பாதுகாப்பினை உறுதிபடுத்தும் இந்தியாவில் தயாராகும் கார்கள்: 3 ஸ்டாரை பெற்ற இக்னிஸ்...

மாருதி சுஸுகி நிறுவனத்தின் இக்னிஸ் காரை குளோபல் என்சிஏபி அமைப்பு க்ராஷ் டெஸ்ட் பரிசோதனைக்கு உட்படுத்திய ரிசல்ட் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

பாதுகாப்பினை உறுதிபடுத்தும் இந்தியாவில் தயாராகும் கார்கள்: 3 ஸ்டாரை பெற்ற இக்னிஸ்...

குளோபல் என்சிஏபி என்ற அமைப்பு, புதிததாக சந்தையில் விற்பனைக்கு களமிறங்கும் கார்களை க்ராஷ் டெஸ்ட் எனப்படும் மோதல் வினைக்கு உட்படுத்தி பரிசோதனை செய்யும். இந்த பரிசோதனையானது, விபத்தின்போது கார்களில் பயணிப்பவர்கள் உயிர் பிழைப்பது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதை உறுதி செய்யும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது.

பாதுகாப்பினை உறுதிபடுத்தும் இந்தியாவில் தயாராகும் கார்கள்: 3 ஸ்டாரை பெற்ற இக்னிஸ்...

இதில், பெரியவர்கள் பாதுகாப்பு, சிறியவர்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உதவி தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வாகனங்கள் சோதித்துப் பார்க்கப்படும். இதற்காக, காரின் உள்ளே மனிதனின் உடலுக்கு ஈடான மாதிரி பொம்மைகள் (டம்மி) நிறுவப்பட்டு விபத்து செய்து பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.

பாதுகாப்பினை உறுதிபடுத்தும் இந்தியாவில் தயாராகும் கார்கள்: 3 ஸ்டாரை பெற்ற இக்னிஸ்...

இத்தகையக சோதனைக்குதான் அண்மையில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் இக்னிஸ் உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையில் இக்னிஸ் 5 நட்சத்திரங்களுக்கு மூன்று ஸ்டாரை மட்டுமே பெற்றுள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் என்ட்ரி லெவல் ப்ரீமியம் லெவல் ஹேட்ச் மாடலான இக்னீஸ், இந்தியாவில் உள்ள குருக்ரம் பிளாணட்டில் வைத்து உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்துதான் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பாதுகாப்பினை உறுதிபடுத்தும் இந்தியாவில் தயாராகும் கார்கள்: 3 ஸ்டாரை பெற்ற இக்னிஸ்...

அவ்வாறு, ஆப்பிரிக்காவிற்கு ஏற்றமதி செய்யப்படும் மாருதி சுஸுகி இக்னிஸ் காரைத்தான் குளோபல் என்சிஏபி அமைப்பு அண்மையில் விபத்து செய்து பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளது. இந்த பரிசோதனையில் இக்னிஸ் ஹேட்ச்பேக் கார் பயணிகளின் பாதுகாப்பில் 3 ஸ்டார்களை மட்டுமே பெற்றுள்ளது.

பாதுகாப்பினை உறுதிபடுத்தும் இந்தியாவில் தயாராகும் கார்கள்: 3 ஸ்டாரை பெற்ற இக்னிஸ்...

இதற்கு முன்னதாக இதேபோன்று, ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் காரையும் குளோபல் என்சிஏபி அமைப்பு க்ராஸ் டெஸ்டிற்கு உட்படுத்தியிருந்தது. அந்த கார், பயணிகளின் பாதுகாப்பில் 4 ஸ்டார்களைப் பெற்றது. இந்த காரும் இந்தியாவில் தயாராகும் ஆப்பிரிக்க ஸ்பெக் மாடலாகும்.

இந்நிலையில்தான், குளோபல் என்சிஏபி அமைப்பு, அதன் விதிமுறையின்படி மாருதி சுஸுகி இக்னிஸ் மாடலை, 40 சதவிகித ஆஃப் செட்டில் 64 கிமீ வேகத்தில் இயக்கி க்ராஷ் டெஸ்ட் செய்தது. அப்போது, இந்த காரின் அடித்தளம் விபத்தின் பிறகும் பெரியளவில் சேதத்தைப் பெறாமல் நிலையாக இருந்துள்ளது. இதுபோன்ற சில காரணங்களால் இந்த காருக்கு பெரியவர்களின் பாதுகாப்பில் 3 ஸ்டார் வழங்கப்பட்டது.

MOST READ: மாருதி சுஸுகி ஏஜிஎஸ்: அனைத்து இந்தியர்களுக்கும் ஓர் புரட்சிகரமான ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ்

பாதுகாப்பினை உறுதிபடுத்தும் இந்தியாவில் தயாராகும் கார்கள்: 3 ஸ்டாரை பெற்ற இக்னிஸ்...

