மஹிந்திரா நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு... வாடிக்கையாளர்கள் புலம்பி தள்ள காரணம் இதுதான்...

மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு திடீர் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் புலம்பி தள்ளி வருகின்றனர்.

மஹிந்திரா நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு... வாடிக்கையாளர்கள் புலம்பி தள்ள காரணம் இதுதான்...

இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா (Mahindra) நிறுவனம் தனது பாசஞ்சர் வாகனங்களின் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் பாசஞ்சர் வாகனங்கள் மட்டுமல்லாது கமர்ஷியல் வாகனங்களின் விலையும் உயர்கிறது. 0.5-2.7 சதவீதம் வரை விலை உயர்த்தப்படுகிறது. அதாவது ரூ.5 ஆயிரம் முதல் ரூ.73 ஆயிரம் வரை விலை உயரவுள்ளது.

மஹிந்திரா நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு... வாடிக்கையாளர்கள் புலம்பி தள்ள காரணம் இதுதான்...

வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வருகிறது. ஆனால் ஒவ்வொரு மாடலுக்கும் ஏற்ப விலை எவ்வளவு மாறுபடுகிறது? என்ற துல்லியமான தகவல்களை மஹிந்திரா நிறுவனம் வெளியிடவில்லை. இந்த விலை உயர்வு தொடர்பான கூடுதல் விபரங்களை தேவைப்பட்டால், உங்களுக்கு அருகில் உள்ள மஹிந்திரா டீலர்ஷிப்களை நீங்கள் அணுகலாம்.

மஹிந்திரா நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு... வாடிக்கையாளர்கள் புலம்பி தள்ள காரணம் இதுதான்...

இந்த விலை உயர்வானது மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்த மூவர் கூட்டணியான மராஸ்ஸோ (Marazzo), அல்டுராஸ் (Alturas) மற்றும் எக்ஸ்யூவி300 (XUV300) ஆகிய மாடல்களுக்கும் பொருந்தும். இந்த 3 மாடல்களின் விற்பனையும் மஹிந்திரா நிறுவனத்தின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நல்ல முறையில் தொடங்கியுள்ளது.

மஹிந்திரா நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு... வாடிக்கையாளர்கள் புலம்பி தள்ள காரணம் இதுதான்...

எம்பிவி ரக காரான மராஸ்ஸோ, எஸ்யூவி ரக கார்களான அல்டுராஸ் மற்றும் எக்ஸ்யூவி300 ஆகிய 3 மாடல்களுக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இதில், மஹிந்திரா மராஸ்ஸோ காரானது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதல் மாதந்தோறும் 3,000 யூனிட்கள் என்ற எண்ணிக்கையில் விற்பனையாகி வருகிறது.

மஹிந்திரா நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு... வாடிக்கையாளர்கள் புலம்பி தள்ள காரணம் இதுதான்...

அதே நேரத்தில் அல்டுராஸ் காரானது, மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து வெளிவரும் மிகவும் விலை உயர்ந்த மாடல் ஆகும். இருந்தபோதும் கூட கடந்த பிப்ரவரி மாதத்தில் 460 யூனிட் அல்டுராஸ் கார்களை மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. விலையின் அடிப்படையில் பார்த்தால் 460 என்பது ஓரளவிற்கு நல்ல எண்ணிக்கைதான்.

மஹிந்திரா நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு... வாடிக்கையாளர்கள் புலம்பி தள்ள காரணம் இதுதான்...

அதே சமயம் மற்றொரு மாடலான மஹிந்திரா எக்ஸ்யூவி300, கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. லான்ச் செய்யப்பட்ட முதல் மாதத்திலேயே 4,400 யூனிட்களுக்கும் மேற்பட்ட எக்ஸ்யூவி 300 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது மஹிந்திரா. இத்தனைக்கு பிப்ரவரி மாதத்தின் நடுவில்தான் மஹிந்திரா எக்ஸ்யூவி300 அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மஹிந்திரா நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு... வாடிக்கையாளர்கள் புலம்பி தள்ள காரணம் இதுதான்...

தற்போது சப் 4 மீட்டர் எஸ்யூவி செக்மெண்ட்டில், மாருதி பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய இரண்டு கார்களுக்கு பிறகு, அதிகம் விற்பனையாகும் மூன்றாவது மாடலாக மஹிந்திரா எக்ஸ்யூவி 300 உருவெடுத்துள்ளது. அத்துடன் தற்போது மஹிந்திரா நிறுவனம் வழங்கும் மாடல்களில் அதிகம் விற்பனையாகும் 2வது காராகவும் உயர்ந்து அசத்தியுள்ளது எக்ஸ்யூவி300.

மஹிந்திரா நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு... வாடிக்கையாளர்கள் புலம்பி தள்ள காரணம் இதுதான்...

மஹிந்திரா நிறுவனம் அடுத்ததாக எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை களத்தில் இறக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த கார் தற்போது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹிந்திரா நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு... வாடிக்கையாளர்கள் புலம்பி தள்ள காரணம் இதுதான்...

இதனிடையே மஹிந்திரா நிறுவனத்திற்கு முன்னதாக டொயோட்டா, டாடா உள்ளிட்ட நிறுவனங்களும் கார்களின் விலையை வரும் ஏப்ரல் முதல் உயர்த்தவுள்ளதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ரெனால்ட் நிறுவனமும் தனது பிரபல மாடலான க்விட் காரின் விலையை உயர்த்தவுள்ளது. இந்த விலை உயர்வும் ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு இது போதாத காலம் போல!

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra To Hike Prices From 1st April By Upto Rs 73,000. Read in Tamil
Story first published: Thursday, March 28, 2019, 18:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X