என்னது இந்த கார்ல குளிக்க முடியுமா...? ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லீ சொகுசு கார்களை மிஞ்சிய அதிநவீன வசதி..

ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லீ சொகுசு கார்களில் இடம்பெறாத அதிநவீன மற்றும் சொகுசு வசதி கொண்ட கான்செப்ட் மாடலை ஹன்பியம் லீ என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

குளியலறை வசதி கொண்ட கார்

கொரியாவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஹன்பியம் லீ. இது கார்களுக்கு டிசைன் செய்துதரும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், பல கோடி ரூபாய் விலையில் விற்பனையில் இருக்கும் சொகுசு கார்களில்கூட இல்லாத ஓர் வசதி கொண்ட காரை இந்த நிறுவனம் தற்போது வடிவமைத்துள்ளது.

அவ்வாறு, குளியல் அறை வசதிகொண்ட காரைதான் தற்போது ஹன்பியம் லீ நிறுவனம் அறிமுகம் வடிவமைத்துள்ளது. இந்த வசதியானது, உலகின் அதிநவீன வசதியான கார்களாக இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லீ, பென்ஸ் உள்ளிட்ட கார்களில்கூட இதுபோன்ற வசதி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஹன்பியம் லீ நிறுவனம், இந்த காரை தானியங்கி எலக்ட்ரிக் காராக வடிவமைத்துள்ளது. ஆகையால், இந்த காரின் அனைத்து கன்ட்ரோலும், ஆட்டோ இன்டலிஜென்ஸ் மூலம் கட்டுபடுத்தப்படும். இதன்காரணமாக, வாகனத்தை மேனுவலாக கட்டுபடுத்துவதற்கான ஆப்ஷன்கள் இந்த காரில் இடம் பெறவில்லை. ஆகையால், ஓட்டுநருக்கான தனி இருக்கையும் இதில் பொருத்தப்படவில்லை.

குளியலறை வசதி கொண்ட கார்

இந்த காரில் உள்ள குளியல் அறையில், பயணிகள் அலாதியான இன்பத்தை அனுபவிக்கும் விதமாக, சுடு தண்ணீர் வசதியமைக்கப்பட்டுள்ளது. இதற்கான டப் போன்ற அமைப்பு, இருவர் மட்டுமே அமர்ந்து குளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், தண்ணீர் நிறைந்த டப்பிற்குள் குதித்து செல்வதற்கான வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்பு வசதியை, ஹோண்டா சிட்டி மாடலை தழுவி, ஹன்பியம் நிறுவனம் டிசன் செய்துள்ளது. மேலும், இந்த கான்செப்ட் மாடலை விசாலமான இடவசதி கொண்டதாகவும் அந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதனால், கேபினுக்குள் சொகுசான அனுபவத்தை உணரும் வகையிலான பல்வேறு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தானியங்கி எலக்ட்ரிக் கார், இரு வகையிலான கேபின் அமைப்பைப் பெற்றுள்ளது. அவ்வாறு, ஒரு பக்கம் குளியலறையும், மறு பக்கம் அமர்ந்து செல்லும் வகையிலான இருக்கை அமைப்பும் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த கார், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கோல்ஃப் மாடலைக் காட்டிலும் நீளமான மாடலாக இருக்கின்றது.

குளியலறை வசதி கொண்ட கார்

இந்த காரின் குளியலறை குறித்து பார்ப்போமேயானால், அது உருளை வடிவிலான கிளிம்பல் டெக்னாலஜியில் உருவாக்கப்பட்டுள்ளது. இவை, காரின் கேபினுக்குள் தண்ணீரை சேமித்து வைக்கவும், வெது வெதுப்பாக வைத்துக் கொள்ளவும் உதவும். அதேசமயம், குளியரை பகுதியில் உள்ள இருக்கையில் மசாஜ் செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை, ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் இயங்கச் செய்துவிடலாம். மேலும், இந்த கேபினுக்குள் துணிகளை வைத்துக் கொள்ளவும், துடைப்பான்களை தொங்கவிடவும் ஆங்கர் போன்ற அமைப்பு இதில் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ஒரு முறை நீங்கள் குளித்து முடித்துவிட்டால், அந்த நீரை வெளியேற்றும் வசதியும் வழங்கும் வழங்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Korean Designer Features Hot Water Bath In Car — Where’s The Rest Of The House?. Read In Tamil.
Story first published: Thursday, June 20, 2019, 10:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X