ஸ்கார்பியோ, பொலிரோ, தார், எக்ஸ்யூவி500 மாடல்களுக்கு விழாகால சலுகைகளை அறிவித்த மஹிந்திரா...

இந்திய கார் உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா விற்பனையை அதிகரிக்க அக்டோபர் மாதத்திற்கான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகளில் பணம் தள்ளுபடி, எக்ஸ்சேன்ஞ் போனஸ், கார்ப்பிரேட் போனஸ் மற்றும் இலவச பரிசுப்பொருட்கள் ஆகியவை அடங்கும். அதன் முழு விபரத்தை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஸ்கார்பியோ, பொலிரோ, தார், எக்ஸ்யூவி500 மாடல்களுக்கு விழாகால சலுகைகளை அறிவித்த மஹிந்திரா...

கேயூவி100

மஹிந்திரா நிறுவனத்தால் கடந்த 2016ல் அறிமுகம் செய்யப்பட்ட கேயூவி100 இந்திய சந்தையில் நல்ல விதமாகவே விற்பனையானது. இந்த மாடல் காருக்கு மஹிந்திரா நிறுவனம் தற்போது அறிவித்துள்ள சலுகைகள், ரூ.35,000 பணம் தள்ளுபடி, ரூ.29,000 எக்ஸ்சேன்ஞ் போனஸ், ரூ.4,000ற்கான காப்பிரேட் சலுகை மற்றும் 5,000 ரூபாய் மதிப்புள்ள இலவச பரிசுகள் ஆகும்.

ஸ்கார்பியோ, பொலிரோ, தார், எக்ஸ்யூவி500 மாடல்களுக்கு விழாகால சலுகைகளை அறிவித்த மஹிந்திரா...

ஒன்பது பெட்ரோல் மற்றும் ஒன்பது டீசல் மாடல்களில் கிடைக்கும் இந்த கேயூவி100வின் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 82 பிஎச்பி பவரையும் 115 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதன் 1.2 லிட்டர் டீசல் என்ஜின் 77 பிஎச்பி பவரையும் 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இக்காரின் அனைத்து மாடல்களும் மேனுவல் டிரான்ஸ்மிஷனில் கிடைக்கிறது. கேயூவி100 எக்ஸ்ஷோரூம்களில் சலுகையை சேர்க்காமல் ரூ.4.88 லட்சத்திலிருந்து ரூ.7.95 லட்சம் வரை விற்கப்படுகிறது.

ஸ்கார்பியோ, பொலிரோ, தார், எக்ஸ்யூவி500 மாடல்களுக்கு விழாகால சலுகைகளை அறிவித்த மஹிந்திரா...

டியூவி300 (ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட்)

2015 செப்டம்பரில் மஹிந்திரா நிறுவனத்தால் வெளியான இந்த டியூவி300 மாடல் கார் மொத்தம் ஏழு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் ஐந்து வேரியண்ட்கள் மேனுவல் டிரான்ஸ்மிஷனிலும் இரு வேரியண்ட்கள் செமி-ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனிலும் விற்பனையாகி வருகின்றன. மஹிந்திரா நிறுவனம் இந்த காருக்கு ரூ.52,000 பணம் தள்ளுபடியும், ரூ.15,000க்கு எக்ஸ்சேன்ஞ் போனஸ்ஸும், ரூ.4,500க்கு கார்ப்பிரேட் தள்ளுபடி மற்றும் ரூ.5,000 மதிப்பிலான இலவச பரிசுகளையும் சலுகைகளாக அறிவித்துள்ளது.

ஸ்கார்பியோ, பொலிரோ, தார், எக்ஸ்யூவி500 மாடல்களுக்கு விழாகால சலுகைகளை அறிவித்த மஹிந்திரா...

இதன் 1.5 லிட்டர் என்ஜின் 240 என்எம் டார்க் திறனையும் இதன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் 80 பிஎச்பி பவரையும் செமி-ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் 81 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்துகின்றன். இக்காரின் டி8 மற்றும் டி10 மாடல்கள் 100 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. டியூவி300 இந்தியாவின் எக்ஸ்ஷோரூம்களில் சலுகைகளை சேர்க்காமல் ரூ.8.54 லட்சத்திலிருந்து ரூ.10.55 லட்சம் வரை விற்கப்படுகிறது.

