டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கிய புதிய மஹிந்திரா கார் இதுதான்... வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம்...

மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் மாடல் டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியுள்ளது. எனவே வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கிய புதிய மஹிந்திரா கார் இதுதான்... வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம்...

மஹிந்திரா டியூவி300 (Mahindra TUV300) கார், இந்திய மார்க்கெட்டில் கடந்த 2015ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும். அறிமுகம் செய்யப்பட்ட ஆரம்பத்தில், மஹிந்திரா டியூவி300 காரின் விற்பனை நன்றாகதான் சென்று கொண்டிருந்தது. ஆனால் இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் போட்டி அதிகரிக்க அதிகரிக்க, மஹிந்திரா டியூவி300 காரின் விற்பனை சற்றே 'டல்' அடிக்க தொடங்கியது.

டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கிய புதிய மஹிந்திரா கார் இதுதான்... வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம்...

கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு மிகவும் லாபகரமானதாக கருதப்படும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய கார்கள் போட்டிக்கு வந்தபின் மஹிந்திரா டியூவி300 காரின் விற்பனை சற்று மோசமான நிலைக்கு சென்று விட்டது என்றே சொல்லலாம். எனவே டியூவி300 காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் மஹிந்திரா நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகிறது.

MOST READ: அமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான்! எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்...

டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கிய புதிய மஹிந்திரா கார் இதுதான்... வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம்...

அப்டேட் செய்யப்பட்ட 2019 மாடல் டியூவி300 கார்கள் தற்போது இந்தியாவில் உள்ள பல்வேறு மஹிந்திரா நிறுவன டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கி விட்டன. மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதையே இது உணர்த்துகிறது. இது தொடர்பாக Gyani Enough என்ற யூ-டியூப் சேனல் வெளியிட்டுள்ள வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதல் டியூவி300 காரில் செய்யப்பட்ட முதல் பெரிய அப்டேட் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மஹிந்திரா டியூவி300 காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், அப்டேட் செய்யப்பட்ட ஹெட்லேம்ப்ஸ், க்ரில் மற்றும் முன்பக்க பம்பர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. பின்பக்க பம்பரும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர புதிய அலாய் வீல்களும் பொருத்தப்பட்டுள்ளன.

MOST READ: மொபைல் நம்பரை புதுப்பித்த இந்தியருக்கு துபாயில் அடித்த அதிர்ஷ்டம்: ஒரே நாளில் கோடீஸ்வரரானது எப்படி?

டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கிய புதிய மஹிந்திரா கார் இதுதான்... வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம்...

ஆனால் இன்டீரியரில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன? என்பது தெளிவாக தெரியவில்லை. என்றாலும் பெரும்பாலான மாற்றங்கள் பாதுகாப்பு தொடர்புடையதாகதான் இருக்கும் என கருதப்படுகிறது. புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில், டிரைவர் ஏர் பேக், ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள், டிரைவர் மற்றும் கோ-பாசஞ்சருக்கு சீட் பெல்ட் ரிமைண்டர் மற்றும் ஸ்பீட் வார்னிங் சிஸ்டம் ஆகியவை ஸ்டாண்டர்டாக இடம்பெறவுள்ளது.

டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கிய புதிய மஹிந்திரா கார் இதுதான்... வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம்...

மெக்கானிக்கலாக பார்த்தால், 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடனே புதிய டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 100 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. T4+, T6+, T8, T10 மற்றும் டாப் எண்ட் T10 (O) என மொத்தம் 5 வேரியண்ட்களில் புதிய டியூவி300 கார் கிடைக்கும். டியூவி300 காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை அறிமுகம் செய்யும் திட்டம் மஹிந்திரா நிறுவனத்திற்கு உள்ளதா? என்பது தற்போது வரை தெரியவரவில்லை. ரஸ்லேன் தளம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, அப்டேட் செய்யப்பட்டுள்ளதான் காரணமாக தற்போது உள்ள மாடலை காட்டிலும், மஹிந்திரா டியூவி300 காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை சற்று அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra TUV300 Facelift Spotted At Dealership Yard — Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X