மஹிந்திரா எஸ்யூவி கார்களில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள்... விலையும் உயர்கிறது!

மஹிந்திரா எஸ்யூவி கார்களின் விலை கணிசமாக உயர்த்தப்பட இருக்கிறது. அதற்கான காரணங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திரா கார்களின் விலை உயர்கிறது!

வரும் ஜூலை 1 முதல் இந்தியாவில் ஏஐஎஸ் 145 என்ற புதிய பாதுகாப்பு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதனால், கார்களில் பல முக்கிய பாதுகாப்பு வசதிகள் கட்டாயமாக்கப்பட இருக்கின்றது. அதன்படி, மஹிந்திரா நிறுவனம் தனது எஸ்யூவி வகை கார்களில் இந்த புதிய பாதுகாப்பு அம்சங்களை சேர்க்க இருக்கிறது.

மஹிந்திரா கார்களின் விலை உயர்கிறது!

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, பொலிரோ, டியூவி300 மற்றும் கேயூவி100 ஆகிய எஸ்யூவிகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட இருக்கின்றன. இதனால், இந்த கார்களின் விலை ரூ.36,000 வரை உயர்த்தப்பட இருக்கிறது.

மஹிந்திரா கார்களின் விலை உயர்கிறது!

இதேபோன்று, மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் மராஸ்ஸோ கார்களிலும் சில பாதுகாப்பு வசதிகளை சேர்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதனால், இந்த கார்களின் விலை சற்றே உயர்த்தப்பட இருக்கிறது. பெரிய அளவில் இருக்காது.

மஹிந்திரா கார்களின் விலை உயர்கிறது!

அதேநேரத்தில், அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி மாடல்கள் ஏஐஎஸ் 145 பாதுகாப்பு அம்சங்களுடன் விற்பனைக்கு வந்ததால், விலை ஏற்றம் இல்லை. இதனால், பழைய விலையிலேயே தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா கார்களின் விலை உயர்கிறது!

பாதுகாப்பு அம்சங்களை சேர்ப்பதன் காரணமாகவே, கார்களின் விலையை உயர்த்துவதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. வரும் ஜூலை 1 முதல் இந்த புதிய விலை உயர்வு அமலுக்கு வர இருக்கிறது.

மஹிந்திரா கார்களின் விலை உயர்கிறது!

புதிய ஏஐஎஸ் 145 பாதுகாப்பு விதிகளின்படி, டியூவல் ஏர்பேக்குகள், சீட்பெல்ட் ரிமைன்டர், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஹை ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் ஆகியவை முக்கிய பாதுகாப்பு வசதிகளாக இடம்பெற வேண்டும். இதுதவிர்த்து, வரும் அக்டோபர் 1 முதல் புதிய கிராஷ் டெஸ்ட் விதிகள் அமலுக்கு வர இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

MOST READ: ஹூண்டாய் வெனியூ கார் டெலிவிரி துவங்கியது... வாடிக்கையாளர்கள் குஷி

மஹிந்திரா கார்களின் விலை உயர்கிறது!

மஹிந்திராவை தொடர்ந்து இதர நிறுவனங்களும் வரும் ஜூலை 1 முதல் கார்களின் விலையை உயர்த்தும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள், டீலரில் முன்பதிவு செய்யும்போதே, விலை உயர்வு குறித்து தெரிந்து கொண்டு முன்பதிவு செய்வது நல்லது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா
English summary
Mahindra SUVs to get a price hike in India up to Rs 36,000.
Story first published: Sunday, June 23, 2019, 11:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X