லெக்சஸ் எல்எம் சொகுசு மினி வேன் அறிமுகம்!

டொயோட்டா நிறுவனத்தின் சொகுசு கார் பிராண்டான லெக்சஸ் தனது முதல் சொகுசு ரக மினி வேனை ஷாங்காய் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்துள்ளது.

லெக்சஸ் எல்எம் சொகுசு மினி வேன் அறிமுகம்!

டொயோட்டா அல்ஃபார்டு மினி வேன் அடிப்படையிலான சொகுசு ரக மினி வேனாக மாற்றங்கள் செய்யப்பட்டு வந்துள்ளது. லெக்சஸ் எல்எம் என்ற பெயரில் இந்த புதிய சொகுசு ரக மினி வேன் குறிப்பிடப்படுகிறது.

லெக்சஸ் எல்எம் சொகுசு மினி வேன் அறிமுகம்!

வழக்கம்போல் லெக்சஸ் கார்களுக்கு உரித்தான பிரம்மாண்டமான க்ரில் அமைப்பு முகப்பில் மிரட்டலாக காட்சி தருகிறது. ஆனால், ஹெட்லைட் க்ளஸ்ட்டர் மிக கூர்மையான டிசைன் தாத்பரியங்களுடன் மிக கச்சிதமாக கொடுக்கப்பட்டுள்ளது.

லெக்சஸ் எல்எம் சொகுசு மினி வேன் அறிமுகம்!

இந்த புதிய சொகுசு மினி வேன் இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. லெக்சஸ் எல்எம் 350 என்ற மாடலில் 3.5 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அடுத்து 2.5 லிட்டர் அட்கின்சன் 4 சிலிண்டர் எஞ்சின் ஹைப்ரிட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில், ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனும் கொடுக்கப்படுகிறது.

லெக்சஸ் எல்எம் சொகுசு மினி வேன் அறிமுகம்!

இந்த காரில் சொகுசு அம்சங்களுக்கு பஞ்சமில்லை. பின்புற பயணிகளுக்காக 26 அஙகுல டிவி திரை பொருத்தப்பட்டு இருக்கிறது. குடை வைப்பதற்கான தனி அறை உள்ளிட்ட பிரத்யேக அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

லெக்சஸ் எல்எம் சொகுசு மினி வேன் அறிமுகம்!

சீனாவில் விற்பனைக்கு செல்லும் இந்த புதிய மினி வேன் 7 சீட்டர் மாடலில் கிடைக்கும். வாடிக்கையாளர் விருப்பத்தின்பேரில் 4 சீட்டர் சொகுசு ரக மாடலிலும் கிடைக்கும். இந்த மாடலில் இரண்டு சாய்மான வசதி கொண்ட இருக்கைகள் கொடுக்கப்படுகிறது.

லெக்சஸ் எல்எம் சொகுசு மினி வேன் அறிமுகம்!

மேலும், பெரிய ஆர்ம்ரெஸ்ட் அமைப்பில் தொடு உணர் கட்டுப்பாட்டு பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில், 14 லிட்டர் குளிர்சாதனப் பெட்டி, 19 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்ட் சிஸ்டம், வெளிப்புற சப்தத்தை குறைக்கும் விசேஷ கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன.

லெக்சஸ் எல்எம் சொகுசு மினி வேன் அறிமுகம்!

இந்த காரில் விசேஷமான ஸ்விங் வால்வ் ஷாக் அப்சார்பர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலமாக, உட்புறத்தில் அலுங்கல் குலுங்கல் இல்லாத பயண அனுபவத்தை பயணிகள் பெற முடியும். இந்த கார் பியர்ல் ஒயிட் மற்றும் கருப்பு வண்ணங்களில் கிடைக்கும்.

லெக்சஸ் எல்எம் சொகுசு மினி வேன் அறிமுகம்!

இந்த கார் சீனாவில் முதலில் விற்பனைக்கு சென்றாலும், ஓரிரு ஆண்டுகளில் இந்திய மார்க்கெட்டிலும் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

Most Read Articles
மேலும்... #லெக்சஸ்
English summary
Japan based Lexus revealed a minivan called the LM at Auto Shanghai 2019. Like most models in the Lexus line up, the LM is based on a Toyota. The LM is the third-generation Alphard minivan, and features the largest grille ever seen on one of these!
Story first published: Wednesday, April 17, 2019, 10:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X