ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிமீ பயணம்... உலகின் மலிவான விலை எலெக்ட்ரிக் கார் இதுதான்...

ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிலோ மீட்டர்கள் பயணம் செய்யும் வகையில், உலகின் மிக மலிவான விலை கொண்ட எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிலோ மீட்டர்கள் பயணம் செய்யும் வகையில், உலகின் மிக மலிவான விலை கொண்ட எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை எவ்வளவு? என தெரிந்தால் நீங்கள் நிச்சயமாக ஆச்சரியப்படுவீர்கள்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிமீ பயணம்... உலகின் மலிவான விலை எலெக்ட்ரிக் கார் இதுதான்...

சர்வதேச அளவில் டூவீலர், கார், பஸ் மற்றும் லாரி உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால், அவை இயங்க தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களின் தேவையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிமீ பயணம்... உலகின் மலிவான விலை எலெக்ட்ரிக் கார் இதுதான்...

இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்க்கான தேவையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. தேவை அதிகரிப்பால் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, சில சமயங்களில், சர்வதேச சந்தையில் அதன் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து விடுகிறது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிமீ பயணம்... உலகின் மலிவான விலை எலெக்ட்ரிக் கார் இதுதான்...

இதன் காரணமாக கச்சா எண்ணெய் வளம் இல்லாத அனைத்து நாடுகளும் பொருளாதார ரீதியில் வெகுவாக பாதிக்கப்படுகின்றன. நன்கு வளர்ச்சியடைந்த அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிமீ பயணம்... உலகின் மலிவான விலை எலெக்ட்ரிக் கார் இதுதான்...

சவுதி அரேபியா, ஈரான், ஈரான், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமீரகம் உள்ளிட்ட நாடுகளிடம்தான் கச்சா எண்ணெய் வளம் அபரிமிதமாக உள்ளது. இந்த நாடுகளிடம் இருந்துதான் உலகின் பெரும்பாலான நாடுகள் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து கொண்டுள்ளன.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிமீ பயணம்... உலகின் மலிவான விலை எலெக்ட்ரிக் கார் இதுதான்...

கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மட்டுமே மிகப்பெரிய தொகையை செலவிட்டு வருவதால், அந்த நாடுகளின் பொருளாதாரம் மிக மிக கடுமையாக பாதிக்கப்படுகிறது. நமது இந்தியாவை இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக எடுத்து கொள்ளலாம்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிமீ பயணம்... உலகின் மலிவான விலை எலெக்ட்ரிக் கார் இதுதான்...

கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மட்டும் ஒரு ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாயை இந்தியா செலவிட்டு வருகிறது!! எனவே இந்தியா உள்பட உலகின் அனைத்து நாடுகளும் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க மிக தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிமீ பயணம்... உலகின் மலிவான விலை எலெக்ட்ரிக் கார் இதுதான்...

இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு அதிகரித்தால், கச்சா எண்ணெய் இறக்குமதி குறைவதோடு, சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிமீ பயணம்... உலகின் மலிவான விலை எலெக்ட்ரிக் கார் இதுதான்...

பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களை போல், எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது. எனவேதான் உலகின் பல்வேறு நாடுகளும் போட்டி போட்டி கொண்டு எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்து வருகின்றன.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிமீ பயணம்... உலகின் மலிவான விலை எலெக்ட்ரிக் கார் இதுதான்...

என்றாலும் இதில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள்தான் முன்னணியில் உள்ளன. இவ்விரு நாடுகளின் அரசாங்கங்களும் வழங்கும் ஒத்துழைப்பு காரணமாக, அங்கு பல்வேறு நிறுவனங்கள் அதிநவீன வசதிகளுடன் கூடிய எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வருகின்றன.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிமீ பயணம்... உலகின் மலிவான விலை எலெக்ட்ரிக் கார் இதுதான்...

ஆனாலும் எலெக்ட்ரிக் வாகனங்களில் இருக்கும் மிகப்பெரிய குறையே அதன் விலைதான். பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களின் விலையை காட்டிலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை சற்று அதிகமாகவே உள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிமீ பயணம்... உலகின் மலிவான விலை எலெக்ட்ரிக் கார் இதுதான்...

மிக குறைவான நேரத்தில் சார்ஜ் ஏறக்கூடிய, அதே சமயம் ஒரு முறை சார்ஜ் செய்தால் மிக நீண்ட தொலைவு பயணிக்க கூடிய வகையில் தரமான பேட்டரிகளை வழங்க வேண்டி இருப்பதே, எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை மிக அதிகமாக இருப்பதற்கு மிக முக்கியமான காரணம்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிமீ பயணம்... உலகின் மலிவான விலை எலெக்ட்ரிக் கார் இதுதான்...

எலெக்ட்ரிக் வாகனங்களின் மொத்த விலையில், சுமார் 40 சதவீத தொகையானது பேட்டரிகளுக்கே சென்று விடுகிறது. இதன் காரணமாகவும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிமீ பயணம்... உலகின் மலிவான விலை எலெக்ட்ரிக் கார் இதுதான்...

எனவே மலிவான விலையில் தரமான எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய பல்வேறு நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஓரா ஆர்1 (Ora R1) எலெக்ட்ரிக் கார், உலகம் முழுவதும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிமீ பயணம்... உலகின் மலிவான விலை எலெக்ட்ரிக் கார் இதுதான்...

