இந்தியாவில் 'சுறா மீன்' விற்பனை திடீரென குறைந்தது... 'டல்' அடிப்பதற்கு காரணம் இதுதான்...

இந்தியாவில் 'சுறா மீன்' விற்பனை திடீரென குறைந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் 'சுறா மீன்' விற்பனை திடீரென குறைந்தது... 'டல்' அடிப்பதற்கு காரணம் இதுதான்...

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டியிருந்த மஹிந்திரா மராஸ்ஸோ (Mahindra Marazzo) எம்பிவி வகை கார், கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது மொத்தம் 4 வேரியண்ட்களில் கிடைத்து வருகிறது.

இந்தியாவில் 'சுறா மீன்' விற்பனை திடீரென குறைந்தது... 'டல்' அடிப்பதற்கு காரணம் இதுதான்...

மஹிந்திராவின் வட அமெரிக்க டெக்னிக்கல் சென்டரில், டிசைன் மற்றும் டெவலப் செய்யப்பட்ட முதல் தயாரிப்பு என்ற பெருமை மராஸ்ஸோ காரையே சாரும். சுறா மீனை மனதில் வைத்து மஹிந்திரா மராஸ்ஸோ கார் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் 'சுறா மீன்' விற்பனை திடீரென குறைந்தது... 'டல்' அடிப்பதற்கு காரணம் இதுதான்...

மஹிந்திரா மராஸ்ஸோ காரின் ரியர் வியூ மிரர்கள் ஏ-பில்லருக்கு பதிலாக கதவில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் பின் பகுதியில் எல்இடி டெயில் லேம்ப்கள் மற்றும் புதிய பம்பரை பெற்றுள்ளன. இதன் இன்டீரியர் டிசைன் முற்றிலும் புதிதானது.

இந்தியாவில் 'சுறா மீன்' விற்பனை திடீரென குறைந்தது... 'டல்' அடிப்பதற்கு காரணம் இதுதான்...

அத்துடன் புதிய 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரும் கூட முற்றிலும் புதிதுதான். மராஸ்ஸோ காரில் மஹிந்திரா நிறுவனம் ஏராளமான வசதிகளை வழங்கியுள்ளது.

இந்தியாவில் 'சுறா மீன்' விற்பனை திடீரென குறைந்தது... 'டல்' அடிப்பதற்கு காரணம் இதுதான்...

ஆண்ட்ராய்டு ஆட்ரோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சப்போர்ட் உடன் கூடிய டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், க்ளைமேட் கண்ட்ரோல், பார்க்கிங் சென்சார்களுடன் ரிவர்ஸ் கேமரா உள்ளிட்ட வசதிகள் மஹிந்திரா மராஸ்ஸோ காரில் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் 'சுறா மீன்' விற்பனை திடீரென குறைந்தது... 'டல்' அடிப்பதற்கு காரணம் இதுதான்...

அத்துடன் அவசரகால அழைப்பு வசதிகள், ட்யூயல் ஏர் பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ் உள்ளிட்ட வசதிகளும் மஹிந்திரா மராஸ்ஸோ காரில் இடம்பெற்றுள்ளன. ஆனால் மஹிந்திரா நிறுவனம் மராஸ்ஸோ காரில் சிங்கிள் இன்ஜின் ஆப்ஷனை மட்டுமே வழங்கி வருகிறது.

இந்தியாவில் 'சுறா மீன்' விற்பனை திடீரென குறைந்தது... 'டல்' அடிப்பதற்கு காரணம் இதுதான்...

இந்த 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 123 பிஎஸ் பவரையும், 302 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் ஒரு லிட்டருக்கு 17.6 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 'சுறா மீன்' விற்பனை திடீரென குறைந்தது... 'டல்' அடிப்பதற்கு காரணம் இதுதான்...

இந்த சூழலில் மஹிந்திரா நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 1,692 மராஸ்ஸோ கார்களை மட்டுமே இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்துள்ளது. ஆனால் அதற்கு முந்தைய மார்ச் மாதத்தில் 2,751 மராஸ்ஸோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

இந்தியாவில் 'சுறா மீன்' விற்பனை திடீரென குறைந்தது... 'டல்' அடிப்பதற்கு காரணம் இதுதான்...

தற்போது மார்க்கெட்டில் மந்த நிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக விற்பனை சரிவடைந்திருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் பொதுவாக பார்த்தால் மஹிந்திரா மராஸ்ஸோ காரின் விற்பனை சிறப்பாகவே உள்ளது.

இந்தியாவில் 'சுறா மீன்' விற்பனை திடீரென குறைந்தது... 'டல்' அடிப்பதற்கு காரணம் இதுதான்...

மஹிந்திரா நிறுவனம் ஒரு மாதத்திற்கு சராசரியாக 2,700 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவில் அனைத்து கார் நிறுவனங்களுமே தடுமாறி கொண்டுதான் உள்ளன. தேர்தல் முடிவடைந்த பிறகு நிலைமை சீராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Marazzo Sales Down - 1,692 Cars Sold In April 2019. Read in Tamil
Story first published: Friday, May 10, 2019, 21:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X