டாடா ஹாரியர் அடிப்படையில் உருவாகும் லேண்ட்ரோவர் எஸ்யூவி!

டாடா ஹாரியர் உருவாக்கப்பட்ட அதே கட்டமைப்புக் கொள்கையின் அடிப்படையில் விலை குறைவான புதிய எஸ்யூவி மாடலை லேண்ட்ரோவர் உருவாக்கி வருகிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா ஹாரியர் அடிப்படையில் உருவாகும் லேண்ட்ரோவர் எஸ்யூவி!

இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் சொகுசு கார் நிறுவனங்கள் டாடா மோட்டார்ஸ் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த நிலையில், லேண்ட்ரோவர் நிறுவனத்தின் டி-8 என்ற கட்டமைப்புக் கொள்கையை தழுவி வகுக்கப்பட்ட புதிய ஒமேகா ஆர்க் எனற புதிய கட்டமைப்புத் தத்துவத்தின் கீழ்தான் டாடா ஹாரியர் எஸ்யூவி உருவாக்கப்பட்டது.

டாடா ஹாரியர் அடிப்படையில் உருவாகும் லேண்ட்ரோவர் எஸ்யூவி!

லேண்ட்ரோவர் எல்-8 பிளாட்ஃபார்மின் கொள்கையில் கட்டமைக்கப்படும் எஸ்யூவிகளைவிட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஒமேகா ஆர்க் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட ஹாரியர் விலை மூன்றில் ஒரு பங்கு என்ற அளவில் நிர்ணயிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதேநேரத்தில், லேண்ட்ரோவர் எஸ்யூவிகளின் கையாளுமை மற்றும் இதர எஸ்யூவி அம்சங்களில் எந்த குறைபாடும் இல்லாத வகையில் சிறப்பாக இருக்கிறது.

டாடா ஹாரியர் அடிப்படையில் உருவாகும் லேண்ட்ரோவர் எஸ்யூவி!

இந்த நிலையில், ஒமேகா ஆர்க் பிளாட்ஃபார்ம் கட்டமைப்புக் கொள்கையானது லேண்ட்ரோவர் நிறுவனத்தை கவர்ந்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, டாடா ஹாரியர் உருவாக்கப்பட்ட ஒமேகா ஆர்க் கட்டமைப்புக் கொள்கையின் கீழ், விலை குறைவான புதிய எஸ்யூவியை உருவாக்கும் முனைப்பில் லேண்ட்ரோவர் இறங்கி இருக்கிறது.

டாடா ஹாரியர் அடிப்படையில் உருவாகும் லேண்ட்ரோவர் எஸ்யூவி!

அதாவது, டாடா மோட்டார்ஸின் ஒமேகா ஆர்க் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் கார்கள் லேண்ட்ரோவர் எல்-8 பிளாட்ஃபார்மை விட மிக குறைவான செலவீனத்தை வழங்குகிறது. எனவே, இதில் சிறிய மாறுதல்களுடன் தனது புதிய பட்ஜெட் சொகுசு எஸ்யூவி காரை உருவாக்குவதற்கான பணிகளை லேண்ட்ரோவர் துவங்கி இருக்கிறது.

டாடா ஹாரியர் அடிப்படையில் உருவாகும் லேண்ட்ரோவர் எஸ்யூவி!

ஏற்கனவே லேண்ட்ரோவர் நிறுவனம் கைவிட்ட எல்-860 என்ற குறியீட்டுப் பெயரிலேயே லேண்ட்ரோவர் நிறுவனத்தின் இந்த விலை குறைவான புதிய சொகுசு எஸ்யூவி கார் உருவாக்கப்பட இருக்கிறது. இந்த எஸ்யூவி இந்தியாவுக்காக லேண்ட்ரோவர் நிறுவனம் உருவாக்கியதுடன், புனேயில் உள்ள டாடா மோட்டார்ஸ் ஆலையில் உற்பத்தி செய்யும் திட்டமும் இருந்தது. ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் கைவிடப்பட்ட இந்த திட்டத்திற்கு லேண்ட்ரோவர் மீண்டும் புத்துயிர் கொடுத்துள்ளது.

டாடா ஹாரியர் அடிப்படையில் உருவாகும் லேண்ட்ரோவர் எஸ்யூவி!

அதேநேரத்தில், தற்போது உருவாக்கப்பட்டு வரும் புதிய எல்-851 எஸ்யூவியானது முதலில் இங்கிலாந்திலும், பின்னர் ஐரோப்பிய நாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். அதன்பிறகு இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு வரும்.

டாடா ஹாரியர் அடிப்படையில் உருவாகும் லேண்ட்ரோவர் எஸ்யூவி!

டாடா ஹாரியர் எஸ்யூவியைவிட சிறப்பான கையாளுமை மற்றும் உயர்தர பாகங்கள் பயன்படுத்தப்படும். இந்த காரில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் இடம்பெறும். அத்துடன், முன்புறத்திலும், பின்புறத்திலும் மல்டி லிங்க் சஸ்பென்ஷன் இடம்பெற்றிருக்கும்.

டாடா ஹாரியர் அடிப்படையில் உருவாகும் லேண்ட்ரோவர் எஸ்யூவி!

2021ம் ஆண்டு வெளிநாடுகளில் புதிய லேண்ட்ரோவர் எஸ்யூவியானது இந்திய மதிப்பில் ரூ.25 லட்சம் பட்ஜெட்டில் அறிமுகமாகும் வாய்ப்புள்ளது. இந்தியாவில் ரூ.30 லட்சம் முதல் ரூ.35 லட்சத்தில் எதிர்பார்க்கலாம். ஆடி க்யூ3, மெர்சிடிஸ் ஜிஎல்ஏ, வால்வோ எக்ஸ்சி40, பிஎம்டபிள்யூ எக்ஸ்1 ஆகிய ஆரம்ப விலை சொகுசு எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Source: Autocar UK

Most Read Articles
English summary
According to report, Land Rover is working on new SUV codenamed L-860 and will be postioned below Defender SUV.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X