புது அப்கிரேஷனுடன் உருவாகிறது மஹிந்திராவின் எக்ஸ்யூவி500: அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு...

மஹிந்திரா நிறுவனம் அதன் பிரபல தயாரிப்பான எக்ஸ்யூவி500 மாடலை, வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப அப்கிரேட் செய்ய உள்ளது. அப்படி என்ன ஸ்பெஷல் அப்கிரேடை அவர்கள் செய்ய இருக்கிறார்கள் என்பதை விளக்கும் பதிவு இது.

புது அப்கிரேஷனுடன் உருவாகிறது மஹிந்திராவின் எக்ஸ்யூவி500: அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு... இதைப் பார்த்த நீங்களும் வங்க ஆசைப்படுவீங்க...

இந்திய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா, அதன் எக்ஸ்யூவி500 மாடல் காரை 12 வேரியண்ட்டுகளிலும், 8க்கும் மேற்பட்ட வண்ணங்களிலும் விற்பனை செய்து வருகிறது.

புது அப்கிரேஷனுடன் உருவாகிறது மஹிந்திராவின் எக்ஸ்யூவி500: அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு... இதைப் பார்த்த நீங்களும் வங்க ஆசைப்படுவீங்க...

இந்த மாடலின் பிரம்மாண்ட தோற்றத்தில் மயங்கிய வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்கள் காத்திருந்து மஹிந்திராவின் எக்ஸ்யூவியைப் பெற்றுச் செல்லும் அளவுக்கு அதன்மீது மோகம் வைத்துள்ளனர்.

புது அப்கிரேஷனுடன் உருவாகிறது மஹிந்திராவின் எக்ஸ்யூவி500: அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு... இதைப் பார்த்த நீங்களும் வங்க ஆசைப்படுவீங்க...

இதைத்தொடர்ந்து, எக்ஸ்யூவி500ஐ மேலும் மெருகேற்றும் விதமாக மஹிந்திரா நிறுவனம் அதனை தற்போது உருவாக்கி வருகிறது. இந்த புதிய மாடல் முழுமை செய்யப்பட்டு 2020 ஆம் ஆண்டுக்குள் வெளியிடப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

புது அப்கிரேஷனுடன் உருவாகிறது மஹிந்திராவின் எக்ஸ்யூவி500: அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு... இதைப் பார்த்த நீங்களும் வங்க ஆசைப்படுவீங்க...

அதன்படி, எக்ஸ்யூவி500-ல் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப சில வசதிகளையும், மாற்றங்களையும் கொண்டுவர மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புது அப்கிரேஷனுடன் உருவாகிறது மஹிந்திராவின் எக்ஸ்யூவி500: அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு... இதைப் பார்த்த நீங்களும் வங்க ஆசைப்படுவீங்க...

இதுகுறித்து எமது செய்தியாளருக்கு கிடைத்த தகவலின்படி, மஹிந்திராவின் தற்போதைய எக்ஸ்யூவி500-ன் மோனோகோக்யூ சேஸிஸைப் போலவே ஜென்2 எக்ஸ்யூவி500-ம் வடிவமைக்கப்பட உள்ளது.

MOST READ: தலைமை ஆசிரியருக்கு புல்லட் பரிசளித்த மாணவ, மாணவிகள்... காரணம் தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

புது அப்கிரேஷனுடன் உருவாகிறது மஹிந்திராவின் எக்ஸ்யூவி500: அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு... இதைப் பார்த்த நீங்களும் வங்க ஆசைப்படுவீங்க...

முன்னதாக, இந்த மாடலில் ஆறு ஏர்பேக்குகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், நிலைத்தன்மையுடன் காரை செலுத்தும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், சரிவான மலைப்பாதைகளில் செலுத்துவதற்கான ஹில் ஹோல்டு மற்றும் ஹில் டிசென்ட் கன்ட்ரோல் சிஸ்டம் பொருத்தப்பட்டிருந்தன.

புது அப்கிரேஷனுடன் உருவாகிறது மஹிந்திராவின் எக்ஸ்யூவி500: அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு... இதைப் பார்த்த நீங்களும் வங்க ஆசைப்படுவீங்க...

மேலும், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, பனி விளக்குகள், வளைவுகளில் கார் திரும்பும்போது அந்த திசையில் ஒளியை பாய்ச்சும் ஸ்டேட்டிக் ஹெட்லைட்டுகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் டாப் வேரியண்ட்டில் கொடுக்கப்பட்டிருந்தன.

