மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவி சோதனை... ஸ்பை படங்கள் வெளியானது!

கூடுதல் அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த காரின் ஸ்பை படங்களும் வெளியாகி இருக்கின்றன.

மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவி சோதனை... ஸ்பை படங்கள் வெளியானது!

கடந்த ஆண்டு மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது. சாதாரண டியூவி300 எஸ்யூவியின் அதிக வீல் பேஸ் நீளம் கொண்ட மாடலாக இந்த கார் உருவாக்கப்பட்டதுடன், 9 பேர் பயணிக்கும் இருக்கை அமைப்புடன் அறிமுகமானது. டாக்சி மார்க்கெட்டை குறிவைத்து இந்த கார் களமிறக்கப்பட்டது.

மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவி சோதனை... ஸ்பை படங்கள் வெளியானது!

இரண்டாது வரிசையில் மூன்று அமர்வதற்கான பெஞ்ச் இருக்கையும், மூன்றாவது வரிசையில் பக்கவாட்டில் இரண்டு ஜம்ப் வகையிலான இருக்கைகளும் இடம்பெற்றிருந்தன. இது தனிநபர் பயன்பாட்டுக்கு உகந்த அம்சங்களை பெற்றிருக்கவில்லை.

மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவி சோதனை... ஸ்பை படங்கள் வெளியானது!

இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அம்சங்களுடன் மாறுதல் செய்யப்பட்ட எஞ்சினுடன் புதிய டியூவி300 ப்ளஸ் கார் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் தற்போது சாலை சோதனை ஓட்டத்தில் வைத்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவி சோதனை... ஸ்பை படங்கள் வெளியானது!

ஸ்பை படங்களில் அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில் வைத்து இந்த கார் சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், புதிய க்ரில் அமைப்பு மற்றும் பம்பர் அமைப்பு இடம்பெற்றுள்ளது. புதிய ஹெட்லைட் க்ளஸ்ட்டரும் உள்ளது தெரிகிறது.

மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவி சோதனை... ஸ்பை படங்கள் வெளியானது!

இந்த காரின் உட்புறத்தில் முக்கிய மாற்றமாக இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கை அமைப்பும், மூன்றாவது வரிசையில் முன்னோக்கிய இருக்கை அமைப்பும் வழங்கப்பட இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதாவது,பழைய மாடலைவிட பிரிமீயமாக தனிநபர் மார்க்கெட்டை குறிவைத்து அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவி சோதனை... ஸ்பை படங்கள் வெளியானது!

புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவியில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 140 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறனுடன் வர இருக்கிறது. இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும். இதே எஞ்சின்தான் புதிய ஸ்கார்ப்பியோ மற்றும் தார் எஸ்யூவிகளில் பயன்படுத்தப்பட இருக்கிறது.

மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவி சோதனை... ஸ்பை படங்கள் வெளியானது!

அடுத்த சில மாதங்களில் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தனித்துவமான இருக்கை வசதி கொண்ட ரகத்தில், விலை குறைவான தேர்வாக இருக்கும்.

Source: Autocarindia

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
A new set of spy images have appeared in internet which shows a camouflaged Mahindra TUV300 Plus undergoing testing.
Story first published: Saturday, October 5, 2019, 13:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X