லெக்சஸ் நிறுவனத்தின் கூபே ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது!

லெக்சஸ் நிறுவனத்தின் எல்சி500எச் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

லெக்சஸ் நிறுவனத்தின் கூபே ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது!

இந்தியாவில் விலை உயர்ந்த கார்களுக்கான மார்க்கெட் வலுவான வர்த்தகத்தை பெற்றிருப்பதுடன், மெல்ல அதிகரித்தும் வருகிறது. எனவே, பல புதிய மாடல்களை களமிறக்கி சந்தையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் லெக்சஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதன்படி, தனது மிகவும் பிரிமீயம் ரகத்திலான புதிய எல்சி500எச் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

லெக்சஸ் நிறுவனத்தின் கூபே ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது!

கடந்த 2012ம் ஆண்டு பார்வைக்கு கொண்டு வரப்பட்ட எல்எஃப்-எல்சி கான்செப்ட் அடிப்படையில் இந்த புதிய கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2017ம் ஆண்டு இந்த கார் வெளிநாடுகளில் விற்பனைக்கு அறிமுகமானது.

லெக்சஸ் நிறுவனத்தின் கூபே ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது!

இந்த ஆண்டு துவக்கத்தில் புதுப்பொலிவுடன் கூடிய லெக்சஸ் எல்சி500எச் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல்தான் இந்தியாவில் வரும் 2020ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

லெக்சஸ் நிறுவனத்தின் கூபே ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது!

ஐரோப்பிய நிறுவனங்களின் ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களிலிருந்து பல தனித்துவமான அம்சங்களுடன் இந்த கார் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த கார் ஜிடி ரகத்திலான சக்திவாய்ந்த கார் மாடலாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. கூபே பாடி ஸ்டைலில் மிக தனித்துவமான டிசைன் அம்சங்களுடன் இந்த கார் வசீகரிக்கிறது.

லெக்சஸ் நிறுவனத்தின் கூபே ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

குறிப்பாக, முன்புறத்தில் முடிச்சு போன்ற மிக பிரம்மாண்டமான க்ரில் அமைப்பு, கூர்மையான ஹெட்லைட் க்ள்ஸ்ட்டர்கள், எல்இடி பகல்நேர விளக்குகள், 20 அங்குல அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள், பின்புறத்தில் தாழ்ந்து செல்லும் கூரை அமைப்புடன் 2 டோர் மாடலாக மிக கவர்ச்சியாக இருக்கிறது.

லெக்சஸ் நிறுவனத்தின் கூபே ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது!

இந்த காரின் உட்புறத்தில் அல்கான்ட்ரா லெதர், கார்பன் ஃபைபர் பாகங்களுடன் பிரமீயமாக உள்ளது. 10.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஸ்டீயரிங் வீல் கைகளுக்கு லாவகமாக அமைக்கப்பட்டு இருக்கிறது. க்ரூஸ் கன்ட்ரோல், டிரைவிங் மோடுகள் உள்ளிட்ட இதர தொழில்நுட்ப அம்சங்களும் உள்ளன.

லெக்சஸ் நிறுவனத்தின் கூபே ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது!

கார் அதிவேகத்தில் செல்லும்போது, முன்புறத்தில் அமரும் பயணி கெட்டியாக பிடித்துக் கொண்டு பயணிப்பதற்கு ஏதுவாக விசேஷ கைப்பிடி அமைப்பும் இதன் முக்கிய அம்சமாக கூறலாம். இதன்மூலமாக, இந்த காரின் செயல்திறன் எவ்வாறு இருக்கும் என்பது குறித்தும் உணர முடிகிறது.

லெக்சஸ் நிறுவனத்தின் கூபே ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது!

வெளிநாடுகளில் 5.0 லிட்டர் வி8 எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்தியாவில் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அதாவது, 3.5 லிட்டர் வி6 எஞ்சின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்ததப்படுகிறது. இந்த ஹைப்ரிட் மாடலானது 349 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

லெக்சஸ் நிறுவனத்தின் கூபே ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது!

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 4.7 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 249 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கிறது. இந்த கார் செயல்திறனில் மிரட்டலாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

லெக்சஸ் நிறுவனத்தின் கூபே ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது!

மிக ஸ்டைலான தோற்றத்துடன், அதிசெயல்திறன் மிக்க கூபே ரக ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக லெக்சஸ் எல்சி500எச் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் என்று நம்பலாம்.

Most Read Articles
மேலும்... #லெக்சஸ் #lexus
English summary
The Lexus LC500h will soon be launched in the Indian market. Lexus is preparing to launch the 2-door coupe in the Indian market, targeting sportscar buyers. The Lexus LC500h is a GT car with sporty traits and is currently the flagship coupe in Lexus' line-up.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X