எலெக்ட்ரிக் கார்களுக்கான போர்ட்டபிள் பேட்டரி: மெஜந்தா பவர் நிறுவனம் அறிமுகம்!

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான போர்ட்டபிள் பேட்டரியை மெஜந்தா பவர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட பல முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

எலெக்ட்ரிக் கார்களுக்கான போர்ட்டபிள் பேட்டரி: மெஜந்தா பவர் நிறுவனம் அறிமுகம்!

சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக கருதப்படும் எலெக்ட்ரிக் கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகளும், திட்டங்களும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், எலெக்ட்ரிக் வாகனங்களில் இருக்கும் மிக முக்கியமான நடைமுறை பிரச்னை, அதிக தூரம் பயணிக்க இயலாது என்பதாக உள்ளது.

எலெக்ட்ரிக் கார்களுக்கான போர்ட்டபிள் பேட்டரி: மெஜந்தா பவர் நிறுவனம் அறிமுகம்!

திறன் வாய்ந்த பேட்டரிகள் மூலமாக இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சிகள் நடந்து வருகிறது. அதிக ரேஞ்ச் கொண்ட கார் அல்லது மின்சார வாகனங்களாக இருந்தாலும், நீண்ட தூர பயணங்களின்போது வழியில் நின்றுவிட்டால் சிக்கலாகிவிடும். இதுதான் வாடிக்கையாளர்கள் தயங்குவதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது.

எலெக்ட்ரிக் கார்களுக்கான போர்ட்டபிள் பேட்டரி: மெஜந்தா பவர் நிறுவனம் அறிமுகம்!

எனினும், எலெக்ட்ரிக் வாகனங்களின் வருகை குறிப்பிடத்தக்க அளவு வரவேற்பு கிடைக்க துவங்கியிருப்பது சிறந்த விஷயம். இந்த நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்களில் சார்ஜ் தீர்ந்து போனால், உடனடியாக சார்ஜ் ஏற்றுவதற்கான போர்ட்டபிள் பேட்டரி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, மொபைல்போன்களுக்கு பவர் பேங்க் வழங்கப்படுவது போலவே இந்த பேட்டரியை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

எலெக்ட்ரிக் கார்களுக்கான போர்ட்டபிள் பேட்டரி: மெஜந்தா பவர் நிறுவனம் அறிமுகம்!

சார்ஜ்க்ரிட் என்ற பெயரில் 4 மாடல்களில் இந்த போர்ட்டபிள் பேட்டரி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. லைட் என்ற பெயரிலான மாடல் ரூ.11,799 விலையிலும், புரோ-3பி மாடல் ரூ.32,499 விலையிலும் புரோ- டி2 மாடல் ரூ.39,499 விலையிலும் மற்றும் அல்ட்ரா என்ற மாடல் ரூ.48,699 விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

எலெக்ட்ரிக் கார்களுக்கான போர்ட்டபிள் பேட்டரி: மெஜந்தா பவர் நிறுவனம் அறிமுகம்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

எலெக்ட்ரிக் கார் மற்றும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு இந்த போர்ட்டபிள் பேட்டரி சார்ஜரை பயன்படுத்த முடியும். பழைய மாடல்கள் மற்றும் புதிய மாடல்களுக்கும் ஏதுவான போர்ட்டுகளுடன் வந்துள்ளது. டைப்-2 கனெக்டர் வசதியும் இந்த எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

எலெக்ட்ரிக் கார்களுக்கான போர்ட்டபிள் பேட்டரி: மெஜந்தா பவர் நிறுவனம் அறிமுகம்!

இந்த போர்ட்டபிள் பேட்டரிகளை தனது லிங்க்ஸ் டீலர்கள் வழியாகவும், அமேஸான் தளம் மற்றும் உதிரிபாக விற்பனையாளர்கள் மூலமாகவும் விற்பனை செய்வதாக மெஜந்தா பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எலெக்ட்ரிக் கார்களுக்கான போர்ட்டபிள் பேட்டரி: மெஜந்தா பவர் நிறுவனம் அறிமுகம்!

மொபைல்போன் செயலி மூலமாக இந்த போர்ட்டபிள் சார்ஜரை மீண்டும் சார்ஜ் செய்வதற்கான புக்கிங், அருகிலுள்ள சார்ஜ் ஏற்றும் நிலையம் குறித்த தகவல்களை பெற முடியும். தனிநபர், வர்த்தகர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் என அனைத்து பயன்பாட்டையும் மனதில் வைத்து இந்த போர்ட்டபிள் பேட்டரி சார்ஜரை அறிமுகம் செய்துள்ளதாக மெஜந்தா பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எலெக்ட்ரிக் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை வாங்குவோருக்கு இந்த போர்ட்டபிள் பவர் பேங்க் மிகச் சிறந்த தீர்வாக அமையும். எலெக்ட்ரிக் கார் வாங்குவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவும்.

Most Read Articles
English summary
Green energy solutions provider Magenta Power has launched a portable and compact electric vehicle (EV) charger range which will be dubbed as the ChargeGrid. The portable grid is compatible across all four and two-wheeled EVs, both old and new.
Story first published: Friday, July 26, 2019, 17:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X