விரைவில் அறிமுகமாகும் மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட்! என்னென்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம்?

மஹிந்திரா டியூவி300 காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விரைவில் அறிமுகமாகும் மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட்! என்னென்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம்?

மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் (Mahindra TUV300 Facelift) மாடல் வெகு விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டியூவி300 காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டபோது பல முறை கேமரா கண்களில் சிக்கியுள்ளது. அதன் ஸ்பை படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கின.

விரைவில் அறிமுகமாகும் மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட்! என்னென்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம்?

மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் மாடல் பல்வேறு மாற்றங்களுடன் விற்பனைக்கு வரவுள்ளது. ஆனால் பெரும்பாலான மாற்றங்கள் அழகியல் சார்ந்ததாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி இதன் முன் பகுதியில் ரீ டிசைன் செய்யப்பட்ட க்ரில் வழங்கப்படவுள்ளது. அத்துடன் டிஆர்எல்-களுடன் ஒருங்கிணைந்த அப்டேட் செய்யப்பட்ட ஹெட்லேம்ப் யூனிட் இடம்பெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் அறிமுகமாகும் மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட்! என்னென்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம்?

இதுதவிர முன் பகுதி பம்பரிலும் மஹிந்திரா நிறுவனம் சில மாற்றங்களை செய்யவுள்ளது. பனி விளக்குகளும் மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் தற்போதைய மாடலின் பக்கவாட்டு டிசைன்தான் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கும் அப்படியே கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பக்கவாட்டு டிசைனில் மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. என்றாலும் அலாய் சக்கரங்களின் டிசைன் மாறுபடலாம். பின்பகுதியை பொறுத்தவரை புதிய கிளியர்-லென்ஸ் டைப் டெயில் லேம்ப்ஸ் வழங்கப்படவுள்ளன. பின் பக்க கதவில் ஸ்பேர் வீல் பொருத்தப்பட்டிருக்கும் டிசைனும் மாற்றப்படவுள்ளது.

விரைவில் அறிமுகமாகும் மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட்! என்னென்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம்?

மஹிந்திரா டியூவி300 காரின் தற்போதைய மாடலின் நீளம் 3,995 மிமீ. அகலம் 1,835 மிமீ. உயரம் 1,839 மிமீ. வீல் பேஸ் 2,680 மிமீ. க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 184 மிமீ. புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஒட்டுமொத்த டைமன்ஸனும் சரியாக இதே அளவில்தான் இருக்கும். ஆனால் டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் கவர்ச்சியை கூட்டுவதற்கான மஹிந்திரா நிறுவனம் சில புதிய கலர் ஆப்ஷன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் அறிமுகமாகும் மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட்! என்னென்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம்?

மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் இன்டீரியரும் சில மாற்றங்களை சந்திக்கவுள்ளது. இன்டீரியரிலும் புதிய கலர் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். அத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடனான டச் ஸ்கீரின் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கண்ட்ரோல், கீ லெஸ் என்ட்ரி, புஷ்-பட்டன் ஸ்டார்ட், இரண்டாவது வரிசை ஏசி வெண்ட்கள், பார்க்கிங் சென்சார்கள் உடன் ரிவர்ஸ் கேமரா உள்ளிட்ட புதிய வசதிகளையும் மஹிந்திரா நிறுவனம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் அறிமுகமாகும் மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட்! என்னென்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம்?

இதுதவிர இந்த காம்பேக்ட் எஸ்யூவியானது, ட்யூயல் ஏர் பேக்குகள், இபிடி உடனான ஏபிஎஸ், டிரைவர் சீட் பெல்ட் அலர்ட், ஸ்பீட் அலர்ட் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுடன் வரவுள்ளது. அதே நேரத்தில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் 3,750 ஆர்பிஎம்மில் 100 பிஎச்பி பவரையும், 1,600-2,800 ஆர்பிஎம்முக்கு இடையே 240 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் இந்த இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. பிஎஸ்-6 அப்டேட் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும். பழைய மாடலை காட்டிலும் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை சற்று அதிகரிக்கலாம்.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra TUV300 Facelift Launch Details. Read in Tamil
Story first published: Saturday, April 6, 2019, 9:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X