ஓரா ஆர்1 எலெக்ட்ரிக் காரின் விலையும், அதில் இடம்பெற்றிருக்கும் அட்டகாசமான சிறப்பம்சங்களும்தான் இதற்கு மிக முக்கிய காரணம். ஓரா ஆர்1 எலெக்ட்ரிக் காரின் விலை வெறும் 6 லட்ச ரூபாய் மட்டும்தான்!!! இதன்மூலம் உலகின் மிக மலிவான விலை கொண்ட எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை இது பெறுகிறது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிமீ பயணம்... உலகின் மலிவான விலை எலெக்ட்ரிக் கார் இதுதான்...

இன்றைய தேதியில் ஓரா ஆர்1 எலெக்ட்ரிக் காரை காட்டிலும் மலிவான விலை கொண்ட எலெக்ட்ரிக் கார் வேறு எதுவும் இல்லை. ஓரா ஆர்1 எலெக்ட்ரிக் காரில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் இன்னும் வியப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிமீ பயணம்... உலகின் மலிவான விலை எலெக்ட்ரிக் கார் இதுதான்...

ஓரா ஆர்1 எலெக்ட்ரிக் காரில், 35-kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 194 மைல்கள் வரை பயணிக்க முடியும். அதாவது 312 கிலோ மீட்டர்கள் வரை மிக தாராளமாக பயணம் செய்யலாம்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிமீ பயணம்... உலகின் மலிவான விலை எலெக்ட்ரிக் கார் இதுதான்...

எலெக்ட்ரிக் கார்களுக்கு மாறுவதில் வாடிக்கையாளர்கள் மத்தியில் தயக்கம் நிலவ, அதன் அதிகப்படியான விலை மற்றும் ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும்? என்ற சந்தேகம் ஆகியவையே மிக முக்கியமான காரணங்களாக உள்ளன.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிமீ பயணம்... உலகின் மலிவான விலை எலெக்ட்ரிக் கார் இதுதான்...

ஆனால் இவை இரண்டையும் ஓரா ஆர்1 எலெக்ட்ரிக் கார் தவிடுபொடியாக்கியுள்ளது. ஏனெனில் இதன் விலை குறைவாக உள்ளது. அத்துடன் ஒரு முறை சார்ஜ் செய்தால், 312 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிமீ பயணம்... உலகின் மலிவான விலை எலெக்ட்ரிக் கார் இதுதான்...

காரின் உரிமையாளர், ஹலோ ஓரா (Hello Ora) என்று கூறினால், ஸ்டார்ட் ஆகி விடும் வகையில், ஓரா ஆர்1 எலெக்ட்ரிக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்த காரின் மற்றொரு சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிமீ பயணம்... உலகின் மலிவான விலை எலெக்ட்ரிக் கார் இதுதான்...

சீனாவை சேர்ந்த கிரேட் வால் மோட்டார்ஸ் (Great Wall Motors) என்ற புகழ்பெற்ற ஆட்டோமொபைல் நிறுவனம்தான், ஓரா ஆர்1 எலெக்ட்ரிக் காரினை அறிமுகம் செய்துள்ளது. சீன தயாரிப்பு என அலட்சியம் செய்து விட வேண்டாம்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிமீ பயணம்... உலகின் மலிவான விலை எலெக்ட்ரிக் கார் இதுதான்...

ஏனெனில் இன்றைய நிலையில், எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில், அமெரிக்காவை காட்டிலும் சீனாதான் வெகு வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் ஜெர்மனியை சேர்ந்த லக்ஸரி கார் நிறுவனமான பிஎம்டபிள்யூ, கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கூட்டு வைத்துள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிமீ பயணம்... உலகின் மலிவான விலை எலெக்ட்ரிக் கார் இதுதான்...

எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை சீன அரசாங்கம் வெகுவாக ஊக்கப்படுத்தி கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும், கட்டாயமாக எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்தே ஆக வேண்டும் என்ற சட்டமும் அங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிமீ பயணம்... உலகின் மலிவான விலை எலெக்ட்ரிக் கார் இதுதான்...

அதாவது சீனாவில் செயல்படும் ஒரு ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனம் விற்பனை செய்யும் மொத்த வாகனங்களில், குறைந்தபட்சம் 10 சதவீத வாகனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும். எனவே வெளிநாட்டு நிறுவனங்கள் பலவும் சீன நிறுவனங்களுடன் கூட்டு வைக்க தொடங்கியுள்ளன.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிமீ பயணம்... உலகின் மலிவான விலை எலெக்ட்ரிக் கார் இதுதான்...

இதன் ஒரு பகுதியாகதான் பிஎம்டபிள்யூ நிறுவனமும், கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கூட்டு வைத்து கொண்டுள்ளது. குறைந்தபட்சம் 10 சதவீதம் என்பது தற்போது உள்ள அளவுகோலாகும். இதனை வருங்காலங்களில் இன்னும் அதிகரிக்க சீன அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிமீ பயணம்... உலகின் மலிவான விலை எலெக்ட்ரிக் கார் இதுதான்...

ஓரா ஆர்1 எலெக்ட்ரிக் கார் இந்தியாவிற்கு விற்பனைக்கு வந்தால் சிறப்பாக இருக்கும். அல்லது இதுபோல் மிகவும் குறைவான விலையில், ஒரு முறை சார்ஜ் செய்தால் மிக அதிக தொலைவு பயணம் செய்யும் வகையிலான கார்கள் விற்பனைக்கு வந்தால், வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் எலெக்ட்ரிக்கிற்கு மாறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Most Read Articles
English summary
Made In China, Great Wall Motors Launched World's Cheapest Electric Car Ora R1 For Just Rs 6 Lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X