புது அப்கிரேஷனுடன் உருவாகிறது மஹிந்திராவின் எக்ஸ்யூவி500: அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு... இதைப் பார்த்த நீங்களும் வங்க ஆசைப்படுவீங்க...

ஆனால், தற்போது உருவாக்கப்படும் எஸ்யூவி500-ல், முந்தைய மாடலைக் காட்டிலும் பாதுகாப்பு அம்சங்களைக் அதிகரிக்கும் நோக்கில் மஹிந்திரா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் இந்தியாவின் அதீத பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட காராக இதனை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புது அப்கிரேஷனுடன் உருவாகிறது மஹிந்திராவின் எக்ஸ்யூவி500: அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு... இதைப் பார்த்த நீங்களும் வங்க ஆசைப்படுவீங்க...

இதைத்தொடர்ந்து, எக்ஸ்யூவி500-ன் எஸ்யூவி மாடலான டபிள்யு601 என்ற ஸ்போர்ட்ஸ் ரக காரில் மேம்படுத்தப்பட்ட எஞ்ஜின் நிறுவப்பட உள்ளது. மாற்றங்கள் செய்யப்பட்ட இந்த புதிய மாடலும் வருகின்ற 2020 ஆம் ஆண்டு வெளியடப்படும்.

புது அப்கிரேஷனுடன் உருவாகிறது மஹிந்திராவின் எக்ஸ்யூவி500: அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு... இதைப் பார்த்த நீங்களும் வங்க ஆசைப்படுவீங்க...

ஜென்2 மஹிந்திரா எக்ஸ்யூவி500 மாடல் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் டீசல் எஞ்ஜின் மூலம் இயங்க உள்ளது. இது BS-VI இன் தொழில்நுடபத்தில் நிறுவப்படும். வருகின்ற காலக்கட்டத்தில் இந்தியாவின் மாசுகட்டுப்பாட்டு கொள்கைக்கு வழிவகுக்கும் நோக்கில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

MOST READ: ஆதாருடன் இதையும் இணைக்க வேண்டுமா?... வருகிறது புதிய சட்டம்

புது அப்கிரேஷனுடன் உருவாகிறது மஹிந்திராவின் எக்ஸ்யூவி500: அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு... இதைப் பார்த்த நீங்களும் வங்க ஆசைப்படுவீங்க...

மேலும், பார்வையாளர்களை கவரும் வகையில் இதன் வெளிப்புறத் தோற்றத்தை உருவாக்கும் நோக்கில், மஹிந்திரா நிறுவனத்துக்கு சொந்தமான இத்தாலிய ஐகானிக் வடிவமைப்பு நிறுவனமான பினின்பர்னியாவுக்கு வெளிப்புற தோற்றத்தினை டிசைன் செய்யும் பணி கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், மேம்பாட்டு பணிக்காக மஹிந்திராவின் வட அமெரிக்க தொழில்நுட்ப மையமான மராஸ்ஸோ எம்பிவி-யும் இணைய உள்ளது.

புது அப்கிரேஷனுடன் உருவாகிறது மஹிந்திராவின் எக்ஸ்யூவி500: அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு... இதைப் பார்த்த நீங்களும் வங்க ஆசைப்படுவீங்க...

தொடர்ந்து வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப, தற்போதைய எக்ஸ்யூவி500-ன் உள்ளிருப்பைக் காட்டிலும், புதிதாக தயாராகி வரும் மாடலில் பெரிய அளவில் ஸ்பேஸ் இருக்குமாறும் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இது வாடிக்கையாளர்களின் இட தேவையைப் பூர்த்தி செய்யும்.

புது அப்கிரேஷனுடன் உருவாகிறது மஹிந்திராவின் எக்ஸ்யூவி500: அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு... இதைப் பார்த்த நீங்களும் வங்க ஆசைப்படுவீங்க...

இந்த புதிய மஹிந்திராவின் அப்கிரஷன் மாடல் வாடிக்கையாளர்களிடையே பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், இது சந்தையில் வரும்போது அதன் போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளான ஹுண்டாய் க்ரெட்டா, கியாவின் முதல் எஸ்யூவி, ஸ்கோடா மற்றும் வோக்ஸ்வேகன் ஆகிய கார்களுடன் கடும் போட்டியைச் சந்திக்க உள்ளது.

Most Read Articles
English summary
Next Gen Mahindra XUV 500 To Arrive With New Engine. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X