நாளை அறிமுகமாகும் கியாவின் பிரமாண்ட கார்... க்ரெட்டா மாடலுக்கு செம்ம போட்டி இதுதான்...!

இன்னைக்கு என்ன ட்ரென்டிங் தெரியுமா? இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் 2019 ஐசிசி உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் அதிகாரப்பூர்வ கார் - கீழே உள்ள கலக்கல் வீடியோவை காணத்தவறாதீர்கள்!

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் கியா நிறுவனத்தின் முதல் கார், நாளை இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

நாளை அறிமுகமாகும் கியாவின் பிரமாண்ட கார்... க்ரெட்டா மாடலுக்கு செம்ம போட்டி இதுதான்...!

எஸ்யூவி ரக கார் பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும், கியா நிறுவனத்தின் 5 சீட்டர் மாடல் செல்டோஸ் கார், நாளை உலகளாவிய வெளியீட்டைச் சந்திக்க இருக்கின்றது. இதுவே இந்த நிறுவனத்தின்மூலம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகும் முதல் காராகும்.

நாளை அறிமுகமாகும் கியாவின் பிரமாண்ட கார்... க்ரெட்டா மாடலுக்கு செம்ம போட்டி இதுதான்...!

இந்த எஸ்யூவி ரக கார், இந்திய சந்தையில், முழுக்க முழுக்க ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டாவுக்கும், ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் மாடல் மற்றும் நிஷான் கிக்ஸ் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக களமிறங்க உள்ளது. இந்த காரின் வருகையால், போட்டி நிறுவனங்கள் தற்போது கலக்கத்தில் ஆழ்ந்துள்ளன.

நாளை அறிமுகமாகும் கியாவின் பிரமாண்ட கார்... க்ரெட்டா மாடலுக்கு செம்ம போட்டி இதுதான்...!

கியா செல்டோஸ் கார், 7 சீட்டர் எஸ்யூவி கார்களில் கிடைக்கும் அம்சத்தைப் போன்று, முன்-சக்கரங்கள் இயக்கம் கொண்ட மோனோகோக்யூ தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டாவும், இதே ரகத்தினால் ஆனதுதான். அதேபோன்று, புதிய செல்டோஸ் கார், கடந்த 2018ம் ஆண்டு தலைநகர் டெல்லியில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் அறிமுகமாகியிருந்த எஸ்பி கான்செப்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

நாளை அறிமுகமாகும் கியாவின் பிரமாண்ட கார்... க்ரெட்டா மாடலுக்கு செம்ம போட்டி இதுதான்...!

அந்தவகையில், எஸ்பி கான்செப்ட் மாடலில் இருந்த சில அம்சங்கள் செல்டோஸ் மாடலில் காட்சியளிக்கின்றன. மேலும், கியாவின், இந்த செல்டோஸ் கார், எதிர்கால டிசைனைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உறுதிச் செய்யும் வகையில், இந்த கார்ககுறித்த டீசர் வீடியோ அண்மையில் வெளியிடப்பட்டது. அதில், காரின் முகப்பு பகுதி மின் விளக்கு, க்ரில், ரியர் லைட், வீல் உள்ளிட்டவையின் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

நாளை அறிமுகமாகும் கியாவின் பிரமாண்ட கார்... க்ரெட்டா மாடலுக்கு செம்ம போட்டி இதுதான்...!

இதைத்தொடர்ந்து, செல்டோஸ் கார் குறித்த மற்றுமொரு டீசர் வீடியோவை இரண்டாவது முறையாக கியா நிறுவனம் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. அந்த டீசரில், காரின் பக்கவாட்டு மற்றும் முகப்பு பகுதிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், இந்த இரு டீசர் வீடியோவில், ஒன்றில்கூட அந்த கார் முழுமையாக காட்சியளிக்கவில்லை.

நாளை அறிமுகமாகும் கியாவின் பிரமாண்ட கார்... க்ரெட்டா மாடலுக்கு செம்ம போட்டி இதுதான்...!

