2020 மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் உட்புறம் பற்றிய தகவல்கள் முதன்முறையாக வெளிவந்தது...

2020ல் பிஎஸ்6 தரத்தில் மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி500 காரை அறிமுகப்படுத்தவுள்ளது. அதற்காக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்துப்பட்டு வரும் இந்த எக்ஸ்யூவி500 காரின் உட்புறங்கள் குறித்த தகவல்கள் சமீபத்திய சோதனை ஓட்ட புகைப்படங்களின் மூலம் முதன்முறையாக வெளிவந்துள்ளன.

இந்த புகைப்படங்களின் மூலம், பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்டுள்ள மஹிந்திராவின் இந்த எக்ஸ்யூவி காரின் உட்புறம் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது தெரிய வருகிறது. ஏனெனில் டேஸ்போர்ட் கூட முழுவதும் மறைக்கப்பட்டுள்ளது.

2020 மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் உட்புறம் பற்றிய தகவல்கள் முதன்முறையாக வெளிவந்தது...

இருப்பினும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் இன்போடெயின்மெண்ட் திரை இரண்டாக பிளவுப்பட்ட நிலையில் கொடுக்கப்பட்டுள்ளது தெரிகிறது. டிஎஃப்டி உடன் கூடிய டிஜிட்டல் திரையை இந்த இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

அதேபோல் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் 9 இன்ச்சில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு உடன் இணைக்கக்கூடிய விதத்தில் எதிர்பார்க்கலாம். இவற்றிற்கு கீழ்ஏ க்ளைமேட்டை மேனுவலாக கண்ட்ரோல் செய்யக்கூடிய கன்சோல் உள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரில் ஸ்போர்ட்டியான ஃபிளாட்-பாட்டம் ஸ்டேரிங் வீல் சில கண்ட்ரோல்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

2020 மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் உட்புறம் பற்றிய தகவல்கள் முதன்முறையாக வெளிவந்தது...

இந்த பிஎஸ்6 கார் இதற்கு முன்னதாக பலமுறை சோதனை ஓட்டங்களில் ஈடுப்பட்டுள்ளது. இவற்றில் இருந்து மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் முன்புறம் வித்தியாசமான தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இருப்பினும் முன்புற க்ரில் அமைப்பு மஹிந்திரா நிறுவனத்திற்கே உரிய ஸ்டைலில் தொடர்கிறது. க்ரில்லின் இரு முனைகளிலும் பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய எல்இடி ஹெட்லைட்ஸ் பொருத்தப்பட்டுள்ளன.

2020 மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் உட்புறம் பற்றிய தகவல்கள் முதன்முறையாக வெளிவந்தது...

இந்த காரின் பக்கவாட்டுகள் எக்ஸ்யூவி300 மற்றும் அல்டுராஸ் ஜி4 மாடல்களின் பக்கவாட்டை அப்படியே ஒத்துள்ளது. மிக பெரிய அளவில் சக்கரங்கள் மற்றும் பின்புற கதவுகள் போன்றவற்றையும் இந்த புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 கார் கொண்டுள்ளது. இந்த புதிய காரின் பின்புறம் தற்போதைய மாடலை விட நிறைய மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அதாவது டெயில்லைட்ஸ், பம்பர் மற்றும் பின்புற கதவு போன்றவற்றின் டிசைன்கள் முந்தைய மாடலில் இருந்து மாற்றப்பட்டுள்ளன.

2020 மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் உட்புறம் பற்றிய தகவல்கள் முதன்முறையாக வெளிவந்தது...

பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்ட 2.2 லிட்டர் டர்போ-டீசல் என்ஜினுடன் இந்த புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி கார் அறிமுகமாகவுள்ளது. இந்த என்ஜினின் அதிகப்பட்ச ஆற்றல் 180 பிஎச்பி பவராகும். மஹிந்திரா நிறுவனம், என்ஜினின் வெளியிடும் ஆற்றலை குறைத்து இந்த காரின் விலை குறைவான வேரியண்ட்டையும் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

2020 மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் உட்புறம் பற்றிய தகவல்கள் முதன்முறையாக வெளிவந்தது...

அதாவது இதன் என்ஜினின் வெளியிடும் ஆற்றல் 140 பிஎச்பி வரையில் குறைத்து விலை குறைவான வேரியண்ட்டாக அறிமுகமாகவுள்ளது. இந்த காரின் என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படவுள்ளது. விலை அதிகமான வேரியண்ட்டிற்கு மட்டும் மற்றொரு ட்ரான்ஸ்மிஷன் தேர்வாக 6-ஸ்பீடு டார்க்-கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

2020 மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் உட்புறம் பற்றிய தகவல்கள் முதன்முறையாக வெளிவந்தது...

மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் அறிமுகமாகவுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 கார், எம்ஜி ஹெக்டர் மற்றும் கியா செல்டோஸ் கார்களுடன் சந்தையில் போட்டியிட வேண்டும். இவை மட்டுமில்லாமல் விரைவில் அறிமுகமாகவுள்ள ஹூண்டாய் க்ரெட்டா, ஸ்கோடா காமிக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டி-ராக் போன்ற கார்களும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 காருடன் போட்டிக்கு வரவுள்ளன. தற்போதைய மாடலை விட அதிகமான விலையில் தான் இந்த புதிய எக்ஸ்யூவி500 கார் விற்பனையாகவுள்ளது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
New Mahindra XUV500 Interiors Spied For The First Time Ahead Of Launch: Spy Pics & Details
Story first published: Thursday, November 28, 2019, 18:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X