ஸ்கார்பியோ, பொலிரோ, தார், எக்ஸ்யூவி500 மாடல்களுக்கு விழாகால சலுகைகளை அறிவித்த மஹிந்திரா...

டியூவி300 ப்ளஸ்

2018ல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மாடல் கார் ஒன்பது இருக்கைகளை கொண்டது. மூன்று வேரியண்ட்களில் விற்பனையாகி வரும் டியூவி300 ப்ளஸ் மாடலுக்கு, மஹிந்திரா நிறுவனம் ரூ.35,000 பணம் தள்ளுபடி, ரூ.25,000 எக்ஸ்சேன்ஞ் போனஸ், ரூ.5,000 கார்ப்பிரேட் போனஸ் மற்றும் 5,000 ரூபாய் மதிப்பிலான இலவச பொருட்களை சலுகைகளாக அறிவித்துள்ளது.

ஸ்கார்பியோ, பொலிரோ, தார், எக்ஸ்யூவி500 மாடல்களுக்கு விழாகால சலுகைகளை அறிவித்த மஹிந்திரா...

டியூவி300 ப்ளஸ்ஸின் 2.2 லிட்டர் எம்எச்ஏடபிள்யூகே டீசல் என்ஜின் 118 பிஎச்பி பவரையும் 280 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. ஆறு நிலை வேக மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் விற்பனையாகி வரும் இந்த மாடல் கார் இந்திய எக்ஸ்ஷோரூம்களில் ரூ.9.92 லட்சத்திலிருந்து ரூ.11.42 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஸ்கார்பியோ, பொலிரோ, தார், எக்ஸ்யூவி500 மாடல்களுக்கு விழாகால சலுகைகளை அறிவித்த மஹிந்திரா...

பொலிரோ பவர் ப்ளஸ்

எல்எக்ஸ், எஸ்எல்இ, எஸ்எல்எக்ஸ் மற்றும் இசட்எல்எக்ஸ் என நான்கு விதமான வேரியண்ட்களில் விற்பனையாகி வரும் மஹிந்திரா பொலிரோ பவர் ப்ளஸ் மாடலுக்கு இந்நிறுவனம் ரூ.11,500 பணம் தள்ளுபடி, ரூ.10,000 எக்ஸ்சேன்ஞ் போனஸ், ரூ.4,000க்கு கார்ப்பிரேட் போனஸ் மற்றும் ரூ.3,500 மதிப்பிலான இலவச பரிசு பொருட்களை சலுகைகளாக அறிவித்துள்ளது.

ஸ்கார்பியோ, பொலிரோ, தார், எக்ஸ்யூவி500 மாடல்களுக்கு விழாகால சலுகைகளை அறிவித்த மஹிந்திரா...

இதன் அனைத்து வேரியண்ட்களும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் 70 பிஎச்பி பவர் மற்றும் 195 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. ஆறு நிலை வேக மேனுவல் டிரான்ஸ்மிஷனில் வெளியாகும் இந்த எஸ்யூவி, இந்திய எக்ஸ்ஷோரூம்களில் சலுகைகளை சேர்க்காமல் ரூ.7.49 லட்சத்திலிருந்து ரூ.8.86 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஸ்கார்பியோ, பொலிரோ, தார், எக்ஸ்யூவி500 மாடல்களுக்கு விழாகால சலுகைகளை அறிவித்த மஹிந்திரா...

தார் ஏபிஎஸ்

ஆப்-ரோடு எஸ்யூவிகளில் ஒன்றாக இருக்கும் தார் ஏபிஎஸ்ஸிற்கு மஹிந்திரா நிறுவனம் ரூ.9,000 பணம் தள்ளுபடி மற்றும் ரூ.5,000 மதிப்பிலான இலவச பொருட்களை சலுகைகளாக அறிவித்துள்ளது. எக்ஸ்சேன்ஞ் தள்ளுபடியும் கார்ப்பிரேட் சலுகையும் தார் ஏபிஎஸ்ஸிற்கு வழங்கப்படவில்லை.

ஸ்கார்பியோ, பொலிரோ, தார், எக்ஸ்யூவி500 மாடல்களுக்கு விழாகால சலுகைகளை அறிவித்த மஹிந்திரா...

