செல்டோஸ் காரில் உட்புறம் அதை விட இன்னும் ஒரு படி மேலே உள்ளது.

உயர்ரக எஸ்யூவி ஸ்டைலுக்கு மாறிய கியா செல்டோஸ்... உட்புற பகுதி எப்படியுள்ளது பாருங்கள்

கியா மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்திய செல்டோஸ் கார்களில் எச்டி லைன் வேரியண்ட் தான் மிக காஸ்ட்லியான உட்புற கேபின் அமைப்பை பெற்றது. ஜிடி லைன் வேரியண்ட்கள் ஸ்போர்ட்டியான தோற்றத்தை பெற்றன.

உயர்ரக எஸ்யூவி ஸ்டைலுக்கு மாறிய கியா செல்டோஸ்... உட்புற பகுதி எப்படியுள்ளது பாருங்கள்

இந்த கார்ஸ்டைல்-இன் உருவாக்கிய காரில் உள்ள டேஸ்போர்டு திரையிலும் நீலம் நிறம் லேசாக புலப்படுகிறது. கதவுகளின் உட்புற பார்டர்களிலும் லாக் செய்யும் இடத்திலும் கோடு போன்ற டிசைனில் நீலம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் டோர் பேட்ஸ், டேஸ்போர்டின் கீழ்பகுதி மற்றும் மேலும் சில ஏரியாக்கள் கேபினுக்கு ஆடம்பர தோற்றத்தை தருகின்றன.

உயர்ரக எஸ்யூவி ஸ்டைலுக்கு மாறிய கியா செல்டோஸ்... உட்புற பகுதி எப்படியுள்ளது பாருங்கள்

இருக்கைகளை சுற்றி மூடப்படும் துணிகளுக்கு பதிலாக நப்பா என்ற லெதர் பயன்படுத்தப்பட்டுள்ளதால் தற்போதைய மாடலை விட விலையுயர்ந்த எஸ்யூவியாக இந்த கார் காட்சியளிக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலும் டேஸ்போர்ட்டை தெளிவாக பார்ப்பதற்காக அதன் மேற்புறத்தில் கருப்பு நிறத்தில் குடை போன்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் கார்ஸ்டைல்இன்-ஆல் மேம்படுத்தப்பட்டுள்ள இந்த செல்டோஸ், காரில் செல்பவர்களுக்கு மகிழ்ச்சியான உணர்வை தரும்.

Most Read:அரசியல்வாதிகள் வெள்ளை கலர் கார்களை அதிகம் பயன்படுத்துவது ஏன் தெரியுமா? எல்லாம் ஒரு காரணமாதான்...

உயர்ரக எஸ்யூவி ஸ்டைலுக்கு மாறிய கியா செல்டோஸ்... உட்புற பகுதி எப்படியுள்ளது பாருங்கள்

கியா செல்டோஸ் மாடலுக்கு போட்டி மாடல் கார்களாக, ஹூண்டாய் க்ரெட்டா, நிஸான் கிக்ஸ் மற்றும் ரெனால்ட் டஸ்டர் போன்றவை எஸ்யூவி கார் பிரிவில் உள்ளன. ரூ.9.69 லட்சத்திற்கு எக்ஸ்ஷோரூம்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் கியா செல்டோஸ், 3 ஆட்டோபாக்ஸ் தேர்வுகளுடன் கூடிய 3 என்ஜின் தேர்வுகளை கொண்டுள்ளது. 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டர்போ சார்ஜ்டு டீசல் என்ஜின், 1.4 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் ஆகியவை செல்டோஸ் காரின் என்ஜின் தேர்வுகள் ஆகும்.

உயர்ரக எஸ்யூவி ஸ்டைலுக்கு மாறிய கியா செல்டோஸ்... உட்புற பகுதி எப்படியுள்ளது பாருங்கள்

கியா மோட்டார்ஸ் இந்த காரை நான்கு ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. அனைத்து பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளுடனும் 6 வேக நிலைகளை வழங்கக்கூடிய மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஒரு தேர்வாக வழங்கப்பட்டது. மற்ற மூன்று தேர்வுகளாக, டீசல் என்ஜினுடன் டார்க் கன்வெர்ட்டர், 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் சிவிடி, 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் டூயுல் க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன் ஆகியவை உள்ளன.

Most Read:இந்தியாவில் களமிறங்கும் சீனாவின் எலக்ட்ரிக் ரிக்‌ஷா... எப்படியுள்ளது பார்த்தீர்களா...

உயர்ரக எஸ்யூவி ஸ்டைலுக்கு மாறிய கியா செல்டோஸ்... உட்புற பகுதி எப்படியுள்ளது பாருங்கள்

டெல்லியில் உள்ள கார்ஸ்டைல்இன் நிறுவனத்தை போன்று சென்னையில் உள்ள வாகன அழகு கூட்டும் நிறுவனங்களும் செல்டோஸ் காரின் உட்புறம் அல்லது வெளிப்புறத்தை நவீன தொழிற்நுட்பங்களால் மேம்படுத்தி வெளியிடும் பணியை துவங்கினால் நன்றாக இருக்கும்.

Most Read Articles

English summary
kia selto turned intoluxury suv
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X