பாதுகாப்பான பயணத்தை விரும்புவர்களுக்கு உகந்த கார் இதுதான்: க்ராஷ் டெஸ்ட் குறித்த தகவல்!

ஹோண்டா அமேஸ் காரை குளோபல் என்சிஏபி அமைப்பு க்ராஷ் டெஸ்ட் செய்து ரிசல்டை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

பாதுகாப்பான பயணத்தை விரும்புவர்களுக்கு உகந்த கார் இதுதான்: க்ராஷ் டெஸ்ட் குறித்த தகவல்!

ஹோண்டா நிறுவனம், அதன் உற்பத்தி தொழிற்சாலையை உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், இந்தியாவிலும் அந்த நிறுவனம் உற்பத்தி தொழிற்சாலைச் செயல்படுத்தி வருகிறது. இங்கு தயராகும் கார்களை உள்நாட்டு சந்தை மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றது.

பாதுகாப்பான பயணத்தை விரும்புவர்களுக்கு உகந்த கார் இதுதான்: க்ராஷ் டெஸ்ட் குறித்த தகவல்!

அவ்வாறு, ஆப்பிரிக்காவிற்காக தயார் செய்யப்பட்ட ஹோண்டா அமேஸ் காரை, குளோபல் என்சிஏபி என்ற அமைப்பு க்ராஷ் டெஸ்ட் செய்து பார்த்துள்ளது. இதில், அமேஸ் கார் ஐந்துக்கு நான்கு நட்சத்திரங்களை பெற்று சாதனைப்படுத்தியுள்ளது.

பாதுகாப்பான பயணத்தை விரும்புவர்களுக்கு உகந்த கார் இதுதான்: க்ராஷ் டெஸ்ட் குறித்த தகவல்!

குளோபல் என்சிஏபி அமைப்பானது, புதிதாக விற்பனைக்கு களமிறங்கும் கார்களை க்ராஷ் டெஸ்ட் செய்து, பயணிகளின் பாதுகாப்பில் எந்த அளவிற்கு அந்த கார் இருக்கின்றது என்ற தகவலை வெளிப்படுத்தும். அந்தவகையில், ஆப்பிரிக்காவிற்காக இந்தியாவில் தயாரான, ஹோண்டா அமேஸ் மாடலை, அந்த அமைப்பு மோதி பரிசோதனை செய்தது.

பாதுகாப்பான பயணத்தை விரும்புவர்களுக்கு உகந்த கார் இதுதான்: க்ராஷ் டெஸ்ட் குறித்த தகவல்!

இந்த பரிசோதனையில் அமேஸ் கார், பயணிகளின் பாதுகாப்பிற்கு சிறந்த கார் என்ற நற்சான்றைப் பெற்றுள்ளது.

உலகளாவிய மோதல் நெறிமுறையின்படி என்சிஏபி அமைப்பு கார்களை 64 கிமீ வேகத்தில் இயக்கி, தடுப்புகளின் மீது மோதச் செய்யும். அவ்வாறு, பக்கவாட்டு பகுதி, முன் பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் பல கோணங்களில் க்ராஷ் செய்து பரிசோதனைக்கு உட்படுத்தும். அதுவே, இந்தியாவில் நிகழ்த்தும் க்ராஷ் டெஸ்ட்டானது வெறும் 56 கிமீ வேகத்திலேயே, கார்கள் இயக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

அவ்வாறு, ஹோண்டா அமேஸ் கார் 64 கிமீ வேகத்தில் மோதல் வினைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில், பெரியவர்களின் பாதுகாப்பில் நான்கு ஸ்டார்களைப் பெற்றுள்ளது. இதில், காரின் கட்டுமானம் மற்றும் கால்களை வைக்கும் கீழ் பகுதி உள்ளிட்டவை தரமானதாக உருவாக்கப்பட்டிருந்ததால், இந்த தரமான ரேட்டிங்கை அமேஸ் பெற்றிருக்கிறது.

பாதுகாப்பான பயணத்தை விரும்புவர்களுக்கு உகந்த கார் இதுதான்: க்ராஷ் டெஸ்ட் குறித்த தகவல்!

