லம்போர்கினி நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் சூப்பர் கார் வெளியீடு!

லம்போர்கினி நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் வகை சூப்பர் கார் மாடலின் படங்கள், விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

லம்போர்கினி நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் சூப்பர் கார் வெளியீடு!

சூப்பர் கார் தயாரிப்பில் உலக புகழ்பெற்ற லம்போர்கினி நிறுவனம் விரைவில் நடக்க இருக்கும் பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் புதிய சூப்பர் கார் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. லம்போர்கினி ஷான் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த கார் அந்நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் சூப்பர் கார் மாடலாக வர இருக்கிறது.

லம்போர்கினி நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் சூப்பர் கார் வெளியீடு!

ஆம், இந்த காரில் பெட்ரோல் எஞ்சின், திறன்வாய்ந்த சூப்பர்கெப்பாசிட்டர் மற்றும் சக்திவாய்ந்த மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 6.5 லிட்டர் வி12 எஞ்சின் உள்ளது. இதனுடன் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் இணைக்கப்பட்டு இருக்கிறது.

லம்போர்கினி நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் சூப்பர் கார் வெளியீடு!

மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்தின் மூலமாக அதிகபட்சமாக 33 பிஎச்பி பவரை இந்த கார் பெற முடியும். மொத்தமாக 808 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இந்த கார் வர இருக்கிறது. அவென்டேடார் காரில் பயன்படுத்தப்படும் அதே சூப்பர்கெப்பாசிட்டர் வகை பேட்டரி பயன்படுத்தப்படுகிறது.

லம்போர்கினி நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் சூப்பர் கார் வெளியீடு!

இதனால், இந்த கார் வெறும் 2.8 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் திறனை பெற்றுள்ளது. மணிக்கு 350 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை பொருந்தியது. அதாவது, இதுதான் லம்போர்கினி நிறுவனம் தயாரித்த கார்களில் அதிக சக்திவாய்ந்ததாக குறிப்பிடப்படுகிறது.

லம்போர்கினி நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் சூப்பர் கார் வெளியீடு!

இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் சூப்பர்கெப்பாசிட்டரானது மிகவும் திறன் வாய்ந்த மின் சேமிப்பு திறனையும், மின் மோட்டாருக்கு மிக விரைவாக வழங்கும் சிறப்பையும் பெற்றுள்ளது. மேலும், எடையும் மிக குறைவானது. கார் மணிக்கு 130 கிமீ வேகத்தை தாண்டும்போது, இதன் மின்மோட்டார் தானியங்கி முறையில் அணைந்து விடும். அதன்பிறகு பெட்ரோல் எஞ்சினில் மட்டுமே இயங்கும்.

லம்போர்கினி நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் சூப்பர் கார் வெளியீடு!

லம்போர்கினியின் சக்திவாய்ந்த மாடலாக விற்பனையில்ல உள்ள அவென்டேடார் எஸ்விஜே மாடலைவிட இது அதிக திறன் வாய்ந்த மாடலாக வர இருக்கிறது. லம்போர்கினி ஷான் கார் வடிவமைப்பிலும் மிக அசத்தலாக இருக்கிறது.

லம்போர்கினி நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் சூப்பர் கார் வெளியீடு!

அடுத்த வாரம் துவங்க இருக்கும் லம்போர்கினி ஷான் கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. லம்போர்கினியின் முதல் ஹைப்ரிட் சூப்பர் கார் என்பதுடன், அந்நிறுவனத்தின் அதிசக்திவாய்ந்த மாடல் என்பதால், பெரும் எதிர்பார்ப்பை சூப்பர் கார் பிரியர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

Most Read Articles
English summary
Italian supercar maker, Lamborghini has revealed the details and images of all new hybrid supercar - Sian.
Story first published: Wednesday, September 4, 2019, 11:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X