பிஎம்டபிள்யூ, பென்ஸ் காருக்கு இணையான வேகத்தைப் பெற்ற ஆல்டோ - வீடியோ...!

என்ட்ரி லெவல் ஹேட்ச்போக் காரான ஆல்டோ800 காரை இளைஞர் ஒருவர் பெரும் பொருட்செலவில் மாடிஃபை செய்துள்ளார். இதனால், அந்த கார் அதிக சக்தி வாய்ந்த காராக மாறியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பிஎம்டபிள்யூ, பென்ஸ் காருக்கு இணையான வேகத்தைப் பெற்ற ஆல்டோ - வீடியோ...!

மாருதி நிறுவனத்தின் என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் ரகமான ஆல்டோ 800 மாடல் காரை இளைஞர் ஒருவர் பெரும் பொருட்செலவில் மாடிஃபை செய்துள்ளார். இதற்காக அந்த இளைஞர், புதிய ஆல்டோ காரின் எக்ஸ்-ஷோரூம் விலைக்கு ஈடான தொகையைக் கொடுத்து ஆல்டோ800 காரை மாற்றம் செய்துள்ளார்.

பிஎம்டபிள்யூ, பென்ஸ் காருக்கு இணையான வேகத்தைப் பெற்ற ஆல்டோ - வீடியோ...!

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றான ஆல்டோ 800 காரை விற்பனையில் இருந்து விலக்க இருப்பதாக மாருதி சுஸுகி நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது. அதற்கேற்ப கடந்த வாரத்தில் ஆல்டோவின் உற்பத்தியை நிறுத்தியது. இதற்கு, நடப்பாண்டின் அக்டோபர் மாதத்தில் இருந்து புதிதாக அமலுக்கு வரவுள்ள கிராஸ் டெஸ்ட் விதியே காரணமாக கூறப்படுகிறது.

பிஎம்டபிள்யூ, பென்ஸ் காருக்கு இணையான வேகத்தைப் பெற்ற ஆல்டோ - வீடியோ...!

புதிதாக அமலுக்கு வரும் இந்த கிராஸ் டெஸ்டில் சிறப்பான முடிவுகளை வழங்கும் கார்கள் மட்டும் தான் விற்பனைக்கு அங்கீகரிக்கப்படும். இதன்காரணமாக, விற்பனையில் சிறப்பாக விளங்கி வரும் சில முக்கிய மாடல்களை மாருதி சுஸுகி நிறுவனம் ஏற்கனவே சந்தையில் இருந்து விலக்கிக் கொண்டு வருகிறது. அவ்வாறு, அதிகம் விற்பனையாகும் ஆம்னி வேனை விற்பனையில் விலக்குவதாக மாருதி சஸுகி நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. இதைத்தொடர்ந்து, ஆல்டோவையும் விற்பனையில் இருந்து விலக்க இருப்பதாக அந்த நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.

பிஎம்டபிள்யூ, பென்ஸ் காருக்கு இணையான வேகத்தைப் பெற்ற ஆல்டோ - வீடியோ...!

மாருதி சுஸுகி நிறுவனத்தின் மூலம் வெளிவரும் தயாரிப்புகளிலேயே ஆல்டோ தான் இந்தியர்கள் மத்தியில் பெரும் பிரபலமான காராக இருந்து வருகிறது. இந்நிலையில், மாருதி சுஸுகி ஆல்டோ800 மாடலை விலக்கிக்கொள்வதாக அந்த நிறுவனம் அறிவித்தது, அதன் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிஎம்டபிள்யூ, பென்ஸ் காருக்கு இணையான வேகத்தைப் பெற்ற ஆல்டோ - வீடியோ...!

இந்த சூழ்நிலையில் 1.0 லிட்டர் எஞ்ஜின் திறனுடன்கூடிய அடுத்த தலைமுறை ஆல்ட்டோ காரை களமிறக்கும் பணியில் மாருதி சுஸுகி நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2018ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ப்யூச்சர் எஸ் கான்செப்ட் அடிப்படையில்தான், அடுத்த தலைமுறை ஆல்ட்டோ உருவாக உள்ளது. இந்த புதிய மாடல் வருகின்ற ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎம்டபிள்யூ, பென்ஸ் காருக்கு இணையான வேகத்தைப் பெற்ற ஆல்டோ - வீடியோ...!

இந்நிலையில், மாருதி சுஸுகி ஆல்டோ800 காரை ரூ. 3.5 லட்சம் செலவு செய்து இளைஞர் ஒருவர் மாடிஃபை செய்துள்ளார். இந்த மாடிஃபை மூலம் அந்த கார் மணிக்கு 200 கிமீ வேகத்தில் செல்லும் திறனைப் பெற்றுள்ளது. மேலும், இது 0-100 கிமீ வேகத்தை 8.5 செகண்டில் தொட்டுவிடும். இதுகுறித்து வீடியோ ஒன்றை ரஷ்லேன் என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ, பென்ஸ் காருக்கு இணையான வேகத்தைப் பெற்ற ஆல்டோ - வீடியோ...!

ஆல்டோ 800 காரை மாடிஃபை செய்யும் பணியினை கொல்கத்தாவைச் சேர்ந்த எஸ்ஏ டிசைன்ஸ் எனப்படும் நிறுவனம் செய்துள்ளது. இந்த நிறுவனம், ஆல்டோவின் எஞ்ஜின் மற்றும் இன்டீரியர் டிசைன் ஆகியவற்றை கணிசமாக மாற்றியமைத்துள்ளது. இதனால் அந்த ஆல்டோ800, சிறிய தோற்றத்தில் இருக்கும் ஸ்போர்ட் காரைப் போன்று காட்சியளிக்கிறது.

பிஎம்டபிள்யூ, பென்ஸ் காருக்கு இணையான வேகத்தைப் பெற்ற ஆல்டோ - வீடியோ...!

அவ்வாறு, அந்த என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் காரில், சில தொழில்நுட்ப வசதிகளும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், புரஜெக்டருடன் கூடிய முகப்பு விளக்கு, எல்இடி பனி விளக்கு, பிளாக்கவுட் பின்பக்க விளக்கு, ரூஃப் மவுண்டட் ஸ்பாய்லர் மற்றும் பிளாக் ரேஸிங் ஸ்டிரைப்ஸ் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து, ஸ்போர்ட் மோமோ ஸ்டியரிங்க வீல், புதிய கியர் க்னாப், பெடல் கவர், 12 இன்ச் கொண்ட 3,800 வாட் உடைய சப் ஊஃபருடன் சோனி ஆடியோ சிஸ்டம், ஆர் டைப் டாக்கோமீட்டர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இந்த புதிய மாற்றங்களால் இந்த ஆல்டோ 800 பிரம்மிப்பான வகையில் காட்சியளிக்கிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Maruti Alto 800 Modified At A Cost Of Rs 3.5 Lakhs. Read In Tamil.
Story first published: Monday, April 8, 2019, 11:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X