இந்த புதிய ஆப்பிரிக்கா ஸ்பெக் மாடல் அமேஸ், இரண்டு ஏர்பேக்குகள், முன்பக்க சீட் பெல்ட் மற்றும் டிரைவர் சீட் பெல் ரிமைண்டர் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, இந்தியாவில் விற்பனையாகும் அமேஸ் மாடல், ஸ்பீட் வார்னிங் மற்றும் முன் பக்கத்தில் அமரும் இருவருக்கும் சீட் பெல்ட் குறித்தs அறிவிப்பை ஏற்படுத்தும் ரிமைண்டர் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களைப் பெற்று விற்பனையில் இருக்கின்றது.

MOST READ: மேஜிக் டெக்னாலஜி உடன் மாருதி சுஸுகி பலேனோ கார்... என்னவென்று தெரியுமா?

பாதுகாப்பான பயணத்தை விரும்புவர்களுக்கு உகந்த கார் இதுதான்: க்ராஷ் டெஸ்ட் குறித்த தகவல்!

ஆனால், இந்த ஹோண்டா அமேஸ் குழந்தைகளின் பாதுகாப்பில் வெறும் ஒரு ஸ்டாரையேப் பெற்றிருக்கின்றது. ஆகையால், இந்த காரில் குழந்தைகளின் பாதுகப்பு குறைவாக இருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, அமேஸ் காரில் பொருத்தப்பட்டிருந்த டம்மி பொம்மைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் இருக்கின்றன.

பாதுகாப்பான பயணத்தை விரும்புவர்களுக்கு உகந்த கார் இதுதான்: க்ராஷ் டெஸ்ட் குறித்த தகவல்!

ஆகையால், அமேஸ் கார் 18 மாதம் முதல் 3 வயது வரையுள்ள குழந்தைகளின் பாதுகாப்பில் மிகவும் குறைவான ஸ்டாரைப் பெற்றிருக்கின்றது. இது பலருக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

பாதுகாப்பான பயணத்தை விரும்புவர்களுக்கு உகந்த கார் இதுதான்: க்ராஷ் டெஸ்ட் குறித்த தகவல்!

இதேபோன்று, அமேஸ் காரின் இந்தியா ஸ்பெக் மாடலையும் இந்த என்சிஏபி அண்மையில் பரிசோதனைக்கு உட்படுத்தியது. அதில், ஆப்பிரிக்கா மாடலைக் காட்டிலும் இந்தியாவில் விற்பனையாகும் அமேஸ் நல்ல ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. இந்த இரண்டாம் தலைமுறை ஹோண்டா அமேஸை அந்த நிறுவனம் கந்த 2018ம் ஆண்டுதான் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது.

பாதுகாப்பான பயணத்தை விரும்புவர்களுக்கு உகந்த கார் இதுதான்: க்ராஷ் டெஸ்ட் குறித்த தகவல்!

ஹோண்டா அமேஸ் கார், 1.2 லிட்டர், ஐ-விடெக் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர், ஐ-டிடெக் டீசல் எஞ்ஜின் ஆப்ஷன்களில் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கின்றன. அதில், பெட்ரோல் எஞ்ஜின் 89 பிஎச்பி பவரையும், 110 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைப்பெற்றுள்ளது. அதேபோன்று, டீசல் எஞ்ஜின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் தன்மையைப் பெற்றிருக்கின்றது.

பாதுகாப்பான பயணத்தை விரும்புவர்களுக்கு உகந்த கார் இதுதான்: க்ராஷ் டெஸ்ட் குறித்த தகவல்!

இந்த கார் இந்தியாவில் ரூ. 5.86 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இதன், ஹை என்ட் வேரியண்ட்டின் விலை ரூ. 9.16 லட்சமாக இருக்கின்றது. இவையனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இது, ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸெண்ட், மாருதி சுஸுகியின் டிசையர், , ஃபோக்ஸ்வேகன் அமியோ, டாடா டிகோர் மற்றும் ஃபோர்டு அஸ்பயர் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
Made In India Honda Amaze Rated 4 Stars In Crash Test. Read In Tamil.
Story first published: Wednesday, May 29, 2019, 17:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X