இதன் 2.5 லிட்டர் என்ஜின் 105 பிஎச்பி பவர் மற்றும் 247 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. மேலும் இதன் என்ஜின் ஐந்து நிலை வேக மேனுவல் டிரான்ஸ்மிஷனில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய எக்ஸ்ஷோரூம்களில் இதன் விலை சலுகையில்லாமல் ரூ.9.75 லட்சமாக நிர்ணயக்கப்பட்டுள்ளது.

ஸ்கார்பியோ, பொலிரோ, தார், எக்ஸ்யூவி500 மாடல்களுக்கு விழாகால சலுகைகளை அறிவித்த மஹிந்திரா...

எக்ஸ்யூவி300

2019 பிப்ரவரியில் மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டிருந்த இந்த கார், இந்திய சந்தையில் இதுவரை நல்ல விதமாகவே விற்பனையாகி வருகிறது. ஆனால் மஹிந்திரா நிறுவனம் இந்த காருக்கு பணம் மற்றும் கார்ப்பிரேட் சலுகைகளை வழங்காமல் ரூ.25,000க்கு எக்ஸ்சேன்ஞ் போனஸ் மற்றும் ரூ.5,000 மதிப்பிலான இலவச பரிசுகளை மட்டும் அறிவித்துள்ளது. இதனுடம் ஐந்து வருட உத்தரவாதமும் இந்த மாடலுக்கு மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்கார்பியோ, பொலிரோ, தார், எக்ஸ்யூவி500 மாடல்களுக்கு விழாகால சலுகைகளை அறிவித்த மஹிந்திரா...

நான்கு பெட்ரோல் மற்றும் ஏழு டீசல் வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த மாடல் எஸ்யூவியின் பெட்ரோல் மாடலின் 1.2 லிட்டர் என்ஜின் 109 பிஎச்பி பவரையும் 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த பெட்ரோல் மாடல்களுடன் ஆறு நிலை வேக மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

ஸ்கார்பியோ, பொலிரோ, தார், எக்ஸ்யூவி500 மாடல்களுக்கு விழாகால சலுகைகளை அறிவித்த மஹிந்திரா...

அதேபோல் டீசல் மாடல்களில் உள்ள 1.5 லிட்டர் என்ஜின் 115 பிஎச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த மாடல்களுடன் ஆறு நிலை வேக மேனுவல் ட்ரான்ஸ்மிஷனும் ஆறு நிலை வேக ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனும் இணைக்கப்பட்டுள்ளன. எக்ஸ்யூவி300ன் விலை இந்திய எக்ஸ்ஷோரூம்களில் ரூ.8.10 லட்சத்திலிருந்து ரூ.12.69 லட்சம் வரை நிர்ணயக்கப்பட்டுள்ளது.

ஸ்கார்பியோ, பொலிரோ, தார், எக்ஸ்யூவி500 மாடல்களுக்கு விழாகால சலுகைகளை அறிவித்த மஹிந்திரா...

மராஸ்ஸோ எம்2 & எம்4

சுறாவின் பற்களை போல க்ரில் பகுதியை கொண்ட மஹிந்திரா மராஸ்ஸோ மாடல் இரு எம்2 மற்றும் இரு எம்4 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாடலுக்கு மஹிந்திரா நிறுவனம், ரூ.15,000க்கு எக்ஸ்சேன்ஞ் போனஸ் மற்றும் ரூ.7,000க்கு கார்ப்பிரேட் தள்ளுபடியை சலுகைகளாக அறிவித்துள்ளது.

ஸ்கார்பியோ, பொலிரோ, தார், எக்ஸ்யூவி500 மாடல்களுக்கு விழாகால சலுகைகளை அறிவித்த மஹிந்திரா...

1.5 லிட்டர் டீசல் என்ஜினில் இயக்கும் மராஸ்ஸோ, 121 பிஎச்பி பவரையும் 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜின் ஆறு நிலை வேக மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. மராஸ்ஸோ மாடல் காரின் இந்த எம்2 மற்றும் எம்4 வேரியண்ட்கள் இந்திய சந்தையில் ரூ.10.35 லட்சத்திலிருந்து ரூ.11.65 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஸ்கார்பியோ, பொலிரோ, தார், எக்ஸ்யூவி500 மாடல்களுக்கு விழாகால சலுகைகளை அறிவித்த மஹிந்திரா...

