பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னை... லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்...

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மக்கள் மறந்திருந்த பிரச்னை ஒன்று தற்போது பூதாகரமாக வெடிக்க தொடங்கியுள்ளது. இதனால் பிரதமர் மோடிக்கு, தேர்தலில் பெரும் சிக்கல் உண்டாகலாம்.

பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னை... லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்...

நாடாளுமன்ற பொது தேர்தல் நெருங்கி வருவதால், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகள் சூடுபிடித்துள்ளன.

பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னை... லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்...

வரும் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்களில், பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான விடை மார்ச் முதல் வாரத்தில், அதாவது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்து விடும்.

பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னை... லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்...

மார்ச் முதல் வாரத்தில், தேர்தல் தேதியை அறிவிக்க தேர்தல் ஆணையமும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. தற்போதைய சூழலில், தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களை தவிர்த்து விட்டு பார்த்தால், நாடு முழுக்க பாஜக வலுவாக இருப்பது போன்ற தோற்றம் நிலவுகிறது.

பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னை... லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்...

பல்வேறு முன்னணி நிறுவனங்களின் கருத்து கணிப்புகளும் கூட ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் என்றே கூறுகின்றன. ஆனால் சமீப காலமாக பொது மக்கள் மறந்திருந்த பிரச்னை ஒன்று தற்போது பூதாகரமாக வெடிக்க தொடங்கியுள்ளது.

பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னை... லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்...

இந்த பிரச்னை தீவிரம் அடைந்தால், எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில், ஆளும் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்பது உறுதி. பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி பறிபோனாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.

பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னை... லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்...

இந்தியாவிடம் சொல்லிக்கொள்ளும்படியாக கச்சா எண்ணெய் வளம் இல்லை என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். எனவே வெளிநாடுகளிடம் இருந்து, குறிப்பாக எண்ணெய் வளம் மிக்க அரபு நாடுகளிடம் இருந்துதான் கச்சா எண்ணெய்யை இந்தியா அதிகம் இறக்குமதி செய்கிறது.

பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னை... லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்...

தற்போது சவுதி அரேபியா, கத்தார், ஈரான், ஈராக் மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகள்தான், இந்தியாவின் 85 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய முக்கிய எரிபொருட்களின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் மிகவும் அத்தியாவசியமான ஒன்று.

பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னை... லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்...

இந்த சூழலில், இந்தியாவின் எரிபொருள் தேவை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் மட்டும் இந்தியா மொத்தம் 18.34 மில்லியன் டன் எரிபொருளை நுகர்ந்துள்ளது. இது 2018ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 6.4 சதவீதம் அதிகமாகும்.

பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னை... லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்...

கச்சா எண்ணெய் வளம் அறவே இல்லாத ஒரு நாட்டின் எரிபொருள் தேவை இந்த வேகத்தில் உயர்ந்தால், அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. முதலில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக பெரும் தொகையை செலவிட வேண்டியதிருக்கும்.

பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னை... லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்...

அதுவும் இந்தியாவின் மக்கள் தொகையை வைத்து கணக்கிடுகையில், பல லட்சம் கோடிகளை நிச்சயம் செலவிட்டாக வேண்டிய கட்டாயமான சூழல் உருவாகும். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்று விடும்.

பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னை... லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்...

தற்போதைய நிலையிலேயே இந்தியா ஒரு ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாயை, கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவதாக தட்டுப்பாடு ஏற்பட்டு விலை கடுமையாக உயரும்.

பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னை... லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்...

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான மத்திய, மாநில அரசுகளின் அதிகப்படியான வரி விதிப்பு ஆகிய காரணங்களால், இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை, பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் மிக கடுமையாக உயர்ந்து வந்தது.

பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னை... லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்...

இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை 90 ரூபாயை கடந்த அவலம், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அரங்கேறியது. இதுதவிர இந்தியாவை பொறுத்தவரை பெட்ரோல் விலையை காட்டிலும், டீசல் விலை குறைவாகதான் இருக்கும்.

பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னை... லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்...

ஆனால் வரலாற்றில் முதல் முறையாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகம் ஆனது. இதன் தாக்கம் தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலில் எதிரொலித்தது.

பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னை... லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்...

மேற்கண்ட 5 மாநிலங்களின் சட்டசபைகளுக்கு, கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் தேர்தல் நடைபெற்றது. ஆனால் இதில் ஒரு மாநிலத்தில் கூட பாஜக ஆட்சியை பிடிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சிதான் நடைபெற்று வந்தது.

பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னை... லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்...

ஆனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலியால், மோடி அலை ஓய்ந்து, காங்கிரஸிடம் ஆட்சியை பறிகொடுத்தது பாஜக. போதாக்குறைக்கு 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தும் பார்த்தது.

பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னை... லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்...

இருந்தபோதும் எதுவும் எடுபடவில்லை. ஆனால் அதன்பின் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்ததால், இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை ஓரளவிற்கு குறைந்தது. என்றாலும் கச்சா எண்ணெய் விலை சரிவின் முழு பலன் மக்களுக்கு தரப்படவில்லை.

பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னை... லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்...

ஓரளவிற்கு மட்டுமே பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. என்றாலும் ஓரளவிற்கு விலை குறைந்ததால், பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னையை மக்கள் மறந்தே விட்டனர். ஆனால் தற்போது எரிபொருள் தேவை அதிகரித்து கொண்டே வருகிறது.

பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னை... லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்...

இதன் விளைவாக தட்டுப்பாடு ஏற்பட்டு, எப்போது வேண்டுமானாலும் பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடிய அபாயம் நிலவி வருகிறது. ஒருவேளை பெட்ரோல், டீசல் விலை மீண்டும் வரலாறு காணாத வகையில் அதிகரித்தால், நாடாளுமன்ற தேர்தலில் அது பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னை... லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்...

முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தபோது, வரிகளை குறைக்க வேண்டும், ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றன.

பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னை... லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்...

ஆனால் இதனை பெரிதாக கண்டு கொள்ளாத மோடி தலைமையிலான மத்திய அரசு, பெயரளவிற்கு மட்டும் சற்றே வரியை குறைத்தது. அத்துடன் மாநில அரசுகளும் ஓரளவிற்கு வரியை குறைத்தன. என்றாலும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னை... லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்...

தற்போது வரை இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல்தான் உள்ளது. தற்போது உள்ள பெட்ரோல், டீசல் விலை கூட அதிகம்தான் என்பதே பெரும்பாலான வாகன ஓட்டிகளின் கருத்து. ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டால், அதன் விலை இன்னும் கணிசமாக குறையலாம்.

பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னை... லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்...

ஆனால் தற்போது வரை ஜிஎஸ்டி கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. ஒருவேளை தேர்தல் நேரத்தில் ஆளும் பாஜக இதனை ஆயுதமாக பயன்படுத்தக்கூடும்.

Most Read Articles
English summary
Lok Sabha Elections 2019: India's Fuel Demand Increased By 6.4 Per cent In January. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X