லம்போர்கினி ஹுராகென் எவோ கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய லம்போர்கினி ஹூராகென் எவோ கார் ரூ.3.73 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

லம்போர்கினி ஹூராகென் எவோ சூப்பர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முழுமையான விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

லம்போர்கினி ஹுராகென் எவோ கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

லம்போர்கினி ஹூராகென் காருக்கு மாற்றாக புதிய ஹூராகென் எவோ கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலில் ஏராளமான கூடுதல் சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. வடிவமைப்பில் சிறிய அளவிலான மாற்றங்கள் இருந்தாலும், பிற அம்சங்களில் பல மாற்றங்களை சந்தித்துள்ளது.

லம்போர்கினி ஹுராகென் எவோ கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இதுவரை இருந்த ஹூராகென் கார் போன்றே தோற்றமளித்தாலும், முன்புறத்தில் புதிய ஸ்பிளிட்டர் அமைப்பு, அகலமான ஏர்டேம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காரில் புதிய 20 அங்குல சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

லம்போர்கினி ஹுராகென் எவோ கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ஹூராகென் பெர்ஃபார்மென்ட் மாடலை போன்று பின்புறம் வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காரின் பின்புற பம்பருக்கு மேலாக புகைப்போக்கி குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. காரின் பாடியுடன் இணைந்தது போன்ற ஸ்பாய்லர் அமைப்பு, பெரிய டிஃபியூசர் ஆகியவை முக்கிய மாற்றங்களாக கூறலாம்.

லம்போர்கினி ஹுராகென் எவோ கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ஹூராகென் பெர்ஃபார்மென்ட் காரில் பயன்படுத்தப்படும் அதே 5.2 லிட்டர் வி10 எஞ்சின்தான் இந்த காரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 640 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கும் வல்லமை வாய்ந்தது.

லம்போர்கினி ஹுராகென் எவோ கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. எஞ்சின் சக்தி அனைத்து சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது. இந்த காரில் டைட்டானியத்தாலான இன்டேக் வால்வுகளும், இலகுவான புகைப்போக்கி அமைப்பும் இணைந்து அலாதியான சப்தத்தை வெளிப்படுத்தும்.

லம்போர்கினி ஹுராகென் எவோ கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய லம்போர்கினி ஹூராகென் எவோ கார் 1,422 கிலோ எடை கொண்டது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 2.9 வினாடிகளிலும், 0 - 200 கிமீ வேகத்தை 9.0 வினாடிகளிலும் எட்டிவிடும். மணிக்கு 325 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

லம்போர்கினி ஹுராகென் எவோ கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் லம்போர்கினி நிறுவனத்தின் விசேஷமான டைனமிக்கா வெய்கோலோ இன்டக்ரெட்டா (LDVI) என்ற நவீன கட்டுப்பாட்டு தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொழில்நுட்பமானது ரியர் வீல் ஸ்டீயரிங் சிஸ்டத்தையும், டார்க் வெக்டரிங் சிஸ்டத்தையும் ஒருங்கே கட்டுப்படுத்தும் திறனை பெற்றிருக்கிறது. இதனால், எந்த வேகத்திலும், சாலை நிலையிலும் காரை மிகுந்த கட்டுப்பாட்டுடன் ஓடடுனர் செலுத்த முடியும்.

லம்போர்கினி ஹுராகென் எவோ கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இதுதவிர்த்து, லம்போர்கினி பியட்டாஃபார்மா இனர்ஷியல் (LPI) என்ற தொழில்நுட்பமும் உள்ளது. சமநிலைப்படுத்தி சென்சார்கள் உதவியுடன் வேகத்திற்கு தக்கவாறு புவியீர்ப்பு மைய விசையிலிருந்து கார் விலகாதவாறு செலுத்துவதற்கான வாய்ப்பை இந்த தொழில்நுட்பம் வழங்கும்.

லம்போர்கினி ஹுராகென் எவோ கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் மேக்னட்டோ ரியோலாஜிக்கல் என்ற மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. LPI தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான கட்டுப்பாட்டு சமிக்ஞைகளுக்கு தக்கவாறு இதன் சஸ்பென்ஷன் டேம்பர் அமைப்பு மாற்றங்களை செய்துகொள்ளும்.

லம்போர்கினி ஹுராகென் எவோ கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் 8.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனை கெஸ்ச்சர் கன்ட்ரோல் எனப்படும் கை அசைவு மற்றும் தொடுதிரை மூலமாக கட்டுப்படுத்த முடியும். ஆப்பிள் கார் ப்ளே செயலியை சப்போர்ட் செய்யும்.

லம்போர்கினி ஹுராகென் எவோ கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த புதிய மாடல் அறிமுகம் குறித்து லம்போர்கினி நிறுவனத்தினன் ஆசிய பசிபிக் பிராந்திய தலைமை செயல் அதிகாரி மேட்டியோ ஓர்டென்ஸி குறிப்பிடுகையில்," ஹூராகென் எவோ கார் சிறப்பம்சங்களில் முன்மாதிரி மாடலாக இருக்கும். எளிதான ஓட்டுதல் முறை, செயல்திறன் மிக்க எஞ்சின் என அனைத்து ஓட்டுதல் நிலைகளிலும் சிறப்பான உணர்வை வழங்கும்," என்று கூறினார்.

லம்போர்கினி ஹுராகென் எவோ கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய லம்போர்கினி ஹூராகென் எவோ கார் ரூ.3.73 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பல கூடுதல் அம்சங்களுடன் வந்துள்ள இந்த புதிய சூப்பர் கார் விரும்பிகளின் நம்பர்- 1 தேர்வாக தொடர்ந்து இருக்கும் என்று நம்பலாம்.

Most Read Articles
English summary
Lamborghini India has launched the new Huracan EVO at a price of Rs 3.73 crore (ex-showroom). The standard Lamborghini Huracan has now been discontinued and according to Lamborghini, the Huracan EVO is a facelift but going by the features, this is much more than just a facelift.
Story first published: Saturday, February 9, 2019, 12:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X