சென்னை அருகே சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள 2020 மஹிந்திரா தார்....

கிட்டத்தட்ட தயாரிப்பு முழுவதையும் நிறைவு செய்துவிட்ட 2020 மஹிந்திரா தார் கார் மீண்டும் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பையும் இந்திய அறிமுக விபரங்களையும் விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

சென்னை அருகே சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள 2020 மஹிந்திரா தார்...

சென்னை அருகே செங்கல்பட்டில் நடத்தப்பட்டுள்ள இந்த சோதனை ஓட்டத்தில் மஹிந்திரா தார் காரில் 18 இன்ச் அலாய் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அறிமுகத்திற்கு தயாரான நிலையில் இந்த காரின் பேனல்கள் காட்சியளிக்கின்றன.

சென்னை அருகே சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள 2020 மஹிந்திரா தார்...

மொத்தமாக பார்ப்பதற்கு இந்த 2020 தார் தற்சமயம் விற்பனையாகி வரும் தார் மாடலை விட பெரிய உருவ அமைப்பை கொண்டுள்ளது. கூடுதலாக, இந்த புதிய தார் மாடலின் ஹார்டு-டாப் வேரியண்ட்டையும் மஹிந்திரா நிறுவனம் வழங்கவுள்ளது.

சென்னை அருகே சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள 2020 மஹிந்திரா தார்...

கார் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதால், காரின் வெளிப்புறத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அப்டேட்கள் என்னென்ன என்பது சரியாக தெரியவில்லை. உட்புறத்தில் புதிய டேஸ்போர்டு, தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் அமைப்பு, அப்டேட்டான ஸ்டேரிங் வீல் மற்றும் புதிய இருக்கை அமைப்புகளுடன் இந்த 2020 மஹிந்திரா தார் மாடல் அறிமுகமாகவுள்ளது.

சென்னை அருகே சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள 2020 மஹிந்திரா தார்...

இவற்றுடன் சில புதிய தொழிற்நுட்பங்களுடனும் இந்த கார் வெளியாகவுள்ளது. மஹிந்திரா டியூவி300 மற்றும் ஸ்கார்பியோவில் உள்ளது போன்ற எச்விஏசி கண்ட்ரோலர்/ பவர் விண்டோ பொத்தான் உள்ளிட்டவை இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன.

சென்னை அருகே சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள 2020 மஹிந்திரா தார்...

ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் வெளிப்புற தோற்றத்தை கணக்கச்சிதமாக அப்படியே கொண்டிருக்கும் இந்த 2020 மஹிந்திரா தாரில் இரு என்ஜின் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த என்ஜின் தேர்வுகளில் 2.0 லிட்டர் பிஎஸ்6 டர்போ டீசல் என்ஜின், 2.5 லிட்டர் டீசல் என்ஜின் உள்ளிட்டவை அடங்கும்.

சென்னை அருகே சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள 2020 மஹிந்திரா தார்...

இதில் 2.5 லிட்டர் டீசல் என்ஜின் குறைவான விலை கொண்ட வேரியண்ட்களில் மட்டும் தான் பொருத்தப்படவுள்ளது. 120 பிஎச்பி பவரை வெளியிடும் 2.0 லிட்டர் டீசல் பிஎஸ்6 என்ஜினை மஹிந்திரா நிறுவனம் 2020 தார் மாடலுக்கு மட்டுமல்லாமல் ஸ்கார்பியோவின் புதிய தலைமுறை காருக்கும் எக்ஸ்யூவி500 மாடலுக்கும் வழங்கவுள்ளது.

சென்னை அருகே சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள 2020 மஹிந்திரா தார்...

ட்ரான்ஸ்மிஷன் அமைப்புகளாக 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. அறிமுகத்திற்கு சில மாதங்களுக்கு பின்னர் இந்த மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் பொருத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை அருகே சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள 2020 மஹிந்திரா தார்...

மேலும் இந்த என்ஜின்களுடன் தார் காரில் முதன்முறையாக பெட்ரோல் என்ஜினையும் அறிமுகப்படுத்த மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுவரை இந்நிறுவனத்தின் ஆப்-ரோட் மாடல்கள் அனைத்தும் டீசல் வேரியண்டில் மட்டுமே வெளியாகி வருகின்றன.

சென்னை அருகே சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள 2020 மஹிந்திரா தார்...

பாதுகாப்பு அம்சங்களாக இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் ப்ரேக்கிங் அமைப்பு, ட்யூல் காற்றுப்பைகள், ஸ்பீடு அலார்ட் சிஸ்டம், பின்புற பார்க்கிங் சென்சார் மற்றும் சீட் பெல்ட் நினைவூட்டுவான் போன்ற அரசாங்கம் அறிவுறுத்திய தொழிற்நுட்பங்களுடன் வெளியாகிறது. இதனால் இந்த இரண்டாம் தலைமுறை தார் மாடல் முதல் தலைமுறை காரை விட மிகவும் பாதுகாப்பான வாகனமாக விளங்கும்.

சென்னை அருகே சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள 2020 மஹிந்திரா தார்...

2020 தார் மாடலின் இதே டிசைன் தோற்றத்தில் விரைவில் வெளியாகவுள்ள ஃபோர்ஸ் நிறுவனத்தின் 2020 குர்கா மாடல் இந்த தாரின் இரண்டாம் தலைமுறை காருக்கு கடுமையான போட்டியினை கொடுக்கவுள்ளது. தாரை போல சமீபத்தில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள இந்த கார் குறித்த விரிவான தகவல்கள் கீழேயுள்ள லிங்கில் காணலாம்.

சென்னை அருகே சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள 2020 மஹிந்திரா தார்...

2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த 2020 மஹிந்திரா தார், ரூ.8 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படலாம் என தெரிகிறது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
2020 Mahindra Thar looks like Jeep Wrangler in latest spy shots
Story first published: Tuesday, November 19, 2019, 12:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X