மஹிந்திரா பொலிரோ ஏபிஎஸ் மாடலுக்கு முன்பதிவு துவக்கம்!

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியின் ஏஎபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட மாடலுக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திரா பொலிரோ ஏபிஎஸ் மாடலுக்கு முன்பதிவு துவக்கம்!

கார்களின் சில அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிரைவர் சைடு ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஓவர் ஸ்பீடு அலாரம், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் சீட்பெல்ட் ரிமைன்டர்கள் ஜூலை 1 முதல் விற்பனையாகும் கார்களில் இடம்பெறுவது அவசியம்.

மஹிந்திரா பொலிரோ ஏபிஎஸ் மாடலுக்கு முன்பதிவு துவக்கம்!

அதன்படி, மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியில் இந்த பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த புதிய மாடல் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதற்கு முன்னதாக இந்த புதிய மாடலுக்கு ஆன்லைன் மற்றும் டீலர்களில் முன்பதிவு துவங்கி இருக்கிறது.

மஹிந்திரா பொலிரோ ஏபிஎஸ் மாடலுக்கு முன்பதிவு துவக்கம்!

தற்போது முறைப்படி இணையதளத்தில் இந்த மாடலின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், விலை விபரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா பொலிரோ ஏபிஎஸ் மாடலுக்கு முன்பதிவு துவக்கம்!

புதிய மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியானது அக்டோபரில் அமலுக்கு வர இருக்கும் புதிய கிராஷ் டெஸ்ட் விதிகளுக்கு ஒப்பானதாக இருக்கும் என்று தெரிகிறது.பிஎஸ்-6 எஞ்சின் ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா பொலிரோ ஏபிஎஸ் மாடலுக்கு முன்பதிவு துவக்கம்!

யாரிஸ் - மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

தற்போது மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியில் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 63 பிஎச்பி பவரையும், 195 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பொலிரோ ப்ளஸ் மாடலில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 70 பிஎச்பி பவரையும், 195 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

மஹிந்திரா பொலிரோ ஏபிஎஸ் மாடலுக்கு முன்பதிவு துவக்கம்!

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியின் தற்போதைய மாடல் ரூ.7.56 லட்சம் முதல் ரூ.9.42 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டுகிறது. இதனைவிட சற்றே கூடுதல் விலையில் புதிய மாடல் எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா பொலிரோ ஏபிஎஸ் மாடலுக்கு முன்பதிவு துவக்கம்!

மஹிந்திராவின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி மாடலான பொலிரோவில் புதிய பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறுவது வரவேற்கத்தக்க விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இது நிச்சயம் பொலிரோவின் மதிப்பை உயர்த்தும் விஷயமாகவே இருக்கும்.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra has quietly been updated their best-selling vehicle - the Bolero. There are new safety norms in place now, and all four wheelers in India have to feature ABS, a driver-side airbag, over-speeding alarms, rear parking sensors, and seat belt reminders for the driver and co-driver. Mahindra has upgraded the Bolero with all these features and has launched the new upgraded Bolero. The company has started taking bookings via it's website and via it's network of dealers.
Story first published: Friday, July 5, 2019, 13:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X