செயல்திறனில் மிரட்ட வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக்!

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காருக்கு இணையான செயல்திறனை வெளிப்படுத்தும் ஆற்றலுடன் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் வர இருப்பது தெரிய வந்துள்ளது.

செயல்திறனில் மிரட்ட வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக்!

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி பிரிமீயம் தேர்வாக மாறி இருக்கிறது. விற்பனையிலும் நல்ல எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. சாங்யாங் டிவோலி எஸ்யூவியின் அடிப்படையில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட இந்த எஸ்யூவி கார் டிசைன், வசதிகள், செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வு என நன்மதிப்பை பெற்றுள்ளது.

செயல்திறனில் மிரட்ட வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக்!

ந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி தற்போது பெட்ரோல், டீசல் எஞ்சின் மாடல்களில் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், பேட்டரியில் இயங்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியும் உருவாக்கப்பட்டு வருகிறது.

செயல்திறனில் மிரட்ட வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக்!

மஹிந்திரா எஸ்210 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த மாடலானது தற்போது சாலை சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் மின்சார மாடல் குறித்த சில விஷயங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

செயல்திறனில் மிரட்ட வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக்!

அதன்படி, மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் எலெக்ட்ரிக் மாடல் செயல்திறனில் அசத்தலாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. அண்மையில் அறிமுகமாகி ஹிட் அடித்துள்ள ஹூண்டாய் கோனா காரை நெருங்கும் அளவிலான செயல்திறனை இந்த கார் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செயல்திறனில் மிரட்ட வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக்!

ஹூண்டாய் கோனா காரில் 39.2 kW பேட்டரியும், மின்மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மின் மோட்டார் 134 பிஎச்பி பவரையும், 395 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இந்தநிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காரில் 40kW பேட்டரியும், மின் மோட்டாரும் இணைந்து 128 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

செயல்திறனில் மிரட்ட வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக்!

மேலும், ஹூண்டாய் கோனா காரின் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 452 கிமீ தூரம் பயணிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையில் 350 கிமீ தூரம் வரை சர்வசாதாரணமாக செல்வதாக உரிமையாளர்கள் தங்களது குறிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

செயல்திறனில் மிரட்ட வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக்!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் மின்சார மாடலின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, நடைமுறையில் 250 கிமீ தூரத்திற்கு குறையாத அளவு பயண தூரத்தை வழங்கும்.

செயல்திறனில் மிரட்ட வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக்!

ஹூண்டாய் கோனா எஸ்யூவியைவிட மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி கார் நிச்சயம் விலை குறைவாக இருக்கும் என்பதால், அதிக வரவேற்பை பெறும் வாய்ப்புகள் உள்ளன. விரைவில் வர இருக்கும் எம்ஜி இஇசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கும் போட்டியாக அமையும். வரும் 2021ம் ஆண்டு விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Autocarindia

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
According to a media report, Mahindra XUV300 EV is likely to come up with impressive performance figures and will compete with Hyundai Kona Electric.
Story first published: Tuesday, October 1, 2019, 15:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X