லெக்சஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் சொகுசு கார் வெளியீடு!

லெக்சஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் சொகுசு காரின் படங்கள் மற்றும் விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

லெக்சஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் சொகுசு கார் வெளியீடு!

ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனத்தின் சொகுசு கார் பிராண்டான லெக்சஸ் செயல்பட்டு வருகிறது. இதுவரை லெக்சஸ் நிறுவனம் ஹைப்ரிட் எனப்படும் இரட்டை எரிநுட்பத்திலான கார்களை தயாரித்து விற்பனை செய்வதில் பிரபலமாக உள்ளது.

லெக்சஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் சொகுசு கார் வெளியீடு!

இந்த நிலையில், முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் சொகுசு காரை லெக்சஸ் வெளியிட்டு இருக்கிறது. லெக்சஸ் UX300 என்ற பெயரில் இந்த கார் வர இருக்கிறது. விரைவில் சீனாவில் நடைபெறும் குவாங்ஸோ மோட்டார் ஷோவில் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் பொது தரிசனத்திற்கு வர இருக்கிறது.

லெக்சஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் சொகுசு கார் வெளியீடு!

புதிய லெக்சஸ் யுஎக்ஸ்300 எலெக்ட்ரிக் கார் மிகவும் தனித்துவமான டிசைன் அம்சங்களுடன் க்ராஸ்ஓவர் ரகத்தில் இடம்பெறுகிறது. சாதாரண யுஎக்ஸ் காரின் டிசைன் அம்சங்களுடன் சிறிய மாற்றங்களை செய்து எலெக்ட்ரிக் வெர்ஷனாக லெக்சஸ் உருவாக்கி இருக்கிறது.

லெக்சஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் சொகுசு கார் வெளியீடு!

புதிய லெக்சஸ் யுஎக்ஸ்300 எலெக்ட்ரிக் காரில் 54.3kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் முன்புற ஆக்சிலில் மின் மோட்டார் பொருத்தப்பட்டு சக்கரங்களுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதன் பேட்டரியும், மின் மோட்டாரும் இணைந்து அதிகபட்சமாக 201 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

லெக்சஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் சொகுசு கார் வெளியீடு!

இதன் பேட்டரியானது தரைத் தளத்தில் பொருத்தப்பட்டு இருப்பதால், புவி ஈர்ப்பு மைய விசைக்கு இசைவாக இருப்பதால், அதிக நிலைத்தன்மையை பெறும். இந்த காரின் கேபின் மிகவும் சிறப்பானதாக லெக்சஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

லெக்சஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் சொகுசு கார் வெளியீடு!

அதாவது, அதிர்வுகள், சப்தம் குறைவான கார் மாடலாக இது இருக்கும். இந்த காரில் ஆக்டிவ் சவுண்ட் கன்ட்ரோல் சிஸ்டம் மூலமாக, சப்தத்தை ஏற்படுத்தி பயணிப்பவர்களுக்கு சாதாண பெட்ரோல், டீசல் கார்களில் பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

லெக்சஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் சொகுசு கார் வெளியீடு!

இந்த காரின் பேட்டரி அதிக சார்ஜ் ஆவதை தவிர்க்கும் தொழில்நுட்பம் உள்ளதால், பேட்டரி நீடித்த உழைப்பை வழங்கும். அதேபோன்று, சீராக மின் திறனை வழங்கும் தொழில்நுட்பமும் இந்த பேட்டரிக்காக வழங்கப்பட்டுள்ளது.

லெக்சஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் சொகுசு கார் வெளியீடு!

சாதாரண லெக்சஸ் யுஎக்ஸ் கார் போலவே இன்டீரியர் இருக்கிறது. தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவையும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

லெக்சஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் சொகுசு கார் வெளியீடு!

அடுத்த ஆண்டு சீனாவிலும், தாயகமான ஜப்பானிலும் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மெர்சிடிஸ் பென்ஸ் EQC மற்றும் ஆடி இ-ட்ரோன் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #லெக்சஸ் #lexus
English summary
Lexus has revealed of its first UX300 electric car ahead of its debut at the Guangzhou Motor Show in China.
Story first published: Friday, November 22, 2019, 17:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X