மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் டாப் வேரியண்ட்டுகள் திடீர் நீக்கம்!

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பெட்ரோல் மற்றும் டீசல் டாப் வேரியண்ட்டுகள் விற்பனையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டு இருக்கிறது. இதர வேரியண்ட்டுகளின் விலையும் சிறிதளவு உயர்த்தப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் டாப் வேரியண்ட்டுகள் திடீர் நீக்கம்!

மஹிந்திரா நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான எஸ்யூவி மாடல் எக்ஸ்யூவி500 கார். இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மாடலில் 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 139 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைத்து வந்தது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் டாப் வேரியண்ட்டுகள் திடீர் நீக்கம்!

டீசல் மாடலில் இருக்கும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் 153 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. டாப் வேரியண்ட்டில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் டாப் வேரியண்ட்டுகள் திடீர் நீக்கம்!

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் ஏராளமான வசதிகளும், தொழில்நுட்ப அம்சங்களும் வழங்கப்படுகின்றன. இதன்படி, பெட்ரோல் மாடல் ஜி என்ற ஒரே வேரியண்ட்டிலும், டீசல் மாடலானது கியர்பாக்ஸ் தேர்வு மற்றும் வசதிகளை பொறுத்து 12 வேரியண்ட்டுகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் டாப் வேரியண்ட்டுகள் திடீர் நீக்கம்!

இந்த நிலையில், பெட்ரோல் மாடலும், டீசல் மாடலின் ஆட்டோமேட்டிக் - ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்ட வேரியண்ட்டும் விற்பனையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. இனி டீசல் எஞ்சின் தேர்வில் மட்டுமே மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி கிடைக்கும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் டாப் வேரியண்ட்டுகள் திடீர் நீக்கம்!

அத்துடன், டீசல் மாடலானது இனி மேனுவல் கியர்பாக்ஸ் - ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் தேர்வில் மட்டுமே கிடைக்கும் குறிப்பிடத்தக்கது. இனி டீசல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் 2 வீல் டிரைவ் சிஸ்டம் தேர்வில் மட்டுமே கிடைக்கும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் டாப் வேரியண்ட்டுகள் திடீர் நீக்கம்!

மஹிந்திரா டீசல் மாடலின் பேஸ் வேரியண்ட்டான W3 வேரியண்ட் ரூ.12.31 லட்சம் முதல் டாப் வேரியண்ட் W11 O AWD வேரியண்ட் ரூ.18.51 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இதில், பேஸ் வேரியண்ட்டின் விலை ரூ.8,000 வரையிலும், இதர வேரியண்ட்டுகளின் விலை ரூ.1,000 முதல் ரூ.2,000 வரையிலும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் டாப் வேரியண்ட்டுகள் திடீர் நீக்கம்!

அடுத்த ஆண்டு துவக்கத்தில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் தேர்வில் மஹிந்திரா எக்ஸ்யூவி500 விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. எனவே, விற்பனையில் குறைவாக இருக்கும் டாப் வேரியண்ட்டுகளை மஹிந்திரா நீக்கி இருக்கிறது. அத்துடன், இருப்பில் உள்ள கார்களை விரைவாக விற்பனை செய்யும் நோக்கத்திலும் மும்முரம் காட்டி வருகிறது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra has discontinued the XUV500 petrol and diesel All-Wheel-Drive (AWD) automatic variants. The petrol engine option has been removed from the model altogether.
Story first published: Friday, September 20, 2019, 14:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X