புதிய மாற்றங்களுடன் பிரமாதமாக மாறிய கியா எஸ்பி எஸ்யூவி கான்செப்ட்!

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தாயகமான தென்கொரியாவில் நடந்து வரும் சியோல் ஆட்டோமொபைல் கண்காட்சியில், எஸ்பி சிக்னேச்சர் என்ற மாதிரி எஸ்யூவி பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.

தென்கொரியாவில் நடந்து வரும் 2019 சியோல் ஆட்டோமொபைல் கண்காட்சியில், கியா எஸ்பி சிக்னேச்சர் என்ற பெயரிலான மாதிரி எஸ்யூவி மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு நிலை அம்சங்களுடன் காட்சி தரும் இந்த எஸ்யூவியின் படங்கள், விபரங்களை பார்க்கலாம்.

புதிய மாற்றங்களுடன் பிரமாதமாக மாறிய கியா எஸ்பி எஸ்யூவி கான்செப்ட்!

கடந்த ஆண்டு கிரேட்டர் நொய்டாவில் நடந்த சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில், கியா நிறுவனத்தின் எஸ்பி என்ற பெயரிலான எஸ்யூவி காரின் மாதிரி மாடல் முதல்முறையாக வெளியுலக பார்வைக்கு வந்தது. இந்த மாதிரி மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வரும் புதிய எஸ்யூவி மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய மாற்றங்களுடன் பிரமாதமாக மாறிய கியா எஸ்பி எஸ்யூவி கான்செப்ட்!

இந்த நிலையில், கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தாயகமான தென்கொரியாவில் நடந்து வரும் சியோல் ஆட்டோமொபைல் கண்காட்சியில், எஸ்பி சிக்னேச்சர் என்ற மாதிரி எஸ்யூவி பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. எனினும், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வைக்கப்பட்டு இருந்த எஸ்பி கான்செப்ட் மாடலைவிட பல விதத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

புதிய மாற்றங்களுடன் பிரமாதமாக மாறிய கியா எஸ்பி எஸ்யூவி கான்செப்ட்!

இந்தியாவின் வெற்றிகரமான எஸ்யூவி மாடலாக வலம் வரும் ஹூண்டாய் க்ரெட்டா பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய கியா எஸ்பி சிக்னேச்சர் எஸ்யூவியும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. டிசைனிலும், வசதிகளிலும் மட்டுமே கூடுதல், குறைவு இருக்கும்.

புதிய மாற்றங்களுடன் பிரமாதமாக மாறிய கியா எஸ்பி எஸ்யூவி கான்செப்ட்!

கிட்டத்தட்ட தயாரிப்புக்கு கொண்டு செல்லும் அளவிற்கான மாற்றங்களை புதிய எஸ்பி எஸ்யூவியின் மாதிரி மாடலில் காண முடிகிறது. புதிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர், பம்பர், பகல்நேர விளக்குகள், செங்குத்தான எல்இடி பனி விளக்குகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புதிய மாற்றங்களுடன் பிரமாதமாக மாறிய கியா எஸ்பி எஸ்யூவி கான்செப்ட்!

ஆரஞ்ச் வண்ண பாடி கலரில் கருப்பு வண்ண கூரையுடன் பார்ப்பதற்கு பிரமாதமாக இருக்கிறது. நான்காவது பில்லர் கருப்பு வண்ணம் கொடுக்கப்பட்டு, கூரையானது பறப்பது போன்ற மாயை ஏற்படுத்துகிறது. இது தற்போது பல கார்களிலும் பயன்படுத்தப்படும் டிசைன் அம்சமாகவும் உள்ளது. இந்த காரில் புதிய அலாய் வீல்கள் கவர்ச்சியை கூட்டுகின்றன.

புதிய மாற்றங்களுடன் பிரமாதமாக மாறிய கியா எஸ்பி எஸ்யூவி கான்செப்ட்!

புதிய கியா எஸ்பி சிக்னேச்சர் கான்செப்ட் எஸ்யூவியில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜர், வைஃபை வசதி, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது.

புதிய மாற்றங்களுடன் பிரமாதமாக மாறிய கியா எஸ்பி எஸ்யூவி கான்செப்ட்!

இந்த எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. இரண்டுமே பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மாற்றங்களுடன் பிரமாதமாக மாறிய கியா எஸ்பி எஸ்யூவி கான்செப்ட்!

இந்த ஆண்டு பிற்பாதியில் இந்த புதிய எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சத்திற்கு இடையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் க்ரெட்டா, ரெனோ கேப்ச்சர், நிஸான் கிக்ஸ் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
English summary
South Korean carmaker Kia has unveiled the Kia SP Signature Concept at the 2019 Seoul Motor Show. The new Kia SP Signature Concept previews the final production car that will be revealed in India later this year. Kia calls the new SP Signature an evolution of the concept SUV first revealed at Auto Expo 2018 in New Delhi.
Story first published: Thursday, March 28, 2019, 18:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X