விளம்பரத்துக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர்... ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படத்தை மிஞ்சும் காட்சிகள்!

கியா செல்டோஸ் காருக்கான விளம்பரம் வெளியாகியுள்ளது. இதன் காட்சிகள் ஜேம்ஸ் பாண்ட் மற்றும் ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படத்தின் காட்சிகளை மிஞ்சும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

விளம்பரத்துக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர்... ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படத்தை மிஞ்சும் காட்சிகள்!

கியா நிறுவனத்தின் எஸ்யூவி ரக செல்டோஸ் கார் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த கார் சவாலான விலையில் களமிறக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இந்த காரின் அறிமுக விழா நடைபெற்றது. இதனை பாலிவுட் திரைப்பட நடிகர் டைகர் ஷெராஃப் அறிமுகம் செய்து வைத்தார். இவர்தான் கியா செஸ்டோஸ் காரின் பிராண்ட் அம்பாஸிடராக செயல்பட்டு வருகின்றார்.

விளம்பரத்துக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர்... ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படத்தை மிஞ்சும் காட்சிகள்!

இந்த புத்தம் புதிய செல்டோஸ் காரின் ஆரம்ப விலை ரூ. 9.7 லட்சமாக உள்ளது. அதேபோன்று, அதிகபட்ச விலை ரூ. 16 லட்சம் ஆகும்.

கியா செல்டோஸ் எஸ்யூவியில் பல்வேறு சிறப்பம்சங்கள் காணப்படுகின்றது. இதன்காரணமாகவே, இமாலய அளவிலான வரவேற்பை இது பெற்றிருக்கின்றது. அந்தவகையில், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட குறுகிய காலத்திலேயே 32,000 புக்கிங்குகளை அள்ளி குவித்தது. இது புதிய வரலாறு ஆகும்.

விளம்பரத்துக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர்... ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படத்தை மிஞ்சும் காட்சிகள்!

அண்மையில், இதேபோன்ற சாதனையை எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் கார் செய்தது. அளவு கடந்த புக்கிங்குகளால், அந்நிறுவனம் தற்காலிகமாக புக்கிங்குகளை நிறுத்தி வைத்துள்ளது. ஆனால், இத்தகைய நடவடிக்கையை கியா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக கூறிவிட்டது.

விளம்பரத்துக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர்... ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படத்தை மிஞ்சும் காட்சிகள்!

ஏனென்றால் கியா நிறுவனத்தின் உற்பத்தி மையம் வருடத்திற்கு 3 லட்சம் கார்களை தயாரிக்கும் அளவிற்கு வசதி கொண்டதாக உள்ளது.

தற்போது மட்டும் இந்நிறுவனத்தின் கையிருப்பாக 5 ஆயிரம் யூனிட் செல்டோஸ் எஸ்யூவி கார்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விளம்பரத்துக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர்... ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படத்தை மிஞ்சும் காட்சிகள்!

இந்நிலையில், செல்டோஸ் காரை விளம்பரம் செய்யும் விதமாக புதிய விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ காட்சிகள், பிரபல ஜேம்ஸ் பாண்ட் மற்றும் ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படங்களில் வரும் காட்சிகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் இருக்கின்றது.

இந்த விளம்பர வீடியோவில் டைகர் ஷெரோஃப் நடித்துள்ளார். இதனை நீங்கள் கீழே காணலாம்.

வீடியோவில், பறக்கும் விமானத்தில் இருக்கும் செல்டோஸ் காரை ரங்கூன் ஒன்று கடத்துவது போன்றும், அதனை தடுக்கும் விதமாக வீர தீர சாகசத்தில் டைகர் ஷெரோஃப் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த விளம்பரத்தைப் பார்க்கும் போது இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க என்று கூற தோன்றுகின்றது. இருப்பினும், மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு இதுபோன்று விளம்பரங்கள் தேவைப்படுகின்றது.

விளம்பரத்துக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர்... ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படத்தை மிஞ்சும் காட்சிகள்!

இதுகுறித்து கியா மோட்டார்ஸ் இந்திய நிறுவனத்தின் எம்டி மற்றும் சிஇஓ கூறியதாவது, "செல்டோஸ் எங்களின் லட்சிய திட்டங்களில் ஒன்றாகும். இது இந்தியாவிற்கான முதல் மாடல். ஆகையால், இதற்கு இதயம் மற்றும் உயிரை நாங்கள் கொடுத்துள்ளோம். இந்த காரின் பிரிமியம் தரத்திலான அம்சங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்" என்றார்.

விளம்பரத்துக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர்... ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படத்தை மிஞ்சும் காட்சிகள்!

மேலும் பேசிய அவர், செல்டோஸ் காரில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வசதிகள் இளம் தலைமுறையினரை கவரும் வகையில் பல்வேறு டிஜிட்டல் வசதிகளைக் கொண்டுள்ளது. அதற்கேற்ப வகையில், இதனை நாங்கள் வடிவமைத்துள்ளோம். இந்த கார் இந்தியாவின் நடுத்தர எஸ்யூவி கார்கள் சந்தையில் ஓர் புரட்சியை ஏற்படுத்தும் என நாங்கள் நம்புகின்றோம்" என தெரிவித்தார்.

விளம்பரத்துக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர்... ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படத்தை மிஞ்சும் காட்சிகள்!

செல்டோஸ் காரில் மூன்று விதமான எஞ்ஜின் தேர்வு கிடைக்கின்றன. அவை, 1.4 லிட்டர் டர்போ சார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 1.5 லிட்டர் விஜிடி டீசல் எஞ்ஜின் ஆகும்.

விளம்பரத்துக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர்... ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படத்தை மிஞ்சும் காட்சிகள்!

இதில், 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் 140 பிஎச்பி பவரையும், 242 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இதில், 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கிடைக்கின்றது. அதேபோன்று, 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் 115 பிஎச்பி பவரையும், 144 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில், 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஸ்மார்ட் ஸ்ட்ரீம் ஐவிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்படுகின்றது.

விளம்பரத்துக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர்... ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படத்தை மிஞ்சும் காட்சிகள்!

தொடர்ந்து, 1.5 லிட்டர் விஜிடி டீசல் எஞ்ஜின் தேர்வில் கிடைக்கும் செல்டோஸ் 115 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில், 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக கிடைக்கின்றது.

விளம்பரத்துக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர்... ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படத்தை மிஞ்சும் காட்சிகள்!

இதுமட்டுமின்றி, கியா செல்டோஸ் காரில் கூடுதலாக பிரிமியம் வசதிகளாக வென்டிலேடிங் திறன் கொண்ட இருக்கைகள், ஹீடட் ஓஆர்விஎம்கள், சன்ரூஃப், நேவிகேஷன் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய போஸ் மியூஸிக் சிஸ்டம் மற்றும் மியூசிக் ஏற்பவாறு நிறத்தை மாற்றி எரியும் மின் விளக்குகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.

விளம்பரத்துக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர்... ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படத்தை மிஞ்சும் காட்சிகள்!

இத்துடன், பாதுகாப்பு வசதியாக 360 டிகிரி கேமரா, முன்பக்க பார்க்கிங் சென்சார், பிளைண்ட் ஸ்பாட் மாணிட்டர், 6 ஏர் பேக்குகள், 3 வருட இலவச சந்தாதாரர் வசதியுடன் கூடிய யுவிஓ கன்னெக்ட் மற்றும் ஒயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்டவை இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Kia Seltos TVC Video Revealed. Read In Tamil.
Story first published: Friday, August 23, 2019, 11:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X