மஹிந்திரா மாராஸ்ஸோ பிஎஸ்6 மாடல் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

மஹிந்திரா மராஸ்ஸோ மாடலின் பிஎஸ்6 வெர்சன் முதன்முதலாக பொது சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திரா மாராஸ்ஸோ பிஎஸ்6 மாடல் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

பிஎஸ்4 காரின் தோற்றத்தை அப்படியே இந்த பிஎஸ்6 மாடலும் கொண்டுள்ளதால் மறைப்பு எதுவும் கொடுக்கப்படவில்லை. இதனால் பிஎஸ்6 தரத்தில் இந்த கார் சோதனை ஓட்டத்தில் உள்ளது என்பதையே காரின் எரிபொருள் செலுத்தும் இடத்திற்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள யூ081 என்ற குறியீட்டை வைத்து தான் கண்டறிய முடிகிறது.

மஹிந்திரா மாராஸ்ஸோ பிஎஸ்6 மாடல் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

பிஎஸ்6 அப்டேட்டால் மராஸ்ஸோ காரின் என்ஜினின் வெளியிடும் ஆற்றலில் கண்டிப்பாக மாற்றம் இருக்கும். அதேபோல் ட்ரைவிங் மோட்களிலும் மாற்றம் கொண்டு வரப்படும். தற்போதைய பிஎஸ்4 மராஸ்ஸோ கார் 1.5 லிட்டர் சிங்கிள்-சிலிண்டர் டீசல் என்ஜினுடன் 121 பிஎச்பி பவரையும் 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

மஹிந்திரா மாராஸ்ஸோ பிஎஸ்6 மாடல் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

இந்த என்ஜினுடன் முன்புற சக்கரத்தை இயக்கக்கூடிய 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. பிஎஸ்6 அப்டேட்டால் இந்த கார் பெட்ரோல் வேரியண்ட்டையும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வையும் கூடுதலாக பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

மஹிந்திரா மாராஸ்ஸோ பிஎஸ்6 மாடல் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

ரூ.10.35 லட்சத்தில் இருந்து 15 லட்ச ரூபாய் வரையில் என மொத்தம் 8 வேரியண்ட்களில் மஹிந்திரா மராஸ்ஸோ மாடல் இந்திய எக்ஸ்ஷோரூமில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிஎஸ்6 மாற்றத்தால் இந்த காரின் விலை அதிகரிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

மஹிந்திரா மாராஸ்ஸோ பிஎஸ்6 மாடல் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

எம்பிவி வரிசையில் வாடிக்கையாளர்களின் விரும்பத்தக்க கார்களுள் ஒன்றாக விளங்கும் இந்த கார், மாருதி எர்டிகா மாடலை விட பெரிய அளவில் 7 இருக்கை வெர்சனையும், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவை விட விலை குறைவையும் பெறவுள்ளது.

மஹிந்திரா மாராஸ்ஸோ பிஎஸ்6 மாடல் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து சரவுண்ட்-கூல் தொழிற்நுட்பத்தில் உருவான முதல் எம்பிவியாக இந்த மராஸ்ஸோ கார் விளங்குகிறது. மேலும் மஹிந்திரா நிறுவனத்தின் சுறா டிசைன் தத்துவத்தில் உருவான காராகவும் மராஸ்ஸோ உள்ளது.

மஹிந்திரா மாராஸ்ஸோ பிஎஸ்6 மாடல் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

அதிக இட வசதியை இந்த மாடல் கொண்டுள்ளதால் அதிகளவில் பயணிகளையும் பொருட்களையும் சவுகரியகமாக ஏற்றி செல்ல முடியும். அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகவுள்ள இந்த கார் ரூ.11 லட்சத்தில் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா மாராஸ்ஸோ பிஎஸ்6 மாடல் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

மஹிந்திரா நிறுவனம் மராஸ்ஸோ மட்டுமின்றி மேலும் பல கார்களை பிஎஸ்6 தரத்தில் அப்டேட் செய்து வருகிறது. இதனால் இந்நிறுவனத்தில் இருந்து அடுத்த ஆண்டு 12 புதிய கார்கள் அறிமுகமாகவுள்ளன. மேலும் இந்நிறுவனத்தில் இருந்து முதல் பிஎஸ்6 காராக எக்ஸ்யூவி300 மாடல் கடந்த வாரத்தில் அறிமுகமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Marazzo BS6 Spied
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X