இந்தியாவை கலக்க வரும் 2 மலேசிய கார்களின் விலை இதுதான்... சென்னையில் ஆட்டம் ஆரம்பமானது...

மலேசியாவை சேர்ந்த முன்னணி நிறுவனத்தின் 2 புதிய கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவை கலக்க வரும் 2 மலேசிய கார்களின் விலை இதுதான்... சென்னையில் ஆட்டம் ஆரம்பமானது...

மலேசியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனம் பிரோடுயா (Perodua). கடந்த 1992ம் ஆண்டு முதல் பிரோடுயா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் முதல் காரான கான்சில் (Kancil), கடந்த 1994ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் பிரோடுயா நிறுவனத்தின் கார்கள் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்தியாவை கலக்க வரும் 2 மலேசிய கார்களின் விலை இதுதான்... சென்னையில் ஆட்டம் ஆரம்பமானது...

ஆசிய கண்டத்தில் உள்ள மார்க்கெட்களை பொறுத்தவரை, இலங்கை, நேபாளம், சிங்கப்பூர், இந்தோனேஷியா, புருனே மற்றும் மொரிஷியல் உள்ளிட்ட நாடுகளுக்கு, பிரோடுயா நிறுவனத்தின் கார்கள் ஏற்றுமதியாகி கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் இந்திய மார்க்கெட்டிலும் தனது கார்களை அறிமுகம் செய்ய பிரோடுயா நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவை கலக்க வரும் 2 மலேசிய கார்களின் விலை இதுதான்... சென்னையில் ஆட்டம் ஆரம்பமானது...

தமிழக தலைநகர் சென்னையில் தற்போது ''இன்டர்நேஷனல் இன்ஜினியரிங் சோர்ஷிங் ஷோ'' (International Engineering Sourcing Show-IESS) நடைபெற்று வருகிறது. இதில், பிரோடுயா நிறுவனம் தனது மைவி (Myvi) மற்றும் பீஸா (Bezza) ஆகிய 2 கார்களை காட்சிக்கு வைத்துள்ளது. இவ்விரு கார்களைதான் இந்திய மார்க்கெட்டில் களமிறக்க பிரோடுயா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

இந்தியாவை கலக்க வரும் 2 மலேசிய கார்களின் விலை இதுதான்... சென்னையில் ஆட்டம் ஆரம்பமானது...

மைவி மற்றும் பீஸா ஆகிய 2 கார்களும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இதில், பீஸா காரானது கடந்த 2016ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது டாடா டிகோரை போன்று ஏ-செக்மெண்ட் செடான் கார் ஆகும். பிரோடுயா நிறுவனத்தின் ஆக்ஸியா பிளாட்பார்மை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை கலக்க வரும் 2 மலேசிய கார்களின் விலை இதுதான்... சென்னையில் ஆட்டம் ஆரம்பமானது...

மலேசிய மார்க்கெட்டில் 2 இன்ஜின் ஆப்ஷன்களுடன் பீஸா கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் முதலாவது 1KR-VE 1.0-litre VVT-i பெட்ரோல் இன்ஜின். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 67 எச்பி பவர் மற்றும் 91 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இரண்டாவது 1NR-VE 1.3-litre Dual VVT-i பெட்ரோல் இன்ஜின். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 94 எச்பி பவர் மற்றும் 121 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

இந்தியாவை கலக்க வரும் 2 மலேசிய கார்களின் விலை இதுதான்... சென்னையில் ஆட்டம் ஆரம்பமானது...

4 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் அல்லது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்திய மதிப்பின்படி, மலேசிய மார்க்கெட்டில் பீஸா கார் 5.82 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பீஸா காரின் நீளம் 4,150 மிமீ, அகலம் 1,620 மிமீ, உயரம் 1,510 மிமீ. இதன் வீல் பேஸ் 2,455 மிமீ.

இந்தியாவை கலக்க வரும் 2 மலேசிய கார்களின் விலை இதுதான்... சென்னையில் ஆட்டம் ஆரம்பமானது...

ஆனால் இந்திய மார்க்கெட்டில் வெற்றி பெற வேண்டும் என்றால், இதன் நீளம் 4,000 மிமீக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதிகப்படியான வரி விதிக்கப்படும். இதன்மூலம் போட்டி நிறுவனங்களை விட இதன் விலை அதிகரித்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்திய மார்க்கெட்டை பொறுத்தவரை பட்ஜெட் விலையில் கார் தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள்தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை கலக்க வரும் 2 மலேசிய கார்களின் விலை இதுதான்... சென்னையில் ஆட்டம் ஆரம்பமானது...

பிரோடுயா நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கும் மற்றொரு கார் மைவி. இது ஹூண்டாய் எலைட் ஐ20 காரை போன்று பி-செக்மெண்ட் ஹேட்ச்பேக் கார் ஆகும். இதில், பீஸா காரின் 1.3 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர 2NR-VE 1.5-litre Dual VVT-i பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் (76 kW/137 Nm) உள்ளது.

இந்தியாவை கலக்க வரும் 2 மலேசிய கார்களின் விலை இதுதான்... சென்னையில் ஆட்டம் ஆரம்பமானது...

பிரோடுயா மைவி காரின் நீளம் 3,895 மிமீ, அகலம் 1,735 மிமீ, உயரம் 1,515 மிமீ. இதன் வீல் பேஸ் 2,500 மிமீ. இந்திய மதிப்பின்படி, மலேசிய மார்க்கெட்டில் மைவி காரானது 7.22 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Source: Careta

Most Read Articles
English summary
Malaysian Car Manufacturer Perodua Showcased Myvi And Bezza In Chennai. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X