விற்பனையில் புதிய சாதனை படைத்த மாருதி பலேனோ கார்!

விற்பனையில் மாருதி பலேனோ கார் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

விற்பனையில் புதிய சாதனை படைத்த மாருதி பலேனோ கார்!

மாருதி பலேனோ கார் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அன்றிலிருந்து இந்தியாவின் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது. விற்பனையில் தொடர்ந்து முன்னிலையும் வகித்து வருகிறது.

விற்பனையில் புதிய சாதனை படைத்த மாருதி பலேனோ கார்!

இந்த நிலையில், அறிமுகம் செய்யப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மாருதி பலேனோ காரின் விற்பனை புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. ஆம், இதுவரை 6.5 லட்சம் மாருதி பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

விற்பனையில் புதிய சாதனை படைத்த மாருதி பலேனோ கார்!

அறிமுகம் செய்யப்பட்டு முதல் ஓர் ஆண்டில் ஒரு லட்சம் கார்கள் விற்பனையானது. ஆனால், அடுத்த 8 மாதங்களில் அடுத்த ஒரு லட்சம் கார்களும், அடுத்த 5 மாதங்களில் ஒரு லட்சம் கார்களும் என்று மாருதி பலேனோ காரின் விற்பனை தொடர்ந்து வேகமெடுத்தது. மாதத்திற்கு 10,000 யூனிட்டுகள் என்ற விற்பனை அளவுடன் இந்த சாதனையை மாருதி பலேனோ கார் பெற்றிருக்கிறது.

விற்பனையில் புதிய சாதனை படைத்த மாருதி பலேனோ கார்!

இந்த ஆண்டு துவக்கத்தில் மாருதி பலேனோ கார் மேம்படுத்தப்பட்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. இதனால், தொடர்ந்து வாடிக்கையாளர்களை வசீகரித்து வருகிறது. இந்த காரின் தனித்துவமான டிசைன், தரமான இன்டீரியர் அம்சங்கள், சரியான விலை வாடிக்கையாளர்களை வசீகரித்துள்ளது.

விற்பனையில் புதிய சாதனை படைத்த மாருதி பலேனோ கார்!

மாருதி பலேனோ காரில் 1.2 லிட்டர் டியூவல்ஜெட் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது. அத்துடன், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும் பயன்படுத்தப்படுகிறது. தவிரவும், 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. விரைவில் டீசல் மாடல் கைவிடப்பட இருக்கிறது.

விற்பனையில் புதிய சாதனை படைத்த மாருதி பலேனோ கார்!

தற்போது மாருதி பலேனோ கார் ரூ.5.58 லட்சம் முதல் ரூ.8.98 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. மாருதி நெக்ஸா பிரிமீயம் கார் ஷோரூம்கள் வாயிலாக கிடைக்கிறது.

விற்பனையில் புதிய சாதனை படைத்த மாருதி பலேனோ கார்!

இதன் ரீபேட்ஜ் மாடல் டொயோட்டா பிராண்டில் க்ளான்ஸா என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. ஹூண்டாய் எலீட் ஐ20 கார் நேரடி போட்டியாக உள்ளது. ஹோண்டா ஜாஸ் காரும் இதே ரகத்திலான மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Maruti Suzuki Baleno premium hatchback has crossed the 6.5 lakh sales mark within 4 years since its launch.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X