உலகின் முதல் எலெக்ட்ரிக் ஹைப்பர் காரை வெளியிட்ட பினின்ஃபரீனா!

உலகின் அதிசக்திவாய்ந்த முதல் மின்சார ஹைப்பர் கார் மாடலை பினின்ஃபரீனா நிறுவனம் உருவாக்கி இருக்கிறது.

மஹிந்திரா நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் பினின்ஃபரீனா நிறுவனம் பேட்டரியில் இயங்கும் உலகின் சக்திவாய்ந்த ஹைப்பர் காரை வெளியிட்டு இருக்கிறது. புகாட்டி சிரோன் காரைவிட சக்திவாய்ந்த இந்த மின்சார காரின் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை பார்க்கலாம்.

உலகின் முதல் எலெக்ட்ரிக் ஹைப்பர் காரை வெளியிட்ட பினின்ஃபரீனா!

ஃபெராரி, பிஎம்டபிள்யூ உள்பட உலகின் பல முன்னணி கார் நிறுவனங்களின் பிரபல கார் மாடல்களை வடிவமைத்து கொடுத்த பெருமை இத்தாலியை சேர்ந்த பினின்ஃபரீனா நிறுவனத்திற்கு உண்டு. இந்த நிறுவனம் தற்போது மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

உலகின் முதல் எலெக்ட்ரிக் ஹைப்பர் காரை வெளியிட்ட பினின்ஃபரீனா!

இந்தநிலையில், மஹிந்திரா வசம் வந்தபின் பொருளாதாரத்தில் வலுவாக மாறி இருக்கும் பினின்ஃபரீனா நிறுவனம் தற்போது சொந்தமாக கார்களை தயாரிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. முதல் முயற்சியிலேயே உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது மஹிந்திரா - பினின்ஃபரீனா கூட்டணி.

உலகின் முதல் எலெக்ட்ரிக் ஹைப்பர் காரை வெளியிட்ட பினின்ஃபரீனா!

ஆம். உலகின் அதிசக்திவாய்ந்த முதல் மின்சார ஹைப்பர் கார் மாடலை பினின்ஃபரீனா நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. பேட்டிஸ்டா என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த மின்சார கார் ஜெனிவா மோட்டார் ஷோவின் மூலமாக பொது பார்வைக்கு கொண்டு வரப்படுகிறது.

உலகின் முதல் எலெக்ட்ரிக் ஹைப்பர் காரை வெளியிட்ட பினின்ஃபரீனா!

கிரான்ட் டூரர் ரகத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த மின்சார கார் மாடல் ஜெனிவா மோட்டார் ஷோ வரும் பார்வையாளர்களை பெரிதும் கவரும் என்று கருதப்படுகிறது. மொத்தம் 3 கார்களை காட்சிக்கு நிறுத்தியுள்ளது பினின்ஃபரீனா நிறுவனம்.

உலகின் முதல் எலெக்ட்ரிக் ஹைப்பர் காரை வெளியிட்ட பினின்ஃபரீனா!

மொத்தம் 150 பினின்ஃபரீனா பேட்டிஸ்டா கார்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட இருக்கின்றன. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கிழக்காசிய பிராந்தியங்களை குறிவைத்து விற்பனை செய்யப்பட இருக்கிறது.

உலகின் முதல் எலெக்ட்ரிக் ஹைப்பர் காரை வெளியிட்ட பினின்ஃபரீனா!

இந்த சக்திவாய்ந்த மின்சார கார் மாடலானது கார்பன் ஃபைபரிலான மோனோகாக் எனப்படும் ஒற்றை உடற்கூடு அமைப்பை பெற்றிருக்கிறது. எனவே, மிக உறுதியானதாகவும், சிறந்த கையாளுமையை வழங்கும் மாடலாகவும் இருக்கும்.

உலகின் முதல் எலெக்ட்ரிக் ஹைப்பர் காரை வெளியிட்ட பினின்ஃபரீனா!

இந்த காரில் T வடிவிலான 120 kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 4 மின் மோட்டார்கள் மூலமாக 4 சக்கரங்களுக்கும் சக்தி செலுத்தப்படுகிறது. டார்க் வெக்டரிங் அடிப்படையில் 4 சக்கரங்களுக்கும் போதுமான டார்க் திறன் கொடுக்கப்டும்.

உலகின் முதல் எலெக்ட்ரிக் ஹைப்பர் காரை வெளியிட்ட பினின்ஃபரீனா!

இந்த காரின் சக்கரங்களில் 390 மிமீ டிஸ்க்குகள் கொண்ட கார்பன் செராமிக் 6 பிஸ்டன் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. பிரேக் பிடிக்கும்போது விரயமாகும் ஆற்றல் பேட்டரியில் சேமிக்கக்கூடிய ரீஜெனரேட்டிவ் பிரேக் சிஸ்டமும் உள்ளது. அதன் ஆக்டிவ் ஏர் விங் அமைப்பும், ஏர் பிரேக் போன்று செயல்படும்.

உலகின் முதல் எலெக்ட்ரிக் ஹைப்பர் காரை வெளியிட்ட பினின்ஃபரீனா!

சொகுசுடன் சிறந்த கையாளுமையையும் வழங்கும் விதத்தில் இதன் சஸ்பென்ஷன் சிஸ்டம் மிகச் சிறப்பாக ட்யூனிங் செய்யப்படடு இருப்பதாக பினின்ஃபரீனா தெரிவிக்கிறது. மின்னணு தொழில்நுட்ப முறையில் ஓட்டுனர் விரும்பும் டிரைவிங் மோடில் வைத்து ஓட்ட முடியும்.

உலகின் முதல் எலெக்ட்ரிக் ஹைப்பர் காரை வெளியிட்ட பினின்ஃபரீனா!

இது மின்சார கார் என்பதால், சைலென்சர் சப்தத்திற்கு வேலை இல்லை. ஆனால், ஓட்டுபவருக்கும், இந்த காரை பார்ப்போருக்கும் அது ஏமாற்றத்தை தரலாம். இதற்காகவே, செயற்கையாக சைலெசன்சர் சப்தத்தை வழங்கும் விதத்தில் சிறப்பு சப்த உருவாக்க கருவி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

உலகின் முதல் எலெக்ட்ரிக் ஹைப்பர் காரை வெளியிட்ட பினின்ஃபரீனா!

பினின்ஃபரீனா பேட்டிஸ்டா எலெக்ட்ரிக் ஹைப்பர் காரில் இருக்கும் மின்மோட்டார்கள் அதிகபட்சமாக 1,900 குதிரை சக்தி திறனையும், 2,300 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. அதாவது, புகாட்டி சிரோன் ஹைப்பர் காரைவிட இது மிக சக்திவாய்ந்த மாடல்.

உலகின் முதல் எலெக்ட்ரிக் ஹைப்பர் காரை வெளியிட்ட பினின்ஃபரீனா!

இந்த கார் 0 -100 கிமீ வேகத்தை வெறும் 2 வினாடிகளிலும், 0 -300 கிமீ வேகத்தை 12 வினாடிகளிலும் எட்டிவிடும் வல்லமை வாய்ந்தது. இந்த கார் 350 கிமீ வேகத்தை எட்டும் திறன் வாய்ந்தது. ஒருமுறை பேட்டரியை சார்ஜ் செய்தால் 450 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். எல்லாவற்றையும் விட இந்த கார் புகையை வெளிப்படுத்தாது என்பதுதான் ஆகச்சிறந்த விஷயமாக பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Mahindra’s Pininfarina Battista hypercar Revealed.
Story first published: Tuesday, March 5, 2019, 13:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X