செல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்

செல்போனில் பேசியபடி அரசு பஸ்ஸை ஓட்டிய டிரைவரை சினிமா பாணியில் விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்க முடியாமல் திரும்பியுள்ளார் ஆர்டிஓ. இதற்கான காரணம் என்னவென்று தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி.

செல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்

இந்தியாவில் உள்ள பெரும்பாலான நபர்களிடம், செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டும் வழக்கம் உள்ளது. இங்கு சாலை விபத்துக்கள் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதற்கு இதுவும் ஓர் முக்கியமான காரணம். இரு சக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்களிடம் கூட செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டும் வழக்கம் காணப்படுகிறது.

செல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்

பயணிகளின் உயிருக்கு நாம்தான் பொறுப்பு என்பதை உணராமல் சில அரசு, தனியார் பஸ் டிரைவர்களும் செல்போனில் பேசி கொண்டே பஸ்ஸை ஓட்டுகின்றனர். இந்த சூழலில் கேரள மாநில சாலை போக்குவரத்து கழகத்திற்கு (KSRTC- Kerala State Road Transport Corporation) சொந்தமான பஸ் ஒன்றை அதன் டிரைவர் செல்போனில் பேசியபடியே ஓட்டி சென்று கொண்டிருந்தார்.

செல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்

அப்போது இதனை கவனித்த கேரள மாநில மோட்டார் வாகன துறை அதிகாரிகள், சினிமா பாணியில் அந்த பஸ்ஸை விரட்டினர். இதன் பயணாக அந்த பஸ்ஸை ஒரு வழியாக அவர்கள் நிறுத்தியும் விட்டனர். ஆனால் செல்போனில் பேசிக்கொண்டே பஸ்ஸை ஓட்டிய டிரைவருக்கு அவர்களால் அபராதம் எதுவும் விதிக்க முடியவில்லை.

செல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்

கேரள உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புதான் இதற்கு காரணம். இதனை உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மைதான். செல்போனில் பேசிக்கொண்டே பஸ்ஸை ஓட்டிய டிரைவருக்கு அபராதம் விதிப்பதற்கு பதிலாக ஆர்டிஓவால் (RTO) வெறுமனே நோட்டீஸ் மட்டுமே வழங்க முடிந்தது. இது ஏன்? என்பதை இனி பார்க்கலாம்.

செல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்

கேரள உயர் நீதிமன்றமானது, கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது. அதில், ''பொதுமக்கள் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்காதவரை, செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது குற்றமல்ல'' என கூறப்பட்டிருந்தது. அத்துடன் செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய தற்போதைய சட்டத்தில் எவ்வித ஏற்பாடும் இல்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

செல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்

கேரள உயர்நீதிமன்றத்தின் டிவிசன் பெஞ்ச் கூறியது பின்வருமாறு: செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களால் பொதுமக்களுக்கு ஆபத்து இல்லை என இந்த நீதிமன்றம் கூறவில்லை. அதனை மறுக்க முடியாது. ஆனால் வாகனம் ஓட்டும் போது வாகன ஓட்டிகள் செல்போனில் பேசுவதை தடை செய்ய போலீஸ் சட்டத்தில் எவ்வித ஏற்பாடுகளும் இல்லை. எனவே செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதை குற்றமாக கருதும் வகையில், போலீஸ் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள சட்டசபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்

இதன் காரணமாகதான் செல்போனில் பேசிக்கொண்டே அரசு பஸ்ஸை ஓட்டிய டிரைவருக்கு, நோட்டீஸ் வழங்குவதை தவிர ஆர்டிஓவால் வேறு எந்த தண்டனையையும் கொடுக்க முடியவில்லை. செல்போனில் பேசிக்கொண்டிருக்கையில், அந்த டிரைவர் கட்டுப்பாட்டை இழந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. இது தொடர்பாக புனலூர் நியூஸ் வெளியிட்டுள்ள வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இதே நிலை நீடித்தால், வாகன ஓட்டிகள் துளி கூட அச்சமின்றி செல்போனில் பேசிக்கொண்டே வாகனங்களை இயக்குவார்கள். சாலை விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இது வழிவகுத்து விடும். செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களால், அவர்களுக்கு மட்டும் பிரச்னை இல்லை. இதர வாகன ஓட்டிகளும் சேர்ந்தே பாதிக்கப்படுவார்கள்.

செல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்

இந்த விவகாரத்தில் கேரள அரசு தலையிட்டு, செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது கடுமையான குற்றம் என்பதை உறுதி செய்யும் வகையில், பொருத்தமான சட்ட திருத்தங்களை மேற்கொள்ளும் என நம்புவோம்.

Most Read Articles
English summary
KSRTC Bus Driver Talking On Cell Phone While Driving: Chased & Stopped By RTO. Read in Tamil
Story first published: Saturday, March 23, 2019, 7:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X