மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் டீசல் ஏஎம்டி மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் ஆட்டோஷிஃப்ட் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. இந்த ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வானது W8 மற்றும் W8(O) ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் வழங்கப்படுகிற

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் டீசல் மாடல் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வில் விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்த முழுமையானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஏஎம்டி மாடல் அறிமுகம்!

கடந்த பிப்ரவரி மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவிக்கு பெரிய அளவிலான வரவேற்பு கிடைத்துள்ளது. பெட்ரோல், டீசல் மாடல்களில் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே விற்பனைக்கு வந்தது. இந்த நிலையில், இன்று டீசல் மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் ஆட்டோஷிஃப்ட் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. இந்த ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வானது W8 மற்றும் W8(O) ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் வழங்கப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஏஎம்டி மாடல் அறிமுகம்!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட W8 வேரியண்ட்டிற்கு ரூ.11.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், W8(O) வேரியண்ட்டிற்கு ரூ.12.70 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளுடன் ஒப்பிடும்போது ஏஎம்டி கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகள் ரூ.55,000 கூடுதல் விலையில் வந்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஏஎம்டி மாடல் அறிமுகம்!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஏஎம்டி மாடல்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து மஹிந்திரா டீலர்களிலும் இன்று முதல் விற்பனைக்கு கிடைக்கும். டெலிவிரி கொடுக்கும் பணிகளும் உடனடியாக துவங்கப்படுவதாக மஹந்திரா அறிவித்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஏஎம்டி மாடல் அறிமுகம்!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. ஏஎம்டி கியர்பாக்ஸ் மட்டுமின்றி, டீசல் மாடலானது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஏஎம்டி மாடல் அறிமுகம்!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஏஎம்டி மாடலில் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் முறையில் இயக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆட்டோமேட்டிக் மோடில் வைத்து இயக்கும்போது அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் ஓட்டுவதற்கு எளிதான அனுபவத்தை வழங்கும். மேனுவல் முறையில் இயக்கும்போது அதிக செயல்திறனை வெளிப்படுத்தும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஏஎம்டி மாடல் அறிமுகம்!

இந்த எஸ்யூவியில் க்ரீப் வசதியும் உள்ளது. அதாவது, முதல் கியர் மற்றும் ரிவர்ஸ் கியரில் இயக்கும்போது ஆக்சிலரேட்டர் கொடுக்காமலேயே கார் குறிப்பிட்ட வேகத்தில் நகரும். இதனால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஓட்டுவதற்கு ஏதுவானதாக இருக்கும்.கதவுகள் திறந்திருந்தால், க்ரீப் தொழில்நுட்பம் மூலமாக கார் நகராமல் தவிர்க்கும் வசதியும் உள்ளது. தவிரவும், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் வசதி, மலைச் சாலைகளில் கார் செல்லும்போது கார் பின்னோக்கி நகராமல் தவிர்க்கும் ஹில் அசிஸ்ட் தொழில்நுட்பம் உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் உள்ளன..

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஏஎம்டி மாடல் அறிமுகம்!

இந்த எஸ்யூவியில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் ஆகிய வசதிகளும் உள்ளன. மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஏஎம்டி மாடலானது பியர்ல் ஒயிட், அக்வாமரைன் மற்றும் ரெட் ரேஜ் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும். காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஏஎம்டி மாடல் சிறந்த தேர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஏஎம்டி மாடல் அறிமுகம்!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலிலும் கிடைக்கிறது. இந்த டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா
English summary
Mahindra has launched the XUV300 AMT in the Indian market. The new Mahindra XUV300 AMT is priced at a premium of Rs 55,000 over the standard manual variants on offer.
Story first published: Tuesday, July 2, 2019, 20:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X