டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்

லோக்சபா தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில், டோல்கேட் விஷயத்தில் மத்திய அரசு தற்போது அதிரடியான ஒரு முடிவை எடுத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட்கள் (Tollgate) அமைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் தற்போது சுமார் 500 டோல்கேட்கள் இயங்கி வருகின்றன. இதில், 41 டோல்கேட்கள் தமிழகத்தில் உள்ளன. ஆனால் மக்கள் மத்தியில் டோல்கேட்களுக்கு கடும் எதிர்ப்பு காணப்படுகிறது.

டோல்கேட்களில் அரங்கேற்றப்படும் கட்டண கொள்ளையே இதற்கு மிக முக்கியமான காரணம். அடிப்படை வசதிகள் எதையும் கொஞ்சம் கூட செய்யாமல், மிக அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதால்தான், டோல்கேட்களுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை மிக நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்த கோரிக்கைக்கு தற்போது வரை செவி சாய்க்கவில்லை.

நாட்டில் இயங்கி கொண்டுள்ள டோல்கேட்கள், முக்கியமான வருவாய் கேந்திரமாக திகழ்ந்து வருகின்றன. கடந்த 2015-16ம் ஆண்டில் மட்டும், டோல்கேட்கள் மூலமாக அரசுக்கு 6,700 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் கிடைத்துள்ளது.

டோல்கேட்கள் மூலம் அரசாங்கம் ஈட்டும் வருவாய் இன்று பல மடங்கு உயர்ந்திருக்க கூடும். இவ்வளவு வருவாய் கிடைப்பதன் காரணமாகதான் டோல்கேட்களை மூட அரசுக்கு மனம் வரவில்லை. இது போதாதென்று டோல்கேட்களில் அவ்வப்போது கட்டணம் வேறு உயர்த்தப்படுகிறது.

இந்த சூழலில் தற்போது மீண்டும் டோல்கேட் கட்டணங்களை உயர்த்தும்படி, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த துறைக்கான ஆலோசனை நிறுவனம்தான், இந்த பரிந்துரையை அமைச்சர் நிதின் கட்கரிக்கு வழங்கியிருந்தது.

டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்

குறிப்பாக கார் மற்றும் இதர சிறிய வாகனங்களுக்கான டோல்கேட் கட்டணங்களை உயர்த்த வேண்டும் என ஆலோசனை நிறுவனம் கூறியிருந்தது. வெளிநாடுகளில் இத்தகைய வாகனங்களுக்கான டோல்கேட் கட்டணம் அதிகமாக இருப்பதை அந்நிறுவனம் தனது பரிந்துரையில் மேற்கோள் காட்டியிருந்தது.

இதன் காரணமாக டோல்கேட் கட்டணங்கள் மீண்டும் உயர்ந்து விடுமோ? என்ற அச்சம் வாகன ஓட்டிகள் மத்தியில் நிலவி வந்தது. ஆனால் ET Auto வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஆலோசனை நிறுவனம் வழங்கிய கட்டண உயர்வு பரிந்துரையை அமைச்சர் நிதின் கட்கரி தற்போது அதிரடியாக நிராகரித்துள்ளார்.

எனவே டோல்கேட் கட்டணங்களை மத்திய அரசு தற்போது திருத்தியமைக்காது. தற்போது உள்ள கட்டண முறையே தொடரும். இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சற்றே நிம்மதியடைந்துள்ளனர். ஒருவேளை நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் கட்டணங்களை உயர்த்தினால், வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் என்பதை மனதில் வைத்தும், பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின் பேரிலும்தான் கட்டண உயர்வு பரிந்துரை நிராகரிக்கப்பட்டிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்

எது எப்படியோ தற்போதைக்கு கட்டண உயர்வு இல்லை என்பதால், வாகன ஓட்டிகள் சற்றே நிம்மதி பெரு மூச்சு விட்டுள்ளனர். அதே சமயம் ஆலோசனை நிறுவனம் சார்பில், மேலும் சில பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.

மூன்று-ஆக்ஸில் (Three-axle) மற்றும் மல்டி ஆக்ஸில் (Multi-axle) வாகனங்களுக்கான டோல்கேட் கட்டணங்களை குறைக்க வேண்டிய தேவை குறித்து, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மூத்த அதிகாரிகளிடம் ஆலோசனை நிறுவனம் விளக்கியுள்ளது.

இதன் மூலமாக அத்தியாவசிய பொருட்களின் விலை குறைய வாய்ப்புகள் இருப்பதையும் ஆலோசனை நிறுவனம் விவரித்துள்ளது. இதுதவிர மிக மோசமாக பராமரிக்கப்படும் சாலைகளில், கட்டணங்களை குறைக்கும் திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சாலையின் மேற்பரப்பினுடைய தரம் மற்றும் விளக்குகள் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக வைத்து ஒட்டுமொத்த பராமரிப்பு தரம் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் எனவும் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.

டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்

இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சக உயர் அதிகாரிகள் கூறுகையில், ''ஆலோசனை நிறுவனம் செய்துள்ள சில பரிந்துரைகள், அருமையாக உள்ளன. அவை மக்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்.

ஆனால் இன்னும் ஒரு சில நாட்களில் நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவுள்ளது. அதற்கு முன்னதாக விதிகளை திருத்தியமைப்பது என்பது மிகவும் கடினமான காரியம். எங்களுக்கு போதிய அளவிற்கு கால அவகாசம் இல்லை'' என்றனர்.

Most Read Articles
English summary
Lok Sabha Elections 2019: Toll Fees For Cars And Small Vehicles Won’t Rise, Modi Govt Says. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X