மராஸ்ஸோ எம்6 & எம்8

இரு எம்6 மற்றும் இரு எம்8 வேரியண்ட்களிலும் கிடைக்கும் மராஸ்ஸோவிற்கு மஹிந்திரா நிறுவனம், எக்ஸ்சேன்ஞ் போனஸாக ரூ.40 ஆயிரத்தையும் கார்ப்பிரேட் போனஸாக ரூ.7 ஆயிரத்தையும் மற்றும் ஒரு வருடத்திற்கான இலவச காப்பீட்டையும் அக்டோபர் மாதத்திற்கான சலுகைகளாக அறிவித்துள்ளது.

ஸ்கார்பியோ, பொலிரோ, தார், எக்ஸ்யூவி500 மாடல்களுக்கு விழாகால சலுகைகளை அறிவித்த மஹிந்திரா...

அனைத்து எம்6 மற்றும் எம்8 வேரியண்ட்களும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினுடன் 121 பிஎச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த மாடல் காரின் என்ஜினுடன் ஆறு நிலை வேக மேனுவல் டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸும் இணைக்கப்பட்டுள்ளது. மராஸ்ஸோவின் எம்6 மற்றும் எம்8 வேரியண்ட்கள் ரூ.13.10 லட்சத்திலிருந்து ரூ.14.76 லட்சம் வரை இந்திய எக்ஸ்ஷோரூம்களில் விற்கப்படுகிறது.

ஸ்கார்பியோ, பொலிரோ, தார், எக்ஸ்யூவி500 மாடல்களுக்கு விழாகால சலுகைகளை அறிவித்த மஹிந்திரா...

ஸ்கார்பியோ (எஸ்3 வேரியண்ட்டை தவிர)

மஹிந்திரா நிறுவனத்தின் சிறந்த முறையில் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றான ஸ்கார்பியோவிற்கு இந்நிறுவனம், ரூ.39,000 பணம் தள்ளுபடி, ரூ.34,000க்கு எக்ஸ்சேன்ஞ் போனஸ், ரூ.5,000க்கு கார்ப்பிரேட் சலுகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இலவச பரிசுகளை சலுகைகளாக அறிவித்துள்ளது.

ஸ்கார்பியோ, பொலிரோ, தார், எக்ஸ்யூவி500 மாடல்களுக்கு விழாகால சலுகைகளை அறிவித்த மஹிந்திரா...

11 வேரியண்ட்களில் விற்பனையாகும் இந்த மஹிந்திரா ஸ்கார்பியோவின் எஸ்3 வேரியண்ட்டிற்கு மட்டும் இந்த சலுகைகள் பொருந்தாது. எஸ்3 வேரியண்ட்டின் 2.5 லிட்டர் டீசல் என்ஜின் 75 பிஎச்பி பவரையும் 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஐந்து நிலை வேக மேனுவல் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ள இந்த எஸ்3 மாடலானது இந்திய எக்ஸ்ஷோரூம்களில் ரூ.9.99 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.

ஸ்கார்பியோ, பொலிரோ, தார், எக்ஸ்யூவி500 மாடல்களுக்கு விழாகால சலுகைகளை அறிவித்த மஹிந்திரா...

இதுதவிர்த்து உள்ள மற்ற ஒன்பது வேரியண்ட்களும் 2.2 லிட்டர் டீசல் என்ஜினுடன் 120 பிஎச்பி பவர் மற்றும் 280 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இந்த என்ஜினுடன் ஐந்து நிலை வேக மேனுவல் டிரான்ஸ்மிஷனும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்பது எஸ்யூவிகள் ஒவ்வொன்றும் இந்திய எக்ஸ்ஷோரூம்களில் ரூ.12.20 லட்சத்திலிருந்து ரூ.16.63 லட்சம் வரை விற்கப்படுகிறது.

ஸ்கார்பியோ, பொலிரோ, தார், எக்ஸ்யூவி500 மாடல்களுக்கு விழாகால சலுகைகளை அறிவித்த மஹிந்திரா...

