இமயமலைக்கு செல்லும் முதல் இந்திய எலக்ட்ரிக் கார்... ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்கின் புதிய சவாலான பயணம்

ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் காரான கோனா எலக்ட்ரிக், புதிய சவாலான பயணம் ஒன்றை இன்று மேற்கொண்டுள்ளது. அதனை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

இமயமலைக்கு செல்லும் முதல் இந்திய எலக்ட்ரிக் கார்... ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்கின் புதிய சவாலான பயணம்...

கோனா எலக்ட்ரிக் மேற்கொண்டுள்ள இந்த சவால் நிறைந்த பயணத்திற்கு ஹூண்டாய் நிறுவனம் 'மிஷன் - எமிஷன் இம்பாசிபல்' என பெயர் வைத்துள்ளது. திபெத் நாட்டின் தலைநகரமான லாஸா-வில் ஆரம்பமாகியுள்ள இந்த பயணம் இமயமலை பேஸ் கேம்ப்-ல் முடிவடைய உள்ளது. இந்த பயணம் இன்று கொடியசைத்து துவங்கப்பட்டுவிட்டது.

இமயமலைக்கு செல்லும் முதல் இந்திய எலக்ட்ரிக் கார்... ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்கின் புதிய சவாலான பயணம்...

உலகின் மிக உயரத்தில் உள்ள நகரங்களில் ஒன்றான லாஸ், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 12,000 அடி உயரத்தில் உள்ளது. இமயமலை பேஸ் கேம்ப் வரை மேற்கொள்ளப்படவுள்ள கோனா எலக்ட்ரிக்கின் இந்த பயணம் நிச்சயம் கடினமானது என்று தான் சொல்ல வேண்டும்.

இமயமலைக்கு செல்லும் முதல் இந்திய எலக்ட்ரிக் கார்... ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்கின் புதிய சவாலான பயணம்...

இந்த பகுதிக்கு இதுவரை எந்த எலக்ட்ரிக் காரும் சென்றதில்லை. இந்த பயணம் மூலமாக இமயமலை பேஸ் கேம்ப் பகுதிக்கு செல்லும் முதல் இந்திய எலக்ட்ரிக் கார் என்கிற பெருமையை ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் பெறவுள்ளது. கோனா எலக்ட்ரிக் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்த கார் இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலையாக இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.23.86 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது.

இமயமலைக்கு செல்லும் முதல் இந்திய எலக்ட்ரிக் கார்... ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்கின் புதிய சவாலான பயணம்...

இவ்வளவு அதிகமான விலையில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதன் எரிபொருள் என்ஜின் வெர்சன் காருக்கு சந்தையில் இருந்த பிரபலத்தால் கோனா எலக்ட்ரிக் காருக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஹூண்டாய் நிறுவனத்தின் பிறப்பிடமான தென் கொரியாவில் இந்த எலக்ட்ரிக் கார் 2017ஆம் ஆண்டின் மத்தியிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.

இமயமலைக்கு செல்லும் முதல் இந்திய எலக்ட்ரிக் கார்... ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்கின் புதிய சவாலான பயணம்...

கோனாவின் எலக்ட்ரிக் மற்றும் ரெகுலர் என இரு வெர்சன்களும் 2019ஆம் ஆண்டிற்கான நார்த் அமெரிக்கன் சிறந்த பயன்பாட்டு வாகனம் என்கிற விருதை பெற்றுள்ளன. சப்-கம்பேக்ட் க்ராஸ்ஓவர் எஸ்யூவி பிரிவில் இருந்து இந்த விருதை வாங்கும் முதல் காராகவும் ஹூண்டாய் கோனா மாடல் சிறப்பிக்கப்பட்டது.

இமயமலைக்கு செல்லும் முதல் இந்திய எலக்ட்ரிக் கார்... ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்கின் புதிய சவாலான பயணம்...

இந்த எலக்ட்ரிக் கார், 39.2 kWh லித்தியம்-இரும்பு பாலிமர் கலவை பேட்டரியை கொண்டுள்ளது. இந்த பேட்டரி 136 பிஎச்பி பவரையும் 395 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. 100 kmph வேகத்தை இந்த கார் வெறும் 9.7 வினாடிகளில் அடைந்துவிடும். சார்ஜிங் செலுத்தும் பகுதி காரின் முன்புற க்ரிலுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் சிங்கிள் சார்ஜில் 452 கிமீ தூரம் வரை இயங்கும் என ஏஆர்ஏஐ அமைப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இமயமலைக்கு செல்லும் முதல் இந்திய எலக்ட்ரிக் கார்... ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்கின் புதிய சவாலான பயணம்...

சிசிஎஸ் டைப் 2 சார்ஜிங் போர்ட் வழியாக டிசி ஃபாஸ்ட் சார்ஜரை இணைப்பதினால், இதன் பேட்டரியில் 80 சதவீத சார்ஜை வெறும் 57 நிமிடங்களில் நிரப்பிவிடலாம். ஆனால் இந்த சிசிஎஸ் டைப் 2 சார்ஜிங் போர்ட், சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களில் உள்ள ஹூண்டாய் டீலர்ஷிப்களிடம் மட்டும் தான் கிடைக்கும். ஹூண்டாய் நிறுவனம் இந்த சார்ஜிங் நிலையங்களை தனது கூட்டணி நிறுவனமான ஐஒசிஎல் உடன் இணைந்து நிறுவியுள்ளது.

இமயமலைக்கு செல்லும் முதல் இந்திய எலக்ட்ரிக் கார்... ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்கின் புதிய சவாலான பயணம்...

மற்றப்படி வீடு மற்றும் அலுவலங்களில் பயன்படுத்துவதற்காக 7.2 kW லெவல்-2 சாதாரண சாக்கெட்டில் பொருத்தக்கூடிய பாக்ஸ் சார்ஜர் காருடன் வழங்கப்படுகிறது. இந்த சார்ஜர் மூலம் சார்ஜிங் செய்யும்போது பேட்டரி முழுவதும் நிரம்புவதற்கு 6 மணிநேரம் 10 நிமிடங்களை எடுத்துக்கொள்கிறது.

இமயமலைக்கு செல்லும் முதல் இந்திய எலக்ட்ரிக் கார்... ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்கின் புதிய சவாலான பயணம்...

இவை தவிர 2.8 kW சிறிய அளவிலான சார்ஜர் தேர்வும் வழங்கப்படுகிறது. இந்த சார்ஜரையும் சாதாரண சாக்கெட்டில் கூட இணைக்கலாம். இந்த சார்ஜர் இன்-கேபிள் கண்ட்ரோல் பாக்ஸ் (ஐசிசிபி) உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சார்ஜர் பேட்டரியை முழுமையாக நிரப்ப 19 மணிநேரத்தை எடுத்து கொள்கிறது.

Most Read Articles
English summary
Hyundai Kona will Become indias First EV to Reach Mt. everest Base CampCover picture
Story first published: Saturday, December 14, 2019, 17:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X