மஹிந்திரா 2019 நவம்பர் மாதத்திற்கான விற்பனை நிலவரம்... பலேரோ, ஸ்கார்பியோ மாடல்கள் முன்னிலை...

மஹிந்திரா நிறுவனத்தின் 2019 நவம்பர் மாதத்திற்கான விற்பனை நிலவரம் வெளிவந்துள்ளது. இதன்படி பார்க்கும்போது மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் அல்டுராஸ் ஜி4 மாடல்கள் கடந்த மாதத்தில் பெரிய அளவில் வீழ்ச்சியடைந்திருப்பது தெரிய வருகிறது.

மஹிந்திரா 2019 நவம்பர் மாதத்திற்கான விற்பனை நிலவரம்... பலேரோ, ஸ்கார்பியோ மாடல்கள் முன்னிலை...

மஹிந்திரா நிறுவனத்தின் இந்த விற்பனை லிஸ்ட்டில் பலேரோ மாடல் 5,127 கார்கள் விற்பனையுடன் உள்ளது. இருப்பினும் இந்த எண்ணிக்கை நவம்பர் 2018ஆம் மாதத்தை விட 8.15 சதவீதமும் செப்டம்பர் 2019-ஐ விட 12.87 சதவீதமும் குறைவாகும்.

மஹிந்திரா 2019 நவம்பர் மாதத்திற்கான விற்பனை நிலவரம்... பலேரோ, ஸ்கார்பியோ மாடல்கள் முன்னிலை...

அடுத்ததாக இரண்டாவது இடத்தில் உள்ள ஸ்கார்பியோ மாடல் தான் 2018 நவம்பர் மாதத்தை விட இந்த நவம்பர் மாதத்தில் கூடுதலாக விற்பனையான காராக உள்ளது. ஸ்கார்பியோ காரின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 3,878 ஆகும். இருப்பினும் இந்த எண்ணிக்கை 4,628 கார்கள் விற்பனையான 2019 அக்டோபர் மாதத்தை விட 16.21 சதவீதம் குறைவு தான்.

மஹிந்திரா 2019 நவம்பர் மாதத்திற்கான விற்பனை நிலவரம்... பலேரோ, ஸ்கார்பியோ மாடல்கள் முன்னிலை...

மூன்றாவது இடத்தில் 2,224 கார்கள் விற்பனையுடன் இந்த வருட துவக்கத்தில் அறிமுகமான எக்ஸ்யூவி300 மாடல் உள்ளது. இந்த மாடலின் கடந்த மாத விற்பனையும் 2019 செப்டம்பர் மாதத்தை விட 26.96 சதவீதம் குறைந்துள்ளது.

மஹிந்திரா 2019 நவம்பர் மாதத்திற்கான விற்பனை நிலவரம்... பலேரோ, ஸ்கார்பியோ மாடல்கள் முன்னிலை...

2018 செப்டம்பர் மாதம் அறிமுகமான மராஸ்ஸோ 1,007 கார்கள் விற்பனையுடன் நான்காவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 3,387 யூனிட்கள் விற்பனையான இந்த கார், இதன் பிரிவில் உள்ள டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, மாருதி சுசுகி எர்டிகா மற்றும் சமீபத்தில் அறிமுகமான மாருதி எக்ஸ்எல்6 மாடல்களின் கடுமையான போட்டியால் மிக பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த மாடல் கடந்த அக்டோபர் மாதத்தில் 1,044 கார்கள் விற்பனையாகி இருந்தது.

மஹிந்திரா 2019 நவம்பர் மாதத்திற்கான விற்பனை நிலவரம்... பலேரோ, ஸ்கார்பியோ மாடல்கள் முன்னிலை...

இதற்கு அடுத்ததாக எக்ஸ்யூவி500, டியூவி300 மாடல்கள் உள்ளன. இவை இரண்டும் கடந்த மாதத்தில் முறையே 981, 683 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. இவற்றின் எண்ணிக்கை 2018 நவம்பர் மாதத்தை விட முறையே 4.94 % மற்றும் 31.15 சதவீதம் குறைவு. அதேபோல் 2019 அக்டோபர் மாதத்தை விட முறையே 28.81%, 45.18 % குறைவாகும்.

