உலகின் அதிவேகமான காருக்கு தந்தை பெயர் சூட்டிய மகன்.. இதன் வேகம் தெரிந்தால் தலை சுற்றலே வரும்!

உலகின் அதிவேகமான காரை கோனிக்செக் நிறுவனம் இந்த வருடம் நடைபெற உள்ள ஜெனிவா வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்ய உள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

உலகின் அதிவேகமான காருக்கு தந்தையின் பெயர் சூட்டிய மகன்.. இதன் வேகம் தெரிந்தால் தலை சுற்றலே வரும்!

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் ரக கார் தயாரிப்பு நிறுவனமான கோனிக்செக், உலகிலேயே அதிவேகமாகச் செல்லக்கூடிய காரைத் தயாரித்துள்ளது. இந்த புதிய காருக்கு கோனிக்செக் இஸ்கோ என்ற பெயரை அந்த நிறுவனம் வைத்துள்ளது. கோனிக்செக் நிறுவனத்தின் தலைவர் கிரிஸ்டியன் வான் கோனிக்செக், தன்னுடைய தந்தையை சிறப்பிக்கும் விதமாக அவரின் இஸ்கே வான் கோனிக்செக் முன்பெயரை இந்த புதிய மாடலுக்கு வைத்துள்ளார்.

உலகின் அதிவேகமான காருக்கு தந்தையின் பெயர் சூட்டிய மகன்.. இதன் வேகம் தெரிந்தால் தலை சுற்றலே வரும்!

இந்த புதிய கோனிக்செக் இஸ்கோ காரானது ஒரு மணி நேரத்திற்கு 300 மைல் செல்லும். அதாவது, மணிக்கு 482 கிமீ வேகத்தில் செல்லும். மலைக்க வைக்கும் இந்த வேகமானது, விமானங்கள் தரையிறங்குவதற்கு முன்னதாக வானில் வட்டமிடும்போது பயன்படுத்தும் வேகமாகும்.

உலகின் அதிவேகமான காருக்கு தந்தையின் பெயர் சூட்டிய மகன்.. இதன் வேகம் தெரிந்தால் தலை சுற்றலே வரும்!

உலகின் அதிவேகமாக செல்லக்கூடியக் கார்களைத் தயாரித்து வரும் நிறுவனங்களில் ஒன்றான கோனிக்செக் இருந்து வருகிறது. இந்த நிறுவனம் 2014ம் ஆண்டு இதேபோன்று அதிவேகமாக செல்லும் கார் ஒன்றை அறிமுகம் செய்தது.

உலகின் அதிவேகமான காருக்கு தந்தையின் பெயர் சூட்டிய மகன்.. இதன் வேகம் தெரிந்தால் தலை சுற்றலே வரும்!

கோனிக்செக் ஒன்1 என்று பெயரிடப்பட்ட அந்த ஹைப்பர் கார், புகாட்டி வேரோன் மற்றும் ஹென்னிஸி வெனோம் ஜிடி கார்களுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டது. 1,340 குதிரைத் திறனைக்கொண்ட இந்த கார் வெறும் 2.6 நொடிகளில் 100 கிமீ தூரத்தைத் தொட்டுவிடும். மேலும், இது மணிக்கு 0-400 கிமீ வேகத்தைத் தாண்டி செல்லும் என்று கூறப்படுகிறது.

உலகின் அதிவேகமான காருக்கு தந்தையின் பெயர் சூட்டிய மகன்.. இதன் வேகம் தெரிந்தால் தலை சுற்றலே வரும்!

இந்த நிலையில், தற்போது தனது போட்டி நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் மிக அதிவேகமாக செல்லும் புத்தம் புதிய கோனிக்செக் இஸ்கோ காரை ஜெனிவா கார் கண்காட்சியில் அந்த நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.

உலகின் அதிவேகமான காருக்கு தந்தையின் பெயர் சூட்டிய மகன்.. இதன் வேகம் தெரிந்தால் தலை சுற்றலே வரும்!

இந்த புத்தம் புதிய கோனிக்செக் இஸ்கோ காரில், அதிக சக்த வாய்ந்ததாக ட்யூன் செய்யப்பட்ட 5.0 லிட்டர் டிவின் டர்போசார்ஜட் வி8 ரக எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜினானது 85 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலில் 1,600 குதிரைச் சக்தியை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. மேலும், நார்மல் பெட்ரோலில் 1,280 ஹெச்பி திறனையும் வெளிப்படுத்தும்.

உலகின் அதிவேகமான காருக்கு தந்தையின் பெயர் சூட்டிய மகன்.. இதன் வேகம் தெரிந்தால் தலை சுற்றலே வரும்!

மேலும், இந்த காரின் எஞ்ஜினில், கோனிக்செக்-இன் புதிய ஒன்பது-ஸ்பீடு லைட் ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் (LST) தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் கட்ட டிரான்ஸ்மிஷன் யூனிட்டானது முழுக்க முழுக்க கோனிக்செக்-இன் வடிவமைப்பிலே தயாரிக்கப்பட்டுள்ளது.

உலகின் அதிவேகமான காருக்கு தந்தையின் பெயர் சூட்டிய மகன்.. இதன் வேகம் தெரிந்தால் தலை சுற்றலே வரும்!

இதைத்தொடர்ந்து, இதில் பாதுகாப்பு வசதியாக கார்பன் செராமிக்குடன் கூடிய ஸ்போர்ட் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதோபோல, காருக்குள் கார்பன் ஸ்போர்ட் ரக வளைவான பக்கெட் சீட்டுகள், கிளைமேட் கன்ட்ரோல், 'பேர்ட் ஐ வியூவ்' பார்க்கிங் அசிஸ்டண்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

உலகின் அதிவேகமான காருக்கு தந்தையின் பெயர் சூட்டிய மகன்.. இதன் வேகம் தெரிந்தால் தலை சுற்றலே வரும்!

இந்த காரின் தோற்றமானது, ஏரோடைனமிக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் காற்றின் அழுத்தத்தை செலுத்தும் விதமாக இறக்கை அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இது, 2,200 புவண்ட் அழுத்தத்தை காரின் பின்பக்கத்திற்கு கொடுக்கும். இதனால், 273 கிமீ வேகத்தில் செல்லும்போது கூட, மிகவும் ஆபத்தான வளைவினைகூட எளிதாக கடந்துவிடும்.

உலகின் அதிவேகமான காருக்கு தந்தையின் பெயர் சூட்டிய மகன்.. இதன் வேகம் தெரிந்தால் தலை சுற்றலே வரும்!

இத்தகைய சிறப்புமிக்க கோனிக்செக் இஸ்கோ கார் ஜெனிவா கார் கண்காட்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும், பல நாட்களாக மறைத்து வைக்கப்பட்டு வந்த இந்த காரின் ரகசியமானது வெளிவந்திருப்பது அதன் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

Most Read Articles
English summary
Koenigsegg Jesko Unveil Geneva Motor Show. Read In Tamil.
Story first published: Wednesday, March 6, 2019, 14:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X