இந்நிலையில், இந்த மிட்-சைஸ் அளவுகொண்ட 5 சீட்டர் எஸ்யூவி கார் மீது ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பின் பலனாக, அந்த காரின் முழு கவர்ச்சியான தோற்றம், நாளை உலகம் முழுவதிற்கும் வெளியாக இருக்கின்றது. ஆம்... புதிய செல்டோஸ் கார் நாளை அறிமுகமாக இருக்கின்றது.

நாளைய தினம் வெளியீட்டைத் தொடர்ந்து, இந்த காருக்கான விற்பனை, வருகின்ற செப்டம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளது.

நாளை அறிமுகமாகும் கியாவின் பிரமாண்ட கார்... க்ரெட்டா மாடலுக்கு செம்ம போட்டி இதுதான்...!

கியா செல்டோஸ் காரில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், ஹூண்டாய் வெனியூ காரில் இடம்பெற்றுள்ள, ஸ்மார்ட் கனெக்டிவிட்டி தொழில்நுட்ப வசதி, செல்டோஸ் காரிலும் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. இந்த சேவையானது, பிரத்யேக இ-சிம்கள் மூலம் வழங்கப்பட உள்ளது. இது, செல்போன் வாயிலாக, காருடன் 24*7 நேரமும் தொடர்பினிலேயே வைத்திருக்க உதவும்.

நாளை அறிமுகமாகும் கியாவின் பிரமாண்ட கார்... க்ரெட்டா மாடலுக்கு செம்ம போட்டி இதுதான்...!

இத்துடன், தற்போதைய நவீன யுகத்திற்கு தேவையான பல்வேறு சிறப்பம்சங்களும், இந்த காரில் இடம்பெற இருப்பதாக கூறப்படுகின்றது. அவ்வாறு, ரிமோட் மூலம் கன்ட்ரோல் செய்யக்கூடிய ஏசி மற்றும் டெலிமேட்டிக் சேவையுடன் கூடிய யுவிஓ கனெக்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்பட உள்ளன.

நாளை அறிமுகமாகும் கியாவின் பிரமாண்ட கார்... க்ரெட்டா மாடலுக்கு செம்ம போட்டி இதுதான்...!

மேலும், பாதுகாப்பு மற்றும் நவீன வசதியாக, மல்டிபிள் ஏர் பேக்ஸ், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி, எலக்ட்ரிக் பார்க் பிரேக், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், க்ராஷ் நோடிஃபிகேஷன், நேரடியான கார் ட்ராக்கிங், திருட்டு அலர்ட் உள்ளிட்ட வசதிகள் இதில் இணைக்கப்பட உள்ளன.

நாளை அறிமுகமாகும் கியாவின் பிரமாண்ட கார்... க்ரெட்டா மாடலுக்கு செம்ம போட்டி இதுதான்...!

மேலும், செல்டோஸின் கேபினுக்குள் 10.25 இன்சிலான இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டச் ஸ்கிரீன் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலில் 7 இன்ஃபர்மேஷன் டிஸ்பிளேக்கள் உள்ளிட்டவை இடம் இருக்கின்றன. இவற்றுடன், இந்த 5 சீட்டர் இருக்கையானது, ஃபாக்ஸ் லெதரால் அலங்கரிக்கப்பட உள்ளது.

நாளை அறிமுகமாகும் கியாவின் பிரமாண்ட கார்... க்ரெட்டா மாடலுக்கு செம்ம போட்டி இதுதான்...!

கியா செல்டோஸ் எஸ்யூவி கார் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல், ஆகிய இரு எஞ்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்க இருக்கின்றது. மேலும், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் இந்த கார் எதிர்பார்க்கப்படுகின்றது. அதேசமயம், இந்த காரின் எஞ்ஜின் பிஎஸ்6 தரத்திற்கேற்ப தயாராகியிருப்பதாக கூறப்படுகிறது. கியாவின் இந்த செல்டோஸ் மாடலில் ஹைபிரிட் வெர்ஷனையும் அந்த நிறுவனம் அறிமுகம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Most Read Articles
English summary
Kia Seltos Unveil Taomorrow. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X