புதிய வேரியண்ட் ஆல்டோவை அறிமுகம் செய்த மாருதி சுஸுகி... ஸ்பெஷல் தகவல்!

மாருதி சுஸுகி நிறுவனம், அதன் ஆல்டோ மாடலில் சிஎன்ஜி வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

புதிய வேரியண்ட் ஆல்டோவை அறிமுகம் செய்த மாருதி சுஸுகி... ஸ்பெஷல் தகவல்!

சுற்றுப்புற சுகாதார சீர்கேட்டிற்கு, எரிபொருள் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையே முக்கிய காரணியாக இருக்கின்றன. வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையில், பல்வேறு நச்சுத் தன்மை அடங்கிய அமிலங்கள் இருப்பதால், இது மனிதர்களுக்கும், உயரினங்களுக்கும் பல்வேறு தீங்கினை விளைவிக்கின்றன.

புதிய வேரியண்ட் ஆல்டோவை அறிமுகம் செய்த மாருதி சுஸுகி... ஸ்பெஷல் தகவல்!

முக்கியமாக, எரிபொருள் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, காற்றுடன் கலந்து மாசினை உண்டாக்குவதுடன் பல்வேறு புதிய புதிய வியாதிகளையும் உண்டாக்கி வருகின்றது. இத்துடன், இது புவி வெப்ப மயமாதலுக்கு முக்கிய காரணியாக அமைகின்றது. இதுவே, தற்போது கத்திரி வெயில் காலம் முடிவடைந்தும், சென்னை போன்ற தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்க காரணமாக இருக்கின்றது.

புதிய வேரியண்ட் ஆல்டோவை அறிமுகம் செய்த மாருதி சுஸுகி... ஸ்பெஷல் தகவல்!

இதுபோன்று பல்வேறு பிரச்னைகளைத் தவிர்க்கும் விதமாக, எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின்வாகனங்கள் மற்றும் குறைவான மாசை ஏற்படுத்தும் சிஎன்ஜி மற்றும் எல்பிஜி போன்ற வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

புதிய வேரியண்ட் ஆல்டோவை அறிமுகம் செய்த மாருதி சுஸுகி... ஸ்பெஷல் தகவல்!

அந்தவகையில், வாகன தாயரிப்பு நிறுவனங்களும் அண்மைக் காலங்களாக மின் வாகனங்கள், சிஎன்ஜி மற்றும் எல்பிஜி வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கி வருகின்றன.

இந்நிலையில், மாருதி சுஸுகி நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த ஆல்டோ 800 மாடலில், சிஎன்ஜி வேரியண்டை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில், இந்த வேரியண்டை அந்த நிறுவனம் களமிறக்கியுள்ளது.

புதிய வேரியண்ட் ஆல்டோவை அறிமுகம் செய்த மாருதி சுஸுகி... ஸ்பெஷல் தகவல்!

முன்னதாக இந்த நிறுவனம், பிஎஸ்6 தரத்திலான ஆல்டோ 800 மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. புதிய ஆல்டோ சிஎன்ஜி வேரியண்ட், இரண்டு ட்ரிம்களில் கிடைக்கின்றது. அவ்வாறு, எல்எக்ஐ மற்றும் எல்எக்ஸ்ஐ (ஓ) ஆகிய வேரியண்ட்களில் கிடைக்கின்றது.

புதிய வேரியண்ட் ஆல்டோவை அறிமுகம் செய்த மாருதி சுஸுகி... ஸ்பெஷல் தகவல்!

இதில், எல்எக்ஐ வேரியண்ட் ரூ. 4.11 லட்சம் என்ற விலையிலும், எல்எக்ஸ்ஐ (ஓ) ரூ. 4.14 லட்சம் என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும். அதேபோன்று, இது முந்தைய மாடலைக் காட்டிலும் ரூ. 60 ஆயிரம் அதிகமாக இருக்கின்றது.

புதிய வேரியண்ட் ஆல்டோவை அறிமுகம் செய்த மாருதி சுஸுகி... ஸ்பெஷல் தகவல்!

இந்த புதிய ஆல்டோ 800 சிஎன்ஜி வேரியண்டில் 796 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 41 எச்பி பவரையும், 60 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. அதேபோன்று, ஆல்டோ கே10 வேரியண்டில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் நிறுவப்பட்டுள்ளது.

புதிய வேரியண்ட் ஆல்டோவை அறிமுகம் செய்த மாருதி சுஸுகி... ஸ்பெஷல் தகவல்!

இந்த மாடலைத்தான் தற்போது, மாருதி சுஸுகி நிறுவனம் புதிய க்ராஷ் டெஸ்ட் விதி மற்றும் பிஎஸ்-6 தரத்திற்கு ஏற்ப அப்டேட்டிற்கு உள்ளாக்கி அறிமுகம் செய்துள்ளது. இது, வருகின்ற அக்டோபர் மாதம் அறிமுகமாக இருக்கின்ற, புதிய பாதுகாப்பு விதிகளை மாருதி ஆல்டோ கார் சந்திக்க உதவும்.

Most Read Articles
English summary
Maruti Alto CNG Launched. Read In Tamil.
Story first published: Saturday, June 15, 2019, 12:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X