மஹிந்திரா 2019 நவம்பர் மாதத்திற்கான விற்பனை நிலவரம்... பலேரோ, ஸ்கார்பியோ மாடல்கள் முன்னிலை...
Rank Models Oct-19 Nov-19 Nov-18
1 Mahindra Bolero 5,884 5,127 5,582
2 Mahindra Scorpio 4,628 3,878 2,906
3 Mahindra XUV300 3,045 2,224 0
4 Mahindra Marazzo 1,044 1,007 3,387
5 Mahindra XUV500 1,378 981 1,032
6 Mahindra TUV300 1,246 683 992
7 Mahindra Xylo 87 87 239
8 Mahindra KUV100 183 84 469
9 Mahindra Verito 138 79 106
10 Mahindra Thar 180 53 226
11 Mahindra Alturas 101 35 216

இவற்றிற்கு அடுத்துள்ள மாடல்கள் அனைத்தும் இரு இலக்க எண்களை தான் விற்பனை எண்ணிக்கையாக கொண்டுள்ளன. ஏழாவது இடத்தில் மஹிந்திரா ஸைலோ, கடந்த மாதத்தில் வெறும் 87 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இதே எண்ணிக்கையில் தான் கடந்த அக்டோபர் மாதமும் இந்த கார் விற்பனையாகி இருந்தது. ஆனால் இந்த மாடல் 2018 நவம்பர் மாதத்தில் 239 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டது.

Most Read:பிஸியான சாலையில் ஜாலியாக கார் ஓட்டி சென்ற சிறுவன்... வயதை கேட்டு ஷாக் ஆன போலீஸ்...

மஹிந்திரா 2019 நவம்பர் மாதத்திற்கான விற்பனை நிலவரம்... பலேரோ, ஸ்கார்பியோ மாடல்கள் முன்னிலை...

8வது, 9வது மற்றும் 10வது இடங்களில் முறையே கேயூவி100, வெரிட்டோ மற்றும் தார் மாடல்கள், 84, 79, 53 யூனிட்கள் விற்பனையுடன் உள்ளன. இவை மூன்றும் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை விடவும் 2019 அக்டோபர் மாதத்தை விடவும் விற்பனையில் மிக பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

Most Read:புல்லட் புரூஃப் காரை ஒதுக்கி வைத்து விட்டு சாதாரண காரை பயன்படுத்தும் அமிர்கான்... ஓ அப்படியா விஷயம்!

மஹிந்திரா 2019 நவம்பர் மாதத்திற்கான விற்பனை நிலவரம்... பலேரோ, ஸ்கார்பியோ மாடல்கள் முன்னிலை...

கடைசியாக 11வது இடத்தில் அல்டுராஸ் மாடல் வெறும் 35 கார்கள் விற்பனையுடன் உள்ளது. இந்த கார் 2018 நவம்பரில் 216 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இதனால் இந்த கார் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது சுமார் 83.80 சதவீத விற்பனை வீழ்ச்சியை அடைந்துள்ளது. அதேபோல் கடந்த அக்டோபர் மாதத்தை விட 65.35 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

Most Read:சாலையை கடக்க முயன்ற சிறுமி.. காற்றில் தூக்கி வீசிய அதிவேக கார்! பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ!

மஹிந்திரா 2019 நவம்பர் மாதத்திற்கான விற்பனை நிலவரம்... பலேரோ, ஸ்கார்பியோ மாடல்கள் முன்னிலை...

மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்யூவி300 மாடல்களை தவிர்த்து வெறெந்த காரும் 2018 நவம்பரை விட அதிக விற்பனை எண்ணிக்கையை கடந்த மாதத்தில் பெறவில்லை. 2019 அக்டோபர் மாத விற்பனையுடன் ஒப்பிட்டால் இந்த இரு மாடல்கள் கூட விற்பனை வீழ்ச்சியவே கடந்த நவம்பர் மாதத்தில் அடைந்துள்ளன.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Sales November Table
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more