முதல் பந்திலேயே சிக்ஸர்.. மஹிந்திரா எக்ஸ்யூவி300 புயலில் சிக்கி சின்னாபின்னமாகும் போட்டி நிறுவனங்கள்

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி கார், முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

முதல் பந்திலேயே சிக்ஸர்.. மஹிந்திரா எக்ஸ்யூவி300 புயலில் சிக்கி சின்னாபின்னமாகும் போட்டி நிறுவனங்கள்

வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி (Mahindra XUV300 SUV), கடந்த பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. லான்ச் செய்யப்பட்டு 1 மாதம் மட்டுமே ஆகியுள்ள நிலையில், 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புக்கிங்குகளை மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி வாரி குவித்துள்ளது.

முதல் பந்திலேயே சிக்ஸர்.. மஹிந்திரா எக்ஸ்யூவி300 புயலில் சிக்கி சின்னாபின்னமாகும் போட்டி நிறுவனங்கள்

இவை அனைத்தும் உறுதி செய்யப்பட்ட புக்கிங்குகள் ஆகும். இதுதவிர 2.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர், மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி குறித்து டீலர்ஷிப்களில் விசாரித்துள்ளனர். இதுகுறித்து மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட்டின் ஆட்டோமோட்டிவ் டிவிஷன் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் வீஜே ராம் நாக்ரா கூறுகையில், ''நாங்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளோம்.

முதல் பந்திலேயே சிக்ஸர்.. மஹிந்திரா எக்ஸ்யூவி300 புயலில் சிக்கி சின்னாபின்னமாகும் போட்டி நிறுவனங்கள்

எக்ஸ்யூவி300 எஸ்யூவி காருக்கு கிடைத்துள்ள பெரும் வரவேற்பே இதற்கு காரணம். பலத்த போட்டி நிறைந்த ஒரு செக்மெண்ட்டில், அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாதத்திலேயே, 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புக்கிங்குகளை எக்ஸ்யூவி300 எஸ்யூவி குவித்துள்ளது. இதில் எங்களுக்கு ஊக்கம் அளிக்கும் மற்றொரு விஷயம் என்னவென்றால், 75 சதவீத புக்கிங்குகள் எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் டாப் எண்ட் வேரியண்ட்களுக்கு வந்திருப்பதுதான்'' என்றார்.

முதல் பந்திலேயே சிக்ஸர்.. மஹிந்திரா எக்ஸ்யூவி300 புயலில் சிக்கி சின்னாபின்னமாகும் போட்டி நிறுவனங்கள்

மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரானது பெட்ரோல் மற்றும் டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. இதன் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 110 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. அதே சமயம் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவர் மற்றும் 300 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வல்லமை வாய்ந்தது.

முதல் பந்திலேயே சிக்ஸர்.. மஹிந்திரா எக்ஸ்யூவி300 புயலில் சிக்கி சின்னாபின்னமாகும் போட்டி நிறுவனங்கள்

7.90 லட்ச ரூபாய் முதல் 12.14 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் பேஸ் பெட்ரோல் வேரியண்ட்டின் விலை 7.90 லட்ச ரூபாய். அதேசமயம் பேஸ் டீசல் வேரியண்ட்டின் விலை 8.50 லட்ச ரூபாய். இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

முதல் பந்திலேயே சிக்ஸர்.. மஹிந்திரா எக்ஸ்யூவி300 புயலில் சிக்கி சின்னாபின்னமாகும் போட்டி நிறுவனங்கள்

தற்போதைய நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் வெகு விரைவில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் ஏஎம்டி ஆப்ஷனை பெறவுள்ளன. எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரின் ஏஎம்டி வேரியண்ட்டை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளை மஹிந்திரா நிறுவனம் துரிதப்படுத்தியுள்ளது.

முதல் பந்திலேயே சிக்ஸர்.. மஹிந்திரா எக்ஸ்யூவி300 புயலில் சிக்கி சின்னாபின்னமாகும் போட்டி நிறுவனங்கள்

பெட்ரோல் 5 வேரியண்ட்கள், டீசல் 5 வேரியண்ட்கள் என மொத்தம் 10 வேரியண்ட்கள் மற்றும் 7 வண்ணங்களில், மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி கார் விற்பனை செய்யப்படுகிறது. மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் டாடா நெக்ஸான் உள்ளிட்ட கார்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி போட்டியிட்டு வருகிறது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra XUV300 SUV Bags 13,000 Bookings. Read in Tamil
Story first published: Friday, March 15, 2019, 20:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X