மேலும், ஓட்டுநர் மற்றும் பயணிகளின், தலை மற்றும் கழுத்து பகுதிகளுக்கு இந்த காரில் நல்ல பாதுகாப்பு தன்மை நிலவுகிறது. ஆனால், டிரைவரின் மார்பக பகுதிக்கு கணிசமான அளவே பாதுகாப்பு உள்ளது. அதேசமயம் பயணிகளின் மார்பக பகுதி பாதுகாப்பு போதுமான அளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், டிரைவரின் மூட்டு பகுதிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த காரின் டிரான்ஸ்பேசியா ட்யூப் பகுதி அமைந்துள்ளது.

பாதுகாப்பினை உறுதிபடுத்தும் இந்தியாவில் தயாராகும் கார்கள்: 3 ஸ்டாரை பெற்ற இக்னிஸ்...

தொடர்ந்து குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பார்ப்போமேயானால், குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டுள்ள ஆர்டபிள்யூ-ஐசோபிக்ஸ் சீட் 18 மாத குழந்தைகளின் பாதுகாப்பில் நல்ல மதிப்பெண்ணப் பெற்றிருக்கின்றது. அந்தவகையில், தலை மற்றும் மார்பக பகுதிக்கு சிறந்த பாதுகாப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

பாதுகாப்பினை உறுதிபடுத்தும் இந்தியாவில் தயாராகும் கார்கள்: 3 ஸ்டாரை பெற்ற இக்னிஸ்...

அதேபோன்று, 3 வயது குழந்தைக்கும் இந்த கார் சிறப்பான பாதுகாப்பையே வழங்குகின்றது. இந்த காரில் சிஆர்எஸ் பயன்படுத்தப்படாத காரணத்தால், டைனமிக் புள்ளிகள் குறித்த விவரத்தை குளோபல் என்சிஏபி அமைப்பு சேர்க்கவில்லை. சிஆர்எஸ் அம்சத்தை கட்டாயம் கார்களில் சேர்க்க வேண்டும் என இந்த அமைப்பு அண்மையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பினை உறுதிபடுத்தும் இந்தியாவில் தயாராகும் கார்கள்: 3 ஸ்டாரை பெற்ற இக்னிஸ்...

மேலும், மாருதி சுஸுகி இக்னிஸ் காரில் மும்முனை பெல்டுகள் அனைத்து இருக்கைக்கும் வழங்கப்படாதது ஓர் குறையாக இருக்கின்றது. இதுபோன்ற சில காரணங்களால் தான் இந்த காரின் மதிப்பு சற்று குறைந்து, 3 ஸ்டார்களை மட்டும் பெற்றுள்ளது.

பாதுகாப்பினை உறுதிபடுத்தும் இந்தியாவில் தயாராகும் கார்கள்: 3 ஸ்டாரை பெற்ற இக்னிஸ்...

இக்னிஸ் கார் இந்தியச் சந்தையில் பெட்ரோல் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கின்றது. அந்தவகையில், 1.2 லிட்டர், கே-சீரிஸ், 4 சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் இது கிடைக்கின்றது.

பாதுகாப்பினை உறுதிபடுத்தும் இந்தியாவில் தயாராகும் கார்கள்: 3 ஸ்டாரை பெற்ற இக்னிஸ்...

இதில், ஆரம்ப வேரியண்டான சிக்னிஸைத் தவிர அனைத்து வேரியண்டிற்கும் ஏஎம்டி ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. மேலும், இந்த கார் ஒட்டுமொத்தமாக ஏழு வேரியண்ட்களில் கிடைக்கின்றது. அவ்வாறு, இதன் ஆரம்ப வேரியண்ட்டான சிக்மா ரூ. 5.4 லட்ச என்ற விலையிலும், ஹை எண்ட் வேரியண்டான ஆல்பா ஏஜிஎஸ் வேரியண்ட் ரூ. 7.14 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகின்றது.

பாதுகாப்பினை உறுதிபடுத்தும் இந்தியாவில் தயாராகும் கார்கள்: 3 ஸ்டாரை பெற்ற இக்னிஸ்...

தொடர்ந்து, இக்னிஸின் அனைத்து வேரியண்ட்களிலும் பாதுகாப்பு அம்சங்களாக, முன் பகுதியில் இரண்டு ஏர் பேக்குகள், சீட் பெல்ட் ரிமைண்டர், ஹை ஸ்பீடு வார்னிங், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Made In India Maruti Suzuki Rated 3 Stars In NCAP Crash Test. Read In Tamil.
Story first published: Thursday, May 30, 2019, 11:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X