கூடுதலாக ஒரு டீசல் எஞ்ஜின் காரை சந்தையை விட்டு விலக்கும் மஹிந்திரா... அதிர்ச்சி தகவல்...!

மஹிந்திரா நிறுவனம் புதிய மாசு உமிழ்வு விதியின் காரணமாக மேலும் ஓர் டீசல் எஞ்ஜின் காரை இந்தியச் சந்தையில் இருந்து விலக்கிக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஓர் டீசல் எஞ்ஜின் காரை சந்தையை விட்டு விலக்கும் மஹிந்திரா... அதிர்ச்சி தகவல்...!

புதிய மாசு உமிழ்வு விதியின் காரணமாக, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம், மேலும் ஒரு சிறிய ரக டீசல் எஞ்ஜின் காரை சந்தையில் இருந்து விலக்கிக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஓர் டீசல் எஞ்ஜின் காரை சந்தையை விட்டு விலக்கும் மஹிந்திரா... அதிர்ச்சி தகவல்...!

புதிய மாசு உமிழ்வு விதி (பிஎஸ்-6) வருகின்ற 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து அமலாக இருக்கின்றது. இந்த புதிய விதியின் காரணமாக, சிறிய ரக டீசல் எஞ்ஜின் வாகனங்களை, உற்பத்தி நிறுவனங்கள் சந்தையில் விலக்கிக் கொண்டு வருகின்றன.

மேலும் ஓர் டீசல் எஞ்ஜின் காரை சந்தையை விட்டு விலக்கும் மஹிந்திரா... அதிர்ச்சி தகவல்...!

அந்தவகையில், அண்மைக் காலங்களாக உற்பத்தி நிறுவனங்கள் முடக்கி வரும் அனைத்து வாகனங்களும், மக்கள் மத்தியில் பெரும் புகழ்வாய்ந்த மாடலாக இருக்கும், பட்ஜெட் ரக வாகனங்களே அதிகமாக உள்ளன.

மேலும் ஓர் டீசல் எஞ்ஜின் காரை சந்தையை விட்டு விலக்கும் மஹிந்திரா... அதிர்ச்சி தகவல்...!

இந்நிலையில், மஹிந்திரா நிறுவனமும், அதன் புகழ்வாய்ந்த மாடலாக இருக்கும் கேயூவி100 என்எக்ஸ்டி டீசல் வேரியண்டை சந்தையில் இருந்து விலக்கிக் கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. ஆனால், இந்த மாடலில் இருக்கும் பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் வேரியண்ட்கள் விற்பனைக்கு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஓர் டீசல் எஞ்ஜின் காரை சந்தையை விட்டு விலக்கும் மஹிந்திரா... அதிர்ச்சி தகவல்...!

மஹிந்திரா நிறுவனம், இந்த கேயூவி 100 என்எக்ஸ்டி மாடலில் 1.2 லிட்டர், 4 சிலிண்டர் எஞ்ஜினைப் பயன்படுத்தி வருகின்றது. இது 3,750 ஆர்பிஎம்மில் 77 பிஎச்பி பவரையும், 1,750 மற்றும் 2,250 ஆர்பிஎம்மில் 190 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

மேலும் ஓர் டீசல் எஞ்ஜின் காரை சந்தையை விட்டு விலக்கும் மஹிந்திரா... அதிர்ச்சி தகவல்...!

இந்த காரை மஹிந்திரா, ஐந்து மற்றும் ஆறு சீட்டர் வேரியண்ட்களில் விற்பனைச் செய்து வருவது குறிப்பிடத்தகுந்தது. இந்த பட்ஜெட் ரக காரானது, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 25.32 கிமீ மைலேஜைத் தரக்கூடியது.

மேலும் ஓர் டீசல் எஞ்ஜின் காரை சந்தையை விட்டு விலக்கும் மஹிந்திரா... அதிர்ச்சி தகவல்...!

மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி மாடல் சந்தை வெளியேற்றம் குறித்து, அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கூறியதாவது, "தற்போது விற்பனையில் இருக்கும் 1.5 லிட்டர் மற்றும் அதற்கு மேலான கெபாசிட்டியைக் கொண்ட டீசல் எஞ்ஜின்கள், 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை விற்பனையில் இருக்கும்" என தெரிவித்தார்.

மேலும் ஓர் டீசல் எஞ்ஜின் காரை சந்தையை விட்டு விலக்கும் மஹிந்திரா... அதிர்ச்சி தகவல்...!

ஆனால், கேயூவி100 என்எக்ஸ்டி டீசல் வேரியண்ட் எத்தனை நாட்கள் வரை சந்தையில் விற்பனையில் இருக்கும் என்பது குறித்த தெளிவான தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும் ஓர் டீசல் எஞ்ஜின் காரை சந்தையை விட்டு விலக்கும் மஹிந்திரா... அதிர்ச்சி தகவல்...!

வாடிக்கையாளர்களின் கோரிக்கை மற்றும் எதிர்பார்ப்பைப் பொறுத்து செயல்படும் மஹிந்திரா நிறுவனம், சந்தையின் தேவையை அறிந்து செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், சிறிய டீசல் எஞ்ஜின்களுக்கு பதிலாக, 2.0 லிட்டர் கொண்ட டீசல் எஞ்ஜினை புதிய பிஎஸ்6 தரத்திற்கு ஏற்ப ட்யூன் அப் செய்து புதிய மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம்ம என கூறப்படுகிறது.

மேலும் ஓர் டீசல் எஞ்ஜின் காரை சந்தையை விட்டு விலக்கும் மஹிந்திரா... அதிர்ச்சி தகவல்...!

அண்மைக் காலங்களாக பல முக்கிய நிறுவனங்களின் புகழ்வாய்ந்த வாகனங்களை வெளியேற்றி வரும் பிஎஸ்6 தரத்திற்கு இணையாக, சிறிய ரக டீசல் எஞ்ஜின்களைத் தயார் செய்வது அந்தந்த நிறுவனங்களுக்கு மிகவும் சவலாக இருக்கின்றது. மேலும், அதனை உற்பத்தி செய்ய அதிகளவு நிதி தேவைப்படுகிறது. இதன்காரணமாகவே பல உற்பத்தி நிறுவனங்கள் அதன் சிறிய டீசல் எஞ்ஜின்களை சந்தையை விட்டு வெளியேற்றி வருகின்றன.

மேலும் ஓர் டீசல் எஞ்ஜின் காரை சந்தையை விட்டு விலக்கும் மஹிந்திரா... அதிர்ச்சி தகவல்...!

மஹிந்திரா நிறுவனம் அடுத்த தலைமுறை ஸ்கார்பியோவை வருகின்ற 2020ம் ஆண்டில் களமிறக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதில், சிறப்பான பெர்ஃபார்மன்ஸுக்கா 2.2 லிட்டர் எம்ஹாவ்க் எஞ்ஜின் ரிபிளேஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் லேசான எடையிலும், 160 ஹார்ஸ் பவரை வெளிப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra KUV100 1.2L Diesel Engine Discontinued In India. Read In Tamil.
Story first published: Tuesday, June 4, 2019, 10:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X