எக்ஸ்யூவி500 (டபிள்யூ3 வேரியண்ட்டை தவிர)

மஹிந்திரா நிறுவனத்தின் மற்றொரு நிலையான வாகனம் எக்ஸ்யூவி500. இந்த மாடலுக்கு மஹிந்திரா நிறுவனம் ரூ.40,000 பணம் தள்ளுபடி, ரூ.45,000 எக்ஸ்சேன்ஞ் போனஸ், ரூ.9,000 கார்ப்பிரேட் சலுகை மற்றும் ரூ.10,000 மதிப்பிலான இலவச பரிசுகளை சலுகைகளாக அறிவித்துள்ளது. இம்மாடலின் டபிள்யூ3 வேரியண்ட்டிற்கு இந்த சலுகைகள் பொருந்தாது.

ஸ்கார்பியோ, பொலிரோ, தார், எக்ஸ்யூவி500 மாடல்களுக்கு விழாகால சலுகைகளை அறிவித்த மஹிந்திரா...

இந்த மாடல் காரின் 13 வேரியண்ட்களும் 2.2 லிட்டர் டீசல் என்ஜினில் 153 பிஎச்பி பவரையும் 360 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. டிரான்ஸ்மிஷன் விருப்பங்களாக ஆறு நிலை மேனுவல் மற்றும் ஆறு நிலை ஆட்டோமேட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. ரூ.12.31 லட்சத்திலிருந்து ரூ.19.74 லட்சம் வரை இந்த மாடல் கார்கள் இந்திய எக்ஸ்ஷோரூம்களில் விற்கப்படுகின்றன.

ஸ்கார்பியோ, பொலிரோ, தார், எக்ஸ்யூவி500 மாடல்களுக்கு விழாகால சலுகைகளை அறிவித்த மஹிந்திரா...

மஹிந்திரா அல்டூராஸ் ஜி4

மஹிந்திரா நிறுவனத்தின் தலைமை மாடல்களுள் ஒன்றான அல்டூராஸ் ஜி4, ரூ.37,000 பணம் தள்ளுபடி, ரூ.50,000க்கு எக்ஸ்சேன்ஞ் போனஸ், ரூ.5,000க்கு கார்ப்பிரேட் சலுகை, 19,000 ரூபாய் மதிப்பிலான இலவச பரிசு பொருட்கள் மற்றும் ஐந்து வருட உத்தரவாதம் போன்ற சலுகைகளுடன் இந்த மாதம் முழுவதும் விற்பனையாகவுள்ளது.

ஸ்கார்பியோ, பொலிரோ, தார், எக்ஸ்யூவி500 மாடல்களுக்கு விழாகால சலுகைகளை அறிவித்த மஹிந்திரா...

2டபிள்யூடி மற்றும் 4டபிள்யூடி என இரு வேரியண்ட்களில் விற்பனையாகி வருகின்ற அல்டூராஸ் ஜி4-ன் 2.2 லிட்டர் என்ஜின் 178 பிஎச்பி பவரையும் 420 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. ஏழு நிலை வேக ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் வெளியாகும் இந்த அல்டூராஸ் காரின் விலை இந்திய சந்தையில் மேற்கூறப்பட்ட சலுகைகளை சேர்க்காமல் ரூ.27.70 லட்சத்தில் இருந்து ரூ.30.70 லட்சம் வரை விற்கப்படுகிறது.

ஸ்கார்பியோ, பொலிரோ, தார், எக்ஸ்யூவி500 மாடல்களுக்கு விழாகால சலுகைகளை அறிவித்த மஹிந்திரா...

மஹிந்திரா நிறுவனத்தின் இந்த சலுகைகள் அனைத்து வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்க்க கூடியதாய் இருக்கிறது. இதனால் இந்நிறுவனத்தின் விற்பனையான கார்களின் யூனிட் எண்ணிக்கைகள் இந்த மாதத்தில் கணிசமாக உயரும் என்றே தெரிகிறது. இதனால் மஹிந்திரா நிறுவனத்தின் காரை வாங்க எண்ணுவோருக்கு இதுவே சரியான தருணம். மேலும் இந்த சலுகைகளும் தள்ளுபடிகளும் பிஎஸ்6 கார்கள் அறிமுகமாகவுள்ள 2020 ஏப்ரல் 1ஆம் தேதி வரை தொடரும் என்றே கூறப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Scorpio, Bolero, Thar, XUV500: Discounts & Offers On Multiple Models For October
Story first published: Wednesday, October 9